என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

நேற்று அறிமுகமான ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி காரின் அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. இதனால், நட்ப்பாண்டு இக்காரை புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

ஆடி நிறுவனம் நேற்றைய (நவம்பர் 23) தினம் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் (புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்) க்யூ5 சொகுசு எஸ்யூவி-யை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தைத் தொடர்ந்து நேற்றைய தினமே புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கின.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

இந்நிலையில், நடப்பாண்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து யூனிட் க்யூ5 சொகுசு எஸ்யூவிக்களும் தற்போது விற்று தீர்ந்துவிட்டதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆமாங்க, 2021ம் ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் விற்பனைக்கு வந்த ஒரே நாளில் விற்று தீர்ந்திருக்கின்றன.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

இதனால், இந்த ஆண்டு இக்காரை புக் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த அமோக வரவேற்பின் வாயிலாக நிறுவனத்தின் ஆடம்பர தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவவைத உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி இரு விதமான ட்ரிம்கள் மற்றும் ஒற்றை எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

ஒட்டுமொத்தமாக 100 யூனிட்டுகளை நிறுவனம் நடப்பாண்டிற்காக ஒதுக்கியிருக்கின்றது. இவற்றில் ஒற்றை யூனிட்டைக் கூட விட்டு வைக்காமல் அனைத்து யூனிட்டுகளையும் இந்தியர்கள் தற்போது புக் செய்திருக்கின்றனர். ப்ரீமியம் ப்ளஸ் (Premium Plus) மற்றும் டெக்னாலஜி (Technology) என இரு விதமான ட்ரிம்களில் ஆடி க்யூ5 எஸ்யூவி சொகுசு கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

2 லட்ச ரூபாய் முன் தொகையில் இக்காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டன. புதிய ஆடி க்யூ5 எஸ்யூவியின் பிரீமியம் ப்ளஸ் ட்ரிம்மிற்கு ரூ. 58.93 லட்சம் என்ற விலையும், டெக்னாலஜி ட்ரிம்மிற்கு 63.77 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகேடி வாயிலாக இக்கார் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே மிக அதிக விலையில் இக்கார் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

ஆடி க்யூ5 எஸ்யூவில் புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செங்குத்தாக நிற்கும் ஸ்லேட்டுகள் போன்ற தோற்றம் கொண்ட ஒற்றை ஃப்ரேம் க்ரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 19 இன்ச் அளவுள்ள ஸ்போக் அலாய் வீல்கள், புதிய தோற்றத்திலான வால்பகுதி எல்இடி மின் விளக்குகள், குரோம் இன்செர்டுகள் ஆகியவை புதிய அம்சங்களாக ஆடி க்யூ5 இல் காட்சியளிக்கின்றன.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

இவற்றால் காரின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் பின் பகுதி ஆகிய புதிய தோற்றத்திற்கு முன்னேறியிருக்கின்றது. தொடர்ந்து, புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பொத்தான் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய முன்பக்க இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், 40:20:40 அளவுகளிலான பின் பக்க இருக்கைகள் ஆகியவையும் க்யூ5 சொகுசு காரில் இடம் பெற்றிருக்கின்றன.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

மேலும், 30 வண்ண ஆம்பிசியன்ட் மின் விளக்கு, மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 19 ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுப்சென் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 2.0 லிட்டர் 45 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

இத்துடன், இந்த எஞ்ஜினில் கூடுதல் சிறப்பு வசதியாக 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் பிரேக் ஆற்றல் மீட்பு (brake energy recuperation) சேர்க்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். டிரான்ஸ்மிஷன் வசதிக்காக 7 ஸ்பீடு எஸ்-ட்ரானிக் தானியங்கி ட்யூவல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது.

என்னங்க இப்படி பண்ணீட்டாங்க! நேத்து அறிமுகமான Audi Q5 இப்போ விற்பனைக்கு இல்ல! இதுக்கு நம்ம ஆளுங்கதான் காரணம்!

இவற்றுடன், நிறுவனத்தின் குவாட்ரா அனைத்து வீல் இயக்கம் சிஸ்டம் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது. ஆடியின் இப்புதிய சொகுசு கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3), வால்வோ எக்ஸ்சி 60 (Volvo XC60) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC) ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Facelift audi q5 luxury suv sold out for 2021
Story first published: Wednesday, November 24, 2021, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X