ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

புதிய 296 ஜிடிபி சூப்பர் காரை பற்றிய விபரங்களை படங்களுடன் ஃபெராரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

புதிய ஃபெராரி 296 ஜிடிபி சூப்பர்காரின் சிறப்பம்சமே அதன் என்ஜின் அமைப்பு தான். இந்த காரில் தான் முதன்முறையாக வி6 ஹைப்ரீட் என்ஜினை ஃபெராரி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

ஒட்டு மொத்தத்தில் இது ஃபெராரியின் மூன்றாவது ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமும். முதல் இரு இடங்களில் எஸ்.எஃப்90 அற்றும் லா ஃபெராரி கார்கள் உள்ளன. இந்த வி6 என்ஜின் அதிகப்பட்சமாக 654 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 122 கிலோவாட்ஸ் வரையில் வழங்கக்கூடியதாக உள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த வி6 ஹைப்ரீட் என்ஜினின் மூலம் 8,000 ஆர்பிஎம்-இல் 819 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 740 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும்.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

வெறும் எலக்ட்ரிக் மோடில் மட்டுமே இந்த ஹைப்ரீட் காரை 25 கிமீ தூரத்திற்கு இயக்கி செல்லலாம். இதன் என்ஜின் அமைப்புடன் 8-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ், எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் உடன் வழங்கப்பட்டுள்ளது.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

மேலும் என்ஜினையும் கியர்பாக்ஸையும் இணைக்கும் இடத்தில் எம்ஜியு-கே உள்ளது. இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பை ஃபெராரி ரோமா, போர்டோஃபினோ, எம் எஸ்.எஃப்90 ஸ்ட்ராடேல் மற்றும் எஸ்.எஃப்90 ஸ்பைடர் கார்களும் பெறுகின்றன.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

இந்த தொழிற்நுட்பங்களின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை புதிய ஃபெராரி 296 ஜிடிபி காரில் வெறும் 2.9 வினாடிகளிலும், 200kmph வேகத்தை 7.3 வினாடிகளிலும் எட்டிவிட முடியுமாம். இட்ரைவ், ஹைப்ரீட், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் குவாலிட்டி என நான்கு விதமான ட்ரைவிங் மோட்கள் இந்த சூப்பர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

இவற்றை ஸ்டேரிங் சக்கரத்திற்கு அருகே வழங்கப்பட்டுள்ள ‘இமானெட்டினோ' ரோட்டரி டயல் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். நான்கு ட்ரைவிங் மோட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான எலக்ட்ரிக் மோட்டார் ஈடுப்பாடு மற்றும் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் செயல்பாட்டை வழங்கக்கூடியவை.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

296 ஜிடிபி காரில் 6 சென்சார்களுடன் எவோ அமைப்பு என புதிய பிரேக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஃபெராரியின் முதல் மிட்-என்ஜின் உடன் இரு இருக்கைகளை மட்டுமே கொண்ட பெர்லினெட்டா வகையை சேர்ந்த காரான 296 ஜிடிபி, ஃபெராரி எஃப்8 ட்ரைபுடோ உடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபெராரியின் 3வது ப்ளக்-இன் ஹைப்ரீட் கார், 296 ஜிடிபி வெளியீடு!! முதல் வி6 ஹைப்ரீட் சூப்பர் கார்!

இந்திய சந்தைக்கென ஃபெராரி நிறுவனத்திடம் தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் இந்த நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் முன்பதிவுகளை ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari globally revealed the New 296 GTB. No plans for Indian Market. Read all details in Tamil.
Story first published: Saturday, June 26, 2021, 7:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X