ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

மோட்டார்சைக்கிளில் செல்லும் பலருக்கும் சொந்தமாக கார் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தொடர்ந்து கார் அறிமுகங்கள் தொடர்பான அப்டேட்களை கவனித்து கொண்டிருப்பவர் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் சிலருக்கு தங்களது தொழிலை கவனிக்கவே போதிய நேரம் இருக்காது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

அத்தகையவர்களுக்கு தற்சமயம் சந்தையில் பிரபலமாக இருக்கும் கார் எது? மிக சமீபத்தில் அறிமுகமான கார்கள் எவை? நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற கார்கள் எவை? என்பதில் சந்தேகமும், குழப்பமும் இருக்கலாம். அத்தகையவர்களுக்காகவே ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் ஆற்றல்மிக்க டாப்-5 கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.24- 8.45 லட்சம்)

முந்தைய கிராண்ட் ஐ10 மாடலின் அப்கிரேட் வெர்சனாக அறிமுகமானது தான், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இந்த ஹூண்டாய் காரின் சிறப்பம்சமே அதன் ஆற்றல்மிக்க என்ஜினே ஆகும். ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் சற்று ஆற்றல் குறைக்கப்பட்டு கிராண்ட் ஐ10 நியோஸில் வழங்கப்படுகிறது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

இருப்பினும் இதனால் காரின் இயக்கத்தில் பெரிய அளவில் எந்தவொரு வித்தியாசமும் தெரிவதில்லை. ஆற்றல்மிக்கதாக விளங்கும் இந்த 1.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

டாடா நெக்ஸான் (ரூ.7.20 - 13.25 லட்சம்)

காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்துவரும் மாடல்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் என்ற மிக பெரிய அணுகூலத்துடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நெக்ஸான், டாடா தயாரிப்பு என்பதால் பயணிகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

அதேநேரம் சந்தையில் ஆற்றல்மிக்க காராகவும், நெக்ஸான் விளங்குகிறது. நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இரு என்ஜின்களுடனும் வழங்கப்படுகின்றன.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

கியா சொனெட் (ரூ.6.79- 13.36 லட்சம்)

டாடா நெக்ஸானை போன்று காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் நிலைநிறுத்தப்படும் மாடல் தான் கியா சொனெட் ஆகும். தென்கொரிய கியா நிறுவனம் இந்திய சந்தையில் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய கார் சொனெட் ஆகும்.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

கியா செல்டோஸ் எஸ்யூவி காரை போல் ஆரம்பத்திலேயே கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெற்ற சொனெட்டில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்ட் பெட்ரோல் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி (அ) 7-ஸ்பீடு டிசிடி உள்பட மூன்று என்ஜின் தேர்வுகள் மற்றும் 5 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் ஆற்றல்மிக்க என்ஜினாக விளங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி (ரூ.9.99 லட்சம்)

இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி, வேகமான, ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் முந்தைய 1.3 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜினிற்கு மாற்றாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் யூனிட்டை போலோ ஜிடி காரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-இல் 110 பிஎச்பி மற்றும் 1750 ஆர்பிஎம்-இல் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஆனால் முன்பு போலோ ஜிடி காரில் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

ஹூண்டாய் வெர்னா (ரூ.9.20- 15.26 லட்சம்)

எஸ்யூவி பிரிவிலும், ஹேட்ச்பேக் பிரிவிலும் ஆற்றல்மிக்கதாக விளங்கும் கார்களை பற்றி இதுவரையில் பார்த்தோம். கடைசியாக செடானில் ஒன்றாக ஹூண்டாய் மோட்டார்ஸின் வெர்னா மாடலை பார்த்துவிடுவோம். வெர்னாவிற்கும் ஹோண்டாவின் சிட்டி செடான் காருக்கும் இடையே நீண்ட மாதங்களாக விற்பனையில் போட்டி நிலவி வருகிறது.

ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா? சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்!!

பிரபலமான செடான் காராக ஹோண்டா சிட்டி விளங்கினாலும், ஒரு சில விஷயங்களில் வெர்னா சிட்டியை முந்திவிடுகிறது. குறிப்பாக, என்ஜின் அமைப்பு. வெர்னாவில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆற்றல்மிக்கதாக கார் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 5 Most Powerful Cars You Can Buy Under Rs 15 Lakh in India. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X