Just In
- 1 hr ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 8 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 10 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 13 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
2021 ஃபோர்டு அஸ்பியர் சிஎன்ஜி கார் ஒன்று சென்னையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சப்-4 மீட்டர் செடான் பிரிவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துவரும் கார் மாடல் அஸ்பியர். ஆனால் பிரிவில் உள்ள மற்ற கார்களை போல் இந்த செடான் கார் ஆட்டோமேட்டிக் தேர்வை கொண்டில்லாததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமலே உள்ளது.

இந்த நிலையில் அஸ்பியரில் சிஎன்ஜி தேர்வை கொண்டுவர ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பது இந்த சோதனை ஓட்டத்தின் போது நம்மால் அறிய முடிகிறது. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை காரின் பின்பக்கத்தில் சிஎன்ஜி சோதனை தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலைக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களின் மூலம் அஸ்பியர் காரின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

அஸ்பியரில் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகப்படுத்தப்படுவது இது முதன்முறை அல்ல. ஏனெனில் அஸ்பியர் சிஎன்ஜி கார்களையும் ஃபோர்டு நிறுவனம் இதற்கு முன்பு இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்படாததால் இதன் விற்பனை கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்டது.

சிஎன்ஜி கார்கள் பொதுவாகவே மைலேஜ் நன்றாக கொடுக்கக்கூடியவை என்பதால் டாக்ஸி பயன்பாட்டிற்குதான் அதிகளவில் வாங்கப்படுகின்றன. பிஎஸ்4 அஸ்பியர் சிஎன்ஜி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 119 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் வழங்கப்பட்டது.

இதே அளவிலான ஆற்றலை தான் அஸ்பியரின் 1.2 லிட்டர் பெட்ரோல் 3-சிலிண்டர் ட்ராகன் சீரிஸ் என்ஜினும் அதிகப்பட்சமாக வழங்குகிறது. மேலும் இதே பெட்ரோல் என்ஜின் உடன் தான் பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டும் அஸ்பியரில் வழங்கப்படும் என தெரிகிறது.

பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி 1.5 லிட்டர் டிடிசிஐ டீசல் என்ஜின் தேர்விலும் பிஎஸ்6 அஸ்பியர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் மூலம் 99 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். பெட்ரோல், டீசல் என்ற இரு என்ஜின்களுமே 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகின்றன.

பிஎஸ்4 வெர்சனை போல் அல்லாமல் பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் ஃபோர்டு அஸ்பியரின் டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி வேரியண்ட்டில் தற்போதைக்கு ஹூண்டாய் அவ்ரா மட்டுமே ஒரே ஒரு சப்-4 மீட்டர் செடான் காராக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.