புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் எஸ்இ என்ற புதிய மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதன் முக்கிய அடையாளம் ஒன்றை இழந்துள்ளது. இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வந்த முதல் மாடல் என்ற பெருமை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு உண்டு. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், விலை, பாதுகாப்பு அம்சங்களில் சிறந்த மாடலாக இருந்ததால், துவக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், கால ஓட்டத்தில் ஏராளமான போட்டியாளர்கள் வந்தததால், கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக, அவ்வப்போது புதிய அம்சங்களுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு புதிய ஈக்கோஸ்போர்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் SE என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மாடலில் முக்கிய விஷயமாக, டெயில் கேட் எனப்படும் பின்புற கதவில் கொடுக்கப்படும் ஸ்பேர் வீல் இந்த மாடலில் இடம்பெறவில்லை. டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு வருவதுதான் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை தனித்துவப்படுத்தும் மிக முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

ஆனால், கால மாற்றத்திற்கு தக்கவாறு, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், இந்த புதிய மாடலை கொண்டு வந்துள்ளது. ஸ்பேர் வீல் இல்லாத நிலையில், பஞ்சர் போடுவதற்கான கிட் கொடுக்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

இதுதவிர்த்து, இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடலில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சன்ரூஃப், பின்புற பம்பரில் சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க்-3 செயலியில் இயங்குகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும் சப்போர்ட் செய்யும். ஃபோர்டுபாஸ் க்ளவுட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலமாக ரிமோட் முறையில் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், அணைப்பதற்குமான வசதி உள்ளது. அதேபோன்று, கதவுகளையும் மூடுவதற்கும், திறப்பதற்குமான வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞசின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 149 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

இதன் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடல் அறிமுகம்... முக்கிய அடையாளத்தை இழந்தது!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ரூ.10.49 லட்சத்திலும், டீசல் வேரியண்ட் ரூ.10.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடல்களுடன் தொடர்ந்து போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
Ford has launched new Ecosport SE model in India and starting at Rs.10.49 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X