Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஈக்கோஸ்போர்ட் காரில் ஸ்பெஷல் எடிசனை கொண்டுவரும் ஃபோர்டு நிறுவனம்!! தோற்றத்தில் அதிரடி மாற்றங்கள்...
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஸ்பெஷல் எடிசன் கார் ஒன்று டீலர்ஷிப் வளாகத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபல அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யும் வரவேற்பு மிகுந்த கார்களுள் ஒன்று ஈக்கோஸ்போர்ட்.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்சனை மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள், சிறந்த உத்தரவாதம் மற்றும் சன்ரூஃப் (டைட்டானியம் ட்ரிம்மில் மட்டும்) உள்ளிட்டவற்றுடன் ஃபோர்டு நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

இது போதாதென்று ஈக்கோஸ்போர்ட்டின் பலத்தை அதிகரிக்கும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் தான் தற்போது டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்தை வந்தடைந்துள்ளது.

இது தொடர்பான ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இதனால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களில் பின்பக்க கதவில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்படுவது உண்டு.

ஆனால் இந்த ஸ்பெஷல் எடிசனில் அவ்வாறான கூடுதல் சக்கரம் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக நம்பர் ப்ளேட் பின் கதவிற்கு மாற்றப்பட்டுள்ளது. நம்பர் ப்ளேட்டிற்கு மேலே க்ரோம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இவை எல்லாத்தையும் விட சிறப்பம்சமாக பின்பக்க பம்பரில் சில்வர் ஃபினிஷ் உடன் ஃபாக்ஸ் பேஷ் தட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்பை படங்களின் மூலம் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சில்வர் நிற தண்டவாளங்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது.

மேற்கூரை மற்றும் ஸ்பாய்லர் கருப்பு நிறத்தில் இல்லாமல் காரின் வெள்ளை நிறத்தில்தான் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஈக்கோஸ்போர்ட்டின் டைட்டானியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ப்ரோஜெக்டர் விளக்குகள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் அலாய் சக்கரங்களையும் கொண்டுள்ளது.

ஐந்து விதமான ட்ரிம் நிலைகளில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் என்ற இரு விதமான என்ஜின்கள் ட்ரிம்-ஐ பொறுத்து தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின்களுடன் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினையும் ஈக்கோஸ்போர்ட்டில் கூடுதல் தேர்வாக வழங்க ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.