ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துவரும் ஃபிகோ ஹேட்ச்பேக் காருக்கு சமீபத்தில் புதியதாக பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை வழங்கியது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட்டால் ஃபிகோவிற்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் கணிசமாக உயரும் என ஃபோர்டு நம்பிக்கையாக உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

இருப்பினும் மற்ற மாடல்களிடம் இருந்து போட்டி இல்லாமல் எவ்வாறு இருக்கும்? இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபிகோவிற்கு நேரடி போட்டி மாடல்களாக மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் ஐ10 நியோஸ் உள்ளன. இவை மூன்றிற்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

என்ஜின் & டிரான்ஸ்மிஷன்

ஃபோர்டு ஃபிகோ, போட்டியாக உள்ள மற்ற இரு கார்களை காட்டிலும் ஆற்றல்மிக்க என்ஜினை பெறுகிறது. இதனால் இந்த அமெரிக்கன் ஸ்டைல் காரில் பிஎஸ் எனப்படும் குதிரை ஆற்றல் மட்டுமின்றி டார்க் திறனும் அதிகமாக கிடைக்கும்.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

அதேபோல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் கொண்டிருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸிற்கு மாற்றாக 6-விகிதத்துடன் பாரம்பரியமான டார்க் கன்வெர்டர் ஃபிகோவில் வழங்கப்படுகிறது. இருப்பினும் மைலேஜ் விஷயத்தில் ஃபிகோ சற்று பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

வசதிகள்

வெளிப்பக்கத்தில் ஃபாக் விளக்குகள், 15 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், காரின் உடல் நிறத்தில் கதவு கைப்பிடிகள் & பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடி மூடி, பின்பக்க ஜன்னலுக்கு வாஷர் & வைபர் என ஸ்விஃப்ட் & ஐ10 நியோஸ் பெறும் வசதிகளையே ஃபிகோவிலும் ஃபோர்டு நிறுவனம் வழங்குகிறது. ஆனால் உட்புறத்தில் மற்ற இரண்டை காட்டிலும் இணைப்பு கார் தொழிற்நுட்பத்தில் இந்த அமெரிக்கன் காரின் கை ஓங்கியுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

இந்த வகையில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிமோட் லாக்/அன்லாக், ஒடிஏ, வாகன இருப்பிடத்தை கண்டறிதல், மொபைல் போன் மூலமாக காரின் ஓடோமீட்டர் & எரிபொருள் தீருவதை அறிந்து கொள்ளுதல், ஆயில் மாற்ற வேண்டியதை நினைவூட்டுவான், டயரில் குறைவான அழுத்தத்தில் காற்று உள்ளதை எச்சரிப்பான் உள்ளிட்ட வசதிகளை ஃபிகோ பெறுகிறது. இந்த இணைப்பு கார் தொழிற்நுட்பங்கள் போட்டி மாடல்களில் இல்லை.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

பரிமாண அளவுகள்

3941மிமீ அளவில் ஸ்விஃப்ட், ஐ10 நியோஸை காட்டிலும் நீளம் அதிகமாக கொண்டது மட்டுமில்லாமல், மற்றவைகளை காட்டிலும் 50மிமீ நீளம் அதிகமாக 2490மிமீ நீளத்தில் வீல்பேஸை ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் கார் கொண்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

நீளம் அதிகமாக இருப்பினும் பூட் ஸ்பேஸின் அளவு கிட்டத்தட்ட 10 லிட்டர்கள் கொள்ளளவில் குறைவாக உள்ளது. மற்றப்படி அகலம் மற்றும் உயரத்தில் இவை மூன்றிற்கும் பெரியளவில் வித்தியாசமில்லை. மாருதி ஸ்விஃப்ட் அகலத்திலும், பூட் ஸ்பேஸ் அளவிலும் இரண்டு மாடல்களுடன் ஒப்பிடுகையில் பெரியதாக உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

விலை

இந்த மூன்று முன்னணி நிறுவனங்களது மாடல்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஏஎம்டி கார் மலிவானதாக உள்ளது. ஏனெனில் இந்த ஆட்டோமேட்டட்-மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.62 லட்சத்தில் இருந்து ரூ.7.86 லட்சம் வரையில் உள்ளன.

ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்!! ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது?

மறுபக்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ.7.75 லட்சத்தில் இருந்து ரூ.8.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாதந்தோறும் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் ஏஎம்டி வேரியண்ட்டின் விலைகள் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8.42 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Ford Figo vs Maruti Swift vs Hyundai Grand i10 Nios. Automatic Models Comparison.
Story first published: Tuesday, July 27, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X