Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
உதிரிபாக சப்ளை பிரச்னையால், சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையிலும் கார் ஆலைகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னை மற்றும் சனந்த் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.

கார் உற்பத்திக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகத்தின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கார் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கார் ஆலையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உதிரிபாக சப்ளையில் இருக்கும் தடங்கலை மனதில் வைத்து, வரும் 24ந் தேதி வரை சென்னை ஆலையில் உற்பத்தியை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சனந்த் ஆலையிலும் கூட உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. செமி கன்டக்டர் உதிரிபாகங்கள் சப்ளையில் இருக்கும் பிரச்னையால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியில் தொடர்ந்து சில மாதங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது.

இதனால், புதிய ஃபோர்டு கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்று அதிகரிக்கும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சப்ளை செய்வதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும்.

நடப்பு காலாண்டில் சென்னை மற்றும் சனந்த் கார் ஆலைகளில் கார் உற்பத்தி 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருப்பதாகம் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 7,000 கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 65,000 கார்களை ஃபோர்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.