பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் பிரான்கோ எஸ்யூவியின் தயாரிப்பு பணிகளை கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

புதிய தலைமுறை பிரான்கோ எஸ்யூவியை கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு இந்த விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தின் (எஸ்யூவி) தயாரிப்பு பணிகள் தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

2021 பிரான்கோவின் அறிமுகமே ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் சற்று தாமதமானது. தற்போது தயாரிப்பு பணிகள் துவங்க 1 வருடமாகியுள்ளது. புதிய பிரான்கோ வாகனங்கள் அமெரிக்காவில் உள்ள ஃபோர்டின் மிச்சிகன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

புதிய பிரான்கோ வாகனங்களை தயாரிப்பதற்காக மிச்சிகன் தொழிற்சாலையில் 750 மில்லியன் டாலர்களை ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி புதியதாக 2,700 பணியாளர்களை இந்த தொழிற்சாலையில் சேர்த்துள்ளது.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

இந்த ஆறாம் தலைமுறை பிரான்கோ எஸ்யூவிக்கான முன்பதிவுகள் ஏற்கனவே அமெரிக்காவில் துவங்கப்பட்டுவிட்டன. இதுவரையில் 125,000 முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

2021 பிரான்கோ பழமையான 2-கதவு மற்றும் 4-கதவு 4x4 வெர்சன்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4-சக்கர ட்ரைவ் பிரான்கோ நேரடியாக பலத்த போட்டிக்கு மத்தியில் அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் ஜீப் வ்ராங்லருக்கு போட்டியாக உள்ளது.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

ஃபோர்டு பிரான்கோ எஸ்யூவி 2.7 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 பெட்ரோல் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 310 எச்பி மற்றும் 542 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

2.3 லிட்டர் என்ஜின் 420 என்எம் டார்க் திறனையும், 270 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஃபோர்டு மோட்டார் நிறுவனம் பிரான்கோ மாடலை முதன்முதலாக 1996ல் அறிமுகப்படுத்தியது.

பிரான்கோ வாகனங்களை தயாரிக்க ஒரு வழியாக துவங்கியது ஃபோர்டு!! 2020ல் அறிமுகமானது...

இந்த வகையில் பார்த்தோமேயானால், கிட்டத்தட்ட 25 வருடங்களாக பிரான்கோ வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தான் இந்த ஃபோர்டு வாகனத்திற்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Motor begins production of Bronco SUV almost a year after debut.
Story first published: Tuesday, June 15, 2021, 23:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X