உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் காரே உலகின் மிக சிறந்த விற்பனையைப் பெறும் ஸ்போர்ட் கார் ஆகும். எந்த நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் அதிகம் விற்பனையாகும் கார் என்ற தகவலை வாகன ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

இந்த தகவல் பலரை ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளது. உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாகவும் ஃபோர்டு மஸ்டாங் இருக்கின்றது. தொடர்ந்து, அதிக எஞ்ஜின் திறன் மட்டும் மதிப்புக் கூட்டப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட காராகவும் மஸ்டாங் இருக்கின்றது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

உலகளவில் கடந்த 2020ல் ஃபோர்டு மஸ்டாங் கார் 80,577 அலகுகள் (யூனிட்) வரை விற்பனையாகியிருக்கின்றது. இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையை வேறு எந்த நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பெறவில்லை என கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே ஃபோர்டு மஸ்டாங் உலகின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெறுமையை சூடியிருக்கின்றது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

இந்த விற்பனை எண்ணிக்கையானது உலகளவில் ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனையாகும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 15.1 சதவீத பங்காகும். இதே கார்தான் கடந்த 2019ம் ஆண்டிலும் அதிக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

2019ல் 14.8 சதவீதம் ஸ்போர்ட்ஸ் கார் சந்தையை இக்கார் பெற்றிருந்தது. இவ்வாறு, கடந்த சில வருடங்களாகவே நல்ல விற்பனை விகிதத்தைப் பெற்று உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் காராக ஃபோர்டு மஸ்டாங் இருக்கின்றது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

இதுகுறித்து, பெருமிதம் தெரிவித்திருக்கும் ஃபோர்டு, மஸ்டாங் காரின் துள்ளியமான விற்பனை எண்ணிக்கை பற்றிய தகவலை இதுவரை வெளியிடவில்லை. மேலும், இந்நிறுவனத்தின் மஸ்டாங் காருக்கு மட்டுமின்றி ஷெல்பி மற்றும் புல்லிட் ஆகிய மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

ஃபோர்டு மஸ்டாங் காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 363 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எது தெரியுமா?.. வாகன உலக ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஃபோர்டு...

புதி பிஎஸ்6 தர விதி அமலுக்கு இந்தியாவில் அமலுக்கு வந்தபோது மஸ்டாங் காரின் விற்பனையை போர்டு நிறுத்தியது. ஆகையால், தற்போது இந்தியர்களால் இக்காரை வாங்க முடியாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் மிக விரைவில் பிஎஸ்6 தரத்திலான மஸ்டாங் காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Ford Mustang Become Once Again The World’s Top-Selling Sports Car. Read In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X