டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் கார்களுக்கு போட்டியாக ஃபோர்டு நிறுவனம் புதிய எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெர்ரிடோரி எனும் புதிய வாகனத்தையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

ஏசியாவின் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த எஸ்யூவி ரக காரை ஃபோர்டு விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிலையிலேயே இக்காரை இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

புதிய ஃபோர்டு டெர்ரிடோரி எஸ்யூவி கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட புகழ்வாய்ந்த எஸ்யூவி கார்கள் சிலவற்றிற்கு போட்டியாக களமிறக்கப்பட இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அம்சங்களை டெர்ரிடோரி காரில் ஃபோர்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

ஃபோர்டு நிறுவனம் டெர்ரிடோரி எஸ்யூவி காரை விற்பனைச் செய்து வரும் நாடுகளில் பிலிப்பைன்ஸ் நாடும் ஒன்று. இந்த நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் டெர்ரிடோரி கார் 1.5 லிட்டர் ஈகோ பூஸ்ட் எஞ்ஜினைக் கொண்டிருக்கின்றது. இதே எஞ்ஜின் கொண்ட டெர்ரிடோரி காரே இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 141 பிஎச்பியை 4500 ஆர்பிஎம்மிலும், 225 என்எம் டார்க்கை 4000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். மேலும், இந்த எஞ்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் இயங்குவது குறிப்பிடத்தகுந்தது. எஸ்யூவி கார் பிரிவில் கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சூப்பர் திறனில் ஃபோர்டு டெர்ரிடோரி காரை விற்பனைக்கு களமிறக்க தயாராகி வருகின்றது.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், எல்இடி ஹெட்லைட், 10 அங்குலத்திலான தொடுதிரை ஹெட்யூனிட், ஒயர்லெஸ் சார்ஜர், 10 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமிரா, பார்க் அசிஸ்ட் மற்றும் தன்னாட்சி பிரேக்கிங் வசதி என எக்கசக்க சிறப்பு அம்சங்கள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

தற்போது வெளிநாடுகள் சிலவற்றில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபோர்டு டெர்ரிடோரி கார்களில் மேற்கூறிய அம்சங்கள் மட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான், விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக கூறப்படும் டெர்ரிடோரி கார் எஸ்யூவி சந்தையில் ஓர் புரட்சியைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா ஹாரியர் இடத்தை காலி செய்ய ஃபோர்டு திட்டம்?... புத்தம் புதிய எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதாக தகவல்!!

ஃபோர்டு டெர்ரிடோரி கார் அறிமுகம்குறித்த தகவல்கள் இணையத்தின் வாயிலாக மட்டுமே வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், மிக விரைவில் இக்கார் குறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Planning To Launch Territory SUV Car In India?.. Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X