இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

உலகளவில் பிரபலமான கார் பிராண்ட்கள் என்று பார்க்கும்போது அதில் நிச்சயம் டொயோட்டா பெயரும் இருக்கும். ஜப்பானை சேர்ந்த டொயோட்டாவின் தயாரிப்புகள் ஆசிய கண்டத்தை தாண்டி, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

நம் இந்தியாவில் தான் ஃபார்ச்சூனர், இன்னோவா கிரிஸ்டா போன்ற பிரிமீயம் தரத்திலான கார்களை தவிர்த்து, பட்ஜெட் ரக கார்களை விற்பனை செய்ய இந்த ஜப்பானிய நிறுவனம் போராடி வருகிறது. இதனாலேயே நஷ்டத்தை தவிர்க்க, கூட்டணி நிறுவனமான சுஸுகியின் கார்களின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்க எப்போதோ டொயோட்டா திட்டமிட்டுவிட்டது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

இந்த வகையில் தான் க்ளான்ஸா (மாருதி சுஸுகி பலேனோ) மற்றும் அர்பன் க்ரூஸர் (மாருதி விட்டாரா பிரெஸ்ஸா) உள்ளிட்டவை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்காலத்திலும் இதே பாணியில் மேலும் சில கார்களை கொண்டுவர டொயோட்டா தயாராகி வருகிறது. இதன்படி டொயோட்டா பிராண்டில் இருந்து அடுத்ததாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கார்களை இனி பார்ப்போம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

டொயோட்டா-பேட்ஜ்டு மாருதி சியாஸ்

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் யாரிஸ் செடான் காரின் விற்பனையை நிறுத்தி இருந்தது. இந்த செடான் காருக்கு மாற்றாக புதிய செடான் மாடலை, தற்சமயம் விற்பனையில் இருக்கும் மாருதி சியாஸ் செடானில் இருந்து கொண்டுவர டொயோட்டா தயாராகி வருகிறது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

‘பெல்டா' என தற்போதைக்கு அழைக்கப்படும் இந்த புதிய டொயோட்டா செடான் காரிலும் சியாஸின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. என்ஜின் மட்டுமின்றி பெரும்பான்மையான பாகங்களையும் மற்ற டொயோட்டா-பேட்ஜ்டு சுஸுகி கார்களை போன்று சியாஸில் இருந்தே பெல்டா பெற்றுவரும்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

டொயோட்டா-பேட்ஜ்டு மாருதி எர்டிகா

டொயோட்டா நிறுவனம் ரூமியன் என்ற பெயரில் எம்பிவி கார் ஒன்றை தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். நம் நாட்டு சந்தையில் மிகுந்த வரவேற்பு மத்தியில் விற்பனையாகி கொண்டிருக்கும் மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனான ரூமியன் இந்திய சந்தையிலும் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ள காப்புரிமை ஆவண படத்தை தான் மேலே காண்கிறீர்கள். டொயோட்டா ரூமியனிலும் மாருதி எர்டிகாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. அதேநேரம் சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படலாம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

புதிய தலைமுறை டொயோட்டா அர்பன் க்ரூஸர்

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து இந்திய சந்தைக்காக உருவாக்கிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல் தான் அர்பன் க்ரூஸர் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து இந்த டொயோட்டா-பேட்ஜ்டு கார் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். இந்த நிலையில் தற்போது அர்பன் க்ரூஸரின் அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

அர்பன் க்ரூஸருடன் விட்டாரா பிரெஸ்ஸாவும் அதன் புதிய தலைமுறை மாடலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடல்கள் எலக்ட்ரிக் சன்ரூஃப், உட்புறத்தில் அளவில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை, 6 காற்றுப்பைகள் உள்ளிட்ட வசதிகளை புதியதாக பெற்றுவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி

அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய தலைமுறையை உருவாக்கும் பணிகள் நடைப்பெற்றுவரும் தற்போதைய சூழலில் இந்தியாவிற்கான நடுத்தர-அளவு எஸ்யூவி காரை வடிவமைக்கும் பணிகளிலும் டொயோட்டா & மாருதி சுஸுகி நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

இந்த எஸ்யூவி கார் டொயோட்டாவின் டைஹட்சூ புதிய தலைமுறை கட்டமைப்பு (DNGA)-வின் அடிப்படையில் உருவாக்கப்படலாம். டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாருதி சுஸுகி பிராண்டிலும் தற்போதைய எஸ்-கிராஸ் காருக்கு மாற்றாக கொண்டுவரப்படவுள்ளதாம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள டொயோட்டா கார்கள்!! பெல்டா செடானில் இருந்து புதிய லேண்ட் க்ரூஸர் வரையில்

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் (300 சீரிஸ்) வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவே வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய லேண்ட் க்ரூஸர் தற்போதைய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கே வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
5 Upcoming Toyota Cars In India, Rebadged Ertiga To New Land Cruiser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X