Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படும்? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ( Mahindra XUV700) காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படும் என்பது பற்றிய வீடியோவை குளோபல் என்சிஏபி அமைப்பு அதன் டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இந்திய எஸ்யூவி கார் பிரிவில் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. விற்பனைக்கு வந்த மிகக் குறுகிய நாட்களிலேயே 65 ஆயிரம் யூனிட் புக்கிங் என்ற வரலாற்று சாதனையை இது படைத்தது. அதிலும், புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை பெற்றது இந்திய நான்கு சக்கர வாகன உலகையே மிரட்டும் வகையில் அமைந்தது.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இத்தகைய வரவேற்பிற்கு பன்முக சிறப்பம்சங்களை தாங்கிய வாகனமாக எக்ஸ்யூவி700 வந்திருப்பதே முக்கிய கராணமாக இருக்கின்றது. இந்த நிலையில், எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான தானாக பிரேக் பிடிக்கும் அம்சம் பற்றிய வீடியோவை குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ளது.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

மிக சமீபத்தில் குளோபல் என்சிஏபி அமைப்பு எக்ஸ்யூவி700 காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையில் ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு நட்சத்திர ரேட்டிங்கை இக்கார் பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர ரேட்டிங்கையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர ரேட்டிங்கையும் இது பெற்றது.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இத்தகைய அதிக பாதுகாப்பு நட்சத்திர அந்தஸ்தை ஐந்தாவது இந்திய தயாரிப்பு எக்ஸ்யூவி700 ஆகும். டாடாவின் நெக்ஸான், அல்ட்ராஸ், பஞ்ச் மற்றும் மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்கள் ஐந்து பாதுகாப்பு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்ற வாகனமாக இருக்கின்றன. இவற்றின் வரிசையில் மிக அதிக பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்று எக்ஸ்யூவி700 இணைந்திருக்கின்றது.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இந்த நிலையிலேயே எதிரில் இருக்கும் பாதுகாப்பை உணர்ந்து தானாக பிரேக் பிடிக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் சிறப்பம்சம் பற்றிய வீடியோவை குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ளது. இது இக்காருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் அட்வான்ஸ்ட் டிரைவர் எய்ட்ஸ் சிஸ்டத்தை (Advanced Driver Aids System) வழங்கியிருக்கின்றது. அடாஸ் எனப்படும் இந்த தொழில்நுட்பம் பல்வேறு பாதுகாப்பு வசதியை வழங்குகின்றது. அதில், ஒன்றே அவசர கால தானியங்கி பிரேக்கிங். இது எதிரில் இருக்கும் வாகனம் அல்லது பிறவற்றை உணர்ந்து தானாக வாகனத்தை நிறுத்தும்.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

மேலும், திடீரென குறுக்கில் ஏதேனும் வாகனம் அல்லது உயிரினம் ஏதேனும் குறுக்கிட்டாலும், அவற்றையும் உணர்ந்து தானாகக பிரேக்கிங்கை ஆக்டிவேட் செய்யும். இது எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய வீடியோவே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இந்த வீடியோ அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட ஓர் வாகனம் எவ்வாறு செயல்படும் என்பதை வெளிக்காட்டுகின்றது. பாதையில் ஏதேனும் தடை இருக்கும் என்றால், வேகத்தைக் குறைத்து உடனடியாக வாகனத்தை அந்த தொழில்நுட்பம் நிறுத்துவதை வெளிக்காட்டுகிறது. இதே செயல்பாட்டை, முன் பக்கம் செல்லும் வாகனம் திடீரென நிற்கும் போது இந்த தொழில்நுட்பம் செய்யும். இதுவே தொழில்நுட்பத்தின் முக்கிய பணியாகும்.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

ஆகையால், விபத்தில்லா பயணம் இதன் வாயிலாக உறுதியாகும். இத்துடன், எக்ஸ்யூவி700 காரில் முன்பக்க கொல்லிசன் வார்னிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வாயிலாக மோதல் குறித்த அறிவிப்பை வெளிப்படுத்தும். தொடர்ந்து, அடாப்டீவ் க்ரூஸ் க்ன்ட்ரோல் (இந்த தானாக வேகத்தைக் குறைக்க மற்றும் அதிகரிக்க உதவும்), ஸ்மார்ட் பைலட் (ஸ்டியரிங் வீலை தானாக கன்ட்ரோல் செய்ய உதவும்) ஆகிய அம்சங்களும் எக்ஸ்யூவி700 இல் வழங்கப்பட்டிருக்கின்றன.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இவையனைத்தும் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்சர் வார்னிங், சாலையில் உள்ள அறிவிப்புகளைக் கண்டறியும் திறன், தானாகவே எதிரில் வரும் வாகனங்களைக் கண்டறிந்து மின் விளக்கை உயர் ஒளிக்கும், குறைவான ஒளிக்கும் மாற்றும் திறன் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Mahindra XUV700 காரின் தானியங்கி பிரேக்கிங் திறன் எப்படி செயல்படுகிறது? உங்களையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும்!

இதுமாதிரியான அதீத பாதுகாப்பு அம்சங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உயர் நிலையிலேயே தேர்விலேயே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. இக்கார், ரூ. 12.49 லட்சம் தொடங்கி ரூ. 22.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். எம்எக்ஸ் மற்றும் ஏஎக்ஸ் ஆகிய இரு விதமான ட்ரிம்களில் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Global ncap reveals mahindra xuv700 suv s automatic emergency braking
Story first published: Saturday, November 13, 2021, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X