கிரேட் வால் மோட்டார்ஸின் இந்திய வெப்சைட் செயல்பட துவங்கியது!! எந்த கார் முதலில் வெளிவர இருக்கோ...!

க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கம் செயல்பட துவங்கி இருக்கிறது. மேலும் இந்த வெப்சைட்டிற்கு GWM பிராண்டில் இருந்து இந்தியாவில் முதலாவதாக விற்பனைக்கு வரவுள்ள ஹவல் எச்7 நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் பெயர் கொண்டுவரப்பட்டுள்ளது.

க்ரேட்வால் மோட்டார்ஸின் இந்திய வெப்சைட் செயல்பட துவங்கியது!!

கடந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இருந்தே சீனாவை சேர்ந்த க்ரேட் வால் மோட்டார்ஸ் க்ரூப்பின் இந்திய வருகை எப்போது இருக்கும் என்ற கேள்வி நிலவி வருகிறது.

ஏனெனில் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த க்ரூப்பில் இருந்து ஏகப்பட்ட கார் மாடல்கள் காட்சிக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த சீன ஆட்டோமொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் களம்புக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மஹாராஷ்டிரா அரசாங்கத்துடன் நினைவு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ள க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கொரோனா மட்டுமே தற்போதைக்கு இந்த சீன நிறுவனத்தின் இந்திய வருகைக்கு தடையாக உள்ளது.

இந்த சீன க்ரூப்பில் இருந்து முதலாவதாக அறிமுகமாகவுள்ள ஹவால் எச்7 நடுத்தர-அளவு ப்ரீமியம் எஸ்யூவி கார் வெப்சைட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டாலும், இந்த காரின் இந்திய அறிமுகத்தை இதுவரையில் GWM உறுதிப்படுத்தவில்லை.

பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஹவால் எச்7 காரில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-இல் 148 பிஎச்பி பவரையும், 1400- 3000 ஆர்பிஎம்-இல் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதுவே 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் 5500 ஆர்பிஎம்-இல் 188 பிஎச்பி மற்றும் 2000- 3200 ஆர்பிஎம்-இல் 340 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2.0 லிட்டர் என்ஜின் உடன் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 4,620மிமீ நீளம் கொண்டதாக உள்ள ஹவல் எச்7 கார் கிட்டத்தட்ட ஹூண்டாய் பிராண்டில் இருந்து விரைவில் வெளிவரவுள்ள க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனான அல்கஸாருக்கு இணையான நீளத்தை கொண்டுள்ளது.

2,725மிமீ நீளத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை கொண்டுள்ள இந்த எஸ்யூவி கார் தாராளமாக 5 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வருவதால் க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் மற்றொரு மிக பெரிய சந்தையான இந்தியாவில் நல்ல விதமாக வணிகத்தை துவங்கவே விருப்பப்படும். இதனால் எச்7, பிரிவிலேயே முதல் மாடலாக பல்வேறு புதிய வசதிகளை பெற்றுவரலாம்.

Most Read Articles
English summary
Great Wall Motors Indian Website Goes Live: Which Is The First Model From The Chinese Automaker?
Story first published: Saturday, June 5, 2021, 2:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X