இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா

உலக புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சீன நிறுவனம் ஒன்று டூப்ளிகேட் செய்து புதிய பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் 2021ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்டோ ஷோவில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதுமுக தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், சீனாவை மையமாக் கொண்டு இயங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளை வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

நிறுவனம் காட்சிப்படுத்திய புதுமுக கார்களில் 'டேங்க் 800' மாடலும் ஒன்று. இந்த காரின்மீதே சர்ச்சையான கருத்து எழும்பியுள்ளது. கிரேட் வால் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கும் இக்கார் உருவம் மற்றும் ஸ்டைலில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் போன்று இருப்பதாக கருத்துகள் எழும்பியிருக்கின்றன.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் காரின் வெளிப்புறத் தோற்றம் தொடங்கி உட்புற ஸ்டைல் வரை அனைத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு காரைப் போன்றே இருக்கின்றன. குறிப்பாக, டேங்க் 800 காரின் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மிக பெரிய க்ரில், அலாய் வீல், பெயிண்ட் பூச்சு ஆகியவை ரோல்ஸ் ராய்ஸ் கல்லின் காரை உணர்த்தும் வகையிலேயே இருக்கின்றன.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

அதேசமயம், சில தனித்துவமான அம்சங்களையும் இக்கார் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு காரின் ஸ்டைலில் இருந்து மாறுபட்டு காணப்பட வேண்டும் என்பதற்காக இந்த அம்சங்களை கிரேட் வால் மோட்டார்ஸ் பயன்படுத்தியிருக்கின்றது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் விளக்கு, டேங்க் எனும் பெயர் பேட்ஜைக் கொண்டிருக்கும் டெயில் கேட் மற்றும் இரு துளை எக்சாஸ்ட் ஆகியவை லேசான தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, காரின் பிரீமியம் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் இரு நிற வண்ண பூச்சினை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

உட்பகுதி; காரின் உட்பகுதியையும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை தழுவியே டேங்க் 800 உருவாகியுள்ளது. நட்சத்திரம் மின் விளக்கு மேற்கூரை, எலெக்ட்ரிக் கதவுகள், கதவுகளில் குடை, தனிமைப்படுத்தக் கூடிய துணி திரைகள், தொடுதிரை வசதிக் கொண்ட திரைகள், பானங்களை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய மினி ஃப்ரிட்ஜ் மற்றும் அதிக சொகுசு வசதியை வழங்கக்கூடிய இருக்கைகள் என பல்வேறு அம்சங்களை டேங்க் 800 பெற்றிருக்கின்றது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

இந்த அனைத்து அம்சங்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களிலும் நம்மால் காண முடியும். மேற்கூறிய அம்சங்கள் தவிர கிரிஸ்டல், மரம், லெதர், அலுமினியம் மற்றும் வெல்வெட் ஆகியவற்றைக் கொண்டும் காரின் உட்பகுதியை கிரேட் வால் மோட்டார்ஸ் அலங்கரித்துள்ளது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

இவை காரின் லக்சூரி அமைப்பை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கின்றது. மேலும், அடாப்டிவ் சஸ்பென்ஷன், ஆஃப்-ரோடு பயணத்திற்கான சிறப்பு வசதிகள் என மேலும் சில மதிப்புக்கூட்டப்பட்ட பிரீமியம் அம்சங்களை டேங்க் 800 காரில் கிரேட் வால் மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

எஞ்ஜினைப் பொருத்தவரை 3.0 லிட்டர் வி6 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 354 எச்பி-யை வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியிலேயே இந்த எஞ்ஜின் இயங்குகின்றது. கல்லினன் அடிப்படையிலான இக்காரை மிக விரைவில் சீனாவில் கிரேட் வால் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா!!

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் படம்

தற்போது வெளியாகியிருக்கும் தகவல் டேங்க் 800 அடுத்த வருடம் சீனாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த காரை சர்வதேச சந்தையில் கிரேட் வால் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Great Wall Motors Reveals Rolls-Royce Cullinan Look A Like Tank 800. Read In Tamil.
Story first published: Thursday, April 22, 2021, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X