இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே! புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model3 இ-காரின் அறிமுகம்

Tesla Model 3 எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் மீண்டும் தள்ளிபோகும் நிலை உருவாகியிருக்கின்றது. புதிய காரணத்தினால் மின்சார காரின் தள்ளிப் போயிருக்கின்றது. அது என்ன காரணம் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

இந்திய சந்தையில் கால் தடக்கும் பணியில் பிரபல அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இது ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனது தலைமையகத்தை நிறுவ இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் மாடலாக மாடல் 3 (Model 3) மற்றும் மாடல் ஒய் (Model Y) ஆகியவை இருக்கின்றன. இவையே சற்று விலைக் குறைவான கார் மாடல்களும் ஆகும். இதில், மாடல் 3 எலெக்ட்ரிக் காரே இந்திய சந்தைக்கான முதல் டெஸ்லா காராக எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

இதன் அறிமுகமே தொடர்ச்சியாக தள்ளிப் போன வண்ணம் இருக்கின்றது. இப்போது அறிமுகமாகிவிடும், அப்போது அறிமுகமாகிவிடும் என டெஸ்லா மாடல்3 குறித்த தகவல்கள் வெளியாகி வந்தாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையே தென்படுகின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இக்கார், தற்போது இந்திய சந்தையில் நுழைவதில் புதிய சிக்கலைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலைக்கு ஏற்றதாக இல்லை என புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

Source: Autocar India

ஆகையால், டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என தெரிகின்றது. ஆம், மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் போதுமானதாக இல்லை. ஆகையால், இந்திய சந்தைக்காக இதை அதிகரிக்க வேண்டிய நிலை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 மிமீ ஆக இருக்கின்றது. இந்தியாவின் சாலைகளைப் பொருத்தவரை இது மிகவும் குறைவு ஆகும். இந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் பயன்பாட்டிற்கு வருமானால் அதன் அடிப்பகுதி கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

குறிப்பாக, வேகத்தடைகளைக் கடக்கும்போது அதிக சவாலை சந்திக்கும். எனவே, மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை 25 மிமீ வரை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

இவற்றின் உயரத்தை கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்கும் வகையில் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது. அதேவேலையில் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான மாடல் எஸ் (Model S) மற்றும் மாடல் எக்ஸ் (Model X) ஆகிய கார் மாடல்களில் நிறுவனம் ஏர் சஸ்பென்ஷன்களை பயன்படுத்தி இருக்கின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

ஆகையால், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை கணிசமாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதன் வாயிலாக இந்தியாவின் கரடு, முரடான மற்றும் உயரமான ஸ்பீடு பிரேக்கர்களை சமாளிக்க முடியும். ஆனால், மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சற்று அதிக விலைக் கொண்டவை ஆகும்.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

ஆகையால், இவற்றைக் கொண்டு இந்திய சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற முடியாது என்பதை உணர்ந்து முதலில் குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை ஐடிஐஏடிஏ ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி (IDIADA Automotive Technology) எனும் ஏஜென்ஸி சோதனைக்கு உட்படுத்தி வருக்கின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

200க்கும் அதிகமான வேகத் தடைகள் மீது வாகனத்தை இயக்கி நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றது. இந்த சோதனையின் வாயிலாகவே மாடல் 3 காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை இன்னும் 25 மிமீ வரை உயர்த்த வேண்டும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனத்தின் நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. நிறுவனம் மாடல் 3 இல் இரு வேரியண்டுகளையும், மாடல் ஒய்-இல் இரு வேரியண்டுகளையும் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் கொஞ்சம் மாசம் காத்திருக்கணும் போலிருக்கே... புதிய காரணத்தால் தள்ளி போகும் Tesla Model 3 இ-காரின் அறிமுகம்!

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 568 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல், வெறும் 3.1 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இக்கார் கொண்டிருக்கின்றது. மிக சிறந்த திறன் வெளிப்பாட்டில் மட்டுமல்ல சொகுசு அம்சங்களையும் மிக அதிகமாகக் கொண்ட எலெக்ட்ரிக் காராக மாடல் 3 இருக்கின்றது.

Most Read Articles
English summary
Ground clearance issue tesla model 3 launch might be get delay in india
Story first published: Friday, September 24, 2021, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X