பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்! மலிவு விலையில் ஹைட்ரஜன் வாகனம்! இங்கேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்!

குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனங்களை உருவாக்க இந்திய நிறுவனம் ஒன்று திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த ஹைட்ரஜன் இன் மோஷன் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களை நாட்டிலேயே வைத்து உருவாக்க எச்2இ பவர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அடார் பூனவல்லா, தொடங்கியிருக்கும் புதுமுக நிறுவனமே எச்2இ பவர் நிறுவனம்.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனம் ஹைட்ரஜனை மின்சார திறனாக மாற்றி இயங்கும் வாகனங்களை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இந்த பணிக்காக கனடா நாட்டைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துடன் எச்2இ தற்போது இணைந்துள்ளது.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே இந்தியாவிற்கான முதல் மூன்று சக்கர ஹட்ரஜனால் இயங்கும் உருவாக்கப்பட இருக்கின்றது. மின்சார வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் சிறப்புமிக்க வாகனங்களாக ஹைட்ரஜன் வாகனங்கள் இருக்கின்றன.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

மின்சார வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்ய நீண்ட நேரங்கள் தேவைப்படுகின்றது. இரண்டு, மூன்று, நான்கு என அதிகபட்ச நேரம் எடுத்துக் கொள்வது கவலையளிக்கும் விஷயமாக இருக்கின்றது. ஆனால், ஹைட்ரஜன் வாகனங்கள் இதுபோன்றில்லை. பெட்ரோல், டீசலை நிரப்புவதைப் போல் மிகக் குறைந்த நேரத்திலேயே ஹைட்ரஜனை நிரப்பி விட முடியும்.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

அதேசமயம், இந்த வாகனம் வெறும் நீராவிகளை மட்டுமே வெளியிடும். ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை மின்சார திறனாக மாற்றும் போது வெறும் நீராவி மட்டுமே வெளியேறும். எனவேதான் இந்த வாகனங்களை சுற்று சூழலின் நண்பன் என்று கூறுகின்றனர். மேலும், ஒரு முறை ஹைட்ரஜன் உருளை நிரப்பினால் பல நூறு கிலோமீட்டருக்கு வாகனம் பயணிக்கும்.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

இதுவே ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களின் தனி சிறப்பாகும். இத்தகைய சிறப்புமிக்க வாகனங்களையே இந்தியாவிலேயே கனடா நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து எச்2இ நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. முதலில் மூன்று சக்கர ஹைட்ரஜன் வாகனங்களே உருவாக்கப்பட இருக்கின்றன.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

இந்த மூன்று வாகனங்களை குறைந்த விலையில் விற்பனைக்கு களமிறக்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிக உறுதியாக இருக்கின்றன. பொது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை மாசில்லா வாகனமாக மாற்றும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையில் எச்2இ மற்றும் ஹைட்ரஜன் இன் மோஷன் ஆகிய இரு நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்...

இந்த திட்டம் ஜிஐடிஏ-வின் கூட்டு நிதி பங்களிப்பின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஐடிஏ-வானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆகும். இவற்றிந் கூட்டு முயற்சியின் வாயிலாக நாட்டின் முதல் குறைந்த விலை ஹைட்ரஜன் வாகனம் உருவாக்கப்பட இருக்கின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
English summary
h2e Power To Develop India’s First Hydrogen 3-Wheeler With Canadian Firm. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X