மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

மின் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவரும் பொருட்டு ஓர் மாநில அரசு மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் மின் வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது எந்த மாநிலம் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த முயற்சி மிக அமோகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்திய அரசு மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கி வருகின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

ஒன்றிய அரசுடன் சேர்ந்து சில மாநில அரசுகளும் தனித்துவமாக மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை மின் வாகனங்களுக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் குஜராத் மாநில அரசு மின் வாகனங்களுக்கான மானிய திட்டத்தை அதன் மாநில மக்களுக்காக அண்மையில் அறிமுகப்படுத்தியது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

இதன் விளைவாக பிற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத்தில் மின் வாகனங்களின் விலை குறைந்த நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில் மற்றுமொரு மாநில அரசும் மின் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக மானியத்தை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

ஹர்யானாவே புதிதாக தனது மானிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கும் மாநில அரசாகும். மாநிலத்தின் முதலமைச்சர் மனோஹர் லால் கத்தர் இதுகுறித்த அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். இன்று வேர்ல்டு கார் ஃப்ரீ டே (World Car Free Day) உலகளவில் அனுசரிக்கப்படுகின்றது. எரிபொருளால் இயங்கும் வாகனங்களினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

இந்த நாளை முன்னிட்டு மின் வாகன பயனர்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் மானிய திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக தனது அறிவிப்பில் ஹர்யானா மாநில முதலமைச்சர் மனோஹர் லால் கத்தர் தெரிவித்திருக்கின்றார். இத்துடன், சொந்தமாக கார் வாங்குவதைக் காட்டிலும் கார்பூலிங் எனப்படும் வாடகை கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் அவரது அறிவிப்பில் கூறியிருக்கின்றார்.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

தொடர்ந்து, மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு சிஎன்ஜி பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியிலும் ஹர்யானா அரசு களமிறங்கியிருக்கின்றது. இத்துடன், எலெக்ட்ரிக் பேருந்து மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் இயக்கத்தை நகர்புற பகுதிகளில் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அம்மாநில அரசு எடுத்து வருகின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

ஹர்யானா மாநில அரசு மட்டுமின்றி டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளும் தங்களின் மாநில மக்களை மின் வாகனங்களின் பக்கம் நோக்கி நகர்த்தும் வகையில் மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

சில மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை மட்டுமின்றி தங்களின் மாநிலத்தில் மின் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்கு மின் வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதேவேலையில் இந்த மாநிலவாசிகளுக்கு ஃபேம்2 திட்டத்தின் வாயிலாகவும் மானியம் வழங்கப்படுகின்றது. ஆகையால், மேலே பார்த்த வாசிகளுக்கு இரட்டை மானியத்தின் வாயிலாக பலன் கிடைக்கின்றன.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

இந்தியாவில் இருக்கும் 50 சதவீத மாநிலங்கள் மின்வாகனங்களுக்காக பிரத்யேக திட்டங்களை மாநில மக்களுக்காக நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. சுலப தவணை, சாலை வரி சலுகை, பதிவு கட்டணம் ரத்து, குறைந்த வட்டி உள்ளிட்ட சலுகைகளுக்கு வழி வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

மின் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்... மாநில மக்களுக்காக தரமான அறிவிப்பு... நம்ம ஊர்ல இல்லைங்க!!

ஹர்யானா மாநில அரசு மின் வாகனங்களுக்கு மானியம் வழங்க இருப்பதாக அறிவித்திருப்பதால் அந்த மாநிலத்தில் மின் வாகனங்கள் பல மடங்கு குறைந்த விலையில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. இந்த நிலை மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Haryana govt decided to give subsidy for electric vehicles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X