Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொளுத்தும் வெயில்! வாகனங்களை பத்திரமா பாத்துக்கோங்க... நடுரோட்டில் கால் வாராம இருக்க என்ன செய்ய வேண்டும்?
கோடை வெயில் இப்போவே கொளுத்த ஆரம்பிச்சிருச்சு இதில் இருந்து நம்முடைய வாகனங்களை காப்பதற்கான கணிசமான டிப்ஸ்களை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

சுட்டெரிக்கும் வெயில் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களைத் தாக்க தொடங்கிவிட்டது. இரவில் பனியும், பகலில் கொளுத்தும் வெயிலும் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நிலையில் வாகனங்களை எப்படி எப்போதும் இயக்கத்தில் இருக்கிற மாதிரி (ஒர்க்கிங் கன்டிஷனில்) பராமரிப்பது என்ற டிப்ஸையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஏர் கன்டிஷனர்:
சம்மர் நேரத்தில் வீட்டில் மட்டுமில்லைங்க காரிலும் ஏசி நல்ல ஒர்க்கிங் கன்டிஷனில் இருப்பது அவசியம். இது இல்லை எனில் நிச்சயம் நம்மால் ஒரு நிமிஷம்கூட காரில் மதிய வேலையில் பயணிக்க முடியாது. ஆகையால், சம்மர் வருவதற்கு முன்னரே ஏசியின் ஒர்க்கிங் கன்டிஷன் எப்படி இருக்குனு ஒரு முறை பரிசோதிச்சுக்கோங்க. இது வேலை செய்தால் மட்டுமே நம்மால் கூலாக பயணங்களை மேற்கொள்ள முடியும்.

கூலண்ட் சிஸ்டம்:
ஏசி வேலை செய்வதன் மூலம் நம்மைக் கூலாக வைத்திருக்க முடியும் அதேநேரத்தில் காரையும் கூலாக வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு கூலண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்கிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். இதன் மூலம் தங்கு தடையில்லா பயணத்தைப் பெற முடியும். அதாவது, தேவையற்ற பிரேக்டவுன் போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

சன்ஷேட் மற்றும் டேஷ்போர்டு:
கார் உரிமையாளர்கள் பலர் தங்களின் கார்களை நேரடியாக வெயில் படக் கூடிய இடங்களில் பார்க் செய்து விடுகின்றனர். இவ்வாறில்லாமல், நேரடி வெயிலில் இருந்து காக்கும் வகையில் போர்வை (கவர்) மூலம் மூடுவது சிறப்பான பலனை வழங்கும். இதன் மூலம் காரின் கேபினையும் லேசாக கூலாக வைத்திருக்க முடியும். தொடர்ந்து, டேஷ்போர்டையும் பாதுகாக்க முடியும்.

ஏர் ஃபில்டர்:
தூசி மற்றும் சமீபத்திய மழை போன்றவற்றால் ஏர் ஃபில்டருக்கு வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆகையால், இதில் எந்த கோளாரும் இல்லை என்பதை முன்னரே அறிந்துகொள்வது வரும் காக்கும் நடவடிக்கை சமம் என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றை சுத்தம் செய்வதன் மூலம் காரில் நெடியற்ற காற்றை சுவாசிக்க முடியும்.

டயர்:
மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஓர் கூறுகளில் டயரும் ஒன்று. அதிகப்படியான வெயில் காலங்களில் அதிகளவில் காற்றை நிரப்புவதன் மூலம் வெடிப்பு போன்ற தேவையற்ற சிக்கலை அனுபவிக்க நேரிடும். அதேநேரத்தில், மிக குறைவான காற்றை நிரப்புவதன் மூலம் மிக எளிதில் பஞ்சர் போன்ற சிக்கலைச் சந்திக்கவும் நேரிடும்.

ஆகையால், இவற்றை காற்று முறையான அளவில் நிரப்பப்பட்டிருக்கின்றதா என்பதை இந்த வெயில் காலம் முடியும் வரை அவ்வப்போது ஆராய்வது மிக சிறந்தது. இதன் பஞ்சர் போன்ற தேவையற்ற இன்னல்களைத் தவிர்க்க முடியும். தொடர்ந்து, தடையில்லா பயணத்தையும் நம்மால் பெற முடியும்.

வைப்பர்:
வெயில், மழை மற்றும் குளிர் என பல காலநிலைகளை இது சந்தித்திருப்பதால் வைப்பரின் ரப்பர்கள் பழுதாகாமல் இருக்கின்றதா என்பதையும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது சிறந்தது. பழுதாகி இருக்கும் வைப்பரை கண்ணாடியைச் சுத்தம் செய்வதாக நினைத்து ஆன் செய்தால், அது விண்ட் ஷீல்டை பாழாக்கிவிடும்.

ஆகையால், இந்த கோடை வெயில் இன்னும் தீவிரமடைவதற்குள் மேலே கூறிய அனைத்தையும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் தங்கு தடையில்லா பயணங்களைப் பெற முடியும். தொடர்ந்து, காரையும் நல்ல இயங்குநிலையில் பராமரிக்க முடியும்.