விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் இதன் விலை குறைவான வேரியண்ட் விலைமிக்க வேரியண்ட்டின் தோற்றத்திற்கு மாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

அவ்வாறு மாடிஃபை செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொன்றாக விளக்கி காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கும் கீழுள்ள வீடியோ விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

Image Courtesy: VIG AUTO ACCESSORIES

முன்பக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம். முன்பக்கத்தில் இந்த கார் க்ரெட்டாவின் டாப் ட்ரிம்களுள் ஒன்றான எஸ்.எக்ஸ்(O)-ஐ போல் க்ரில்லை கொண்டுள்ளது. ஒற்றை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் முக்கோண எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் மூலமாக மாற்றப்பட்டுள்ளன.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

பம்பரில் கூடுதலாக சில்வர நிற சறுக்கு தட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது விலை குறைவான வேரியண்ட் என்பதே நமக்கு மறந்துவிடுகிறது. இவற்றுடன் எல்இடி ஃபாக் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் மெஷின்-கட் அலாய் சக்கரங்கள் முதலில் நம்மை வசீகரித்து விடுகின்றன.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

அதுமட்டுமில்லாமல் படிக்கட்டும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. க்ரோம்கள் கதவு கைப்பிடிகளிலும், கதவுகளின் கீழ்பகுதியிலும் பளிச்சிடுகின்றன. பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் எலக்ட்ரிக் மூலமாக செயல்படுபவைகளாக வழங்கப்பட்டுள்ளன.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

இவற்றுடன் மழை வருவதை உணர்ந்து செயல்படும் விஸர்ஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவின் ஒரிஜினல் மேற்கூரை தண்டவாளங்களையும் கொண்டுள்ள இந்த மாடிஃபை காரின் ஜன்னல் கண்ணாடிகளில் வெப்பத்தை முற்றிலுமாக ஊடுறுவ விடாத படலங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

பின்பக்கத்திற்கு சென்றால், டெயில்லைட்கள் மற்றும் பம்பர் க்ரெட்டாவின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுபவைகளால் மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்தில் நுழைந்தவுடன் மிளிரும் ஸ்கஃப் தட்டுகள் மற்றும் 7டி தரைப்பாய்கள் முதலில் நம்மை வரவேற்றுவிடுகின்றன.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சுற்றிலும் விளக்குகளை பெற்றுள்ள இந்த மாடிஃபை காரில் ஸ்பீக்கர்கள் கூட அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகளின் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

இருக்கை கவர்கள் கருப்பு நிறத்தில் முன்பை காட்டிலும் மிகவும் மெருதுவானதாக கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்டேரிங் சக்கரத்தையும் கருப்பு-வெள்ளை நிற லெதரால் மூடியுள்ள உரிமையாளர் உட்புற கதவு பிடிகளையும் டாப் வேரியண்ட்டில் இருந்து கொண்டு வந்துள்ளார்.

விலை குறைவான ஹூண்டாய் க்ரெட்டா காரா இது!! நம்பவே முடியல... சூப்பரான உரிமையாளரின் ஐடியா!

இதனால் கதவை திறந்து உள்ளே வருவதில் இருந்து பயணத்தை முடித்து கொண்டு காரை விட்டு வெளியேறும் வரையில் எந்த இடத்திலும் இது மலிவான க்ரெட்டா கார் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை. மற்றப்படி என்ஜினில் கை வைத்திருக்க மாட்டார்கள்.

Most Read Articles

English summary
2021 Hyundai Creta SUV Base E variant beautifully modified into top-end trim.
Story first published: Wednesday, May 26, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X