உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

வாகனத்தை ரீசேல் (செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனை) செய்யும் போது நல்ல மதிப்பில் போக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

நிச்சயம் என்றாவது ஒரு நாள் தற்போது பயன்படுத்தி வரும் வாகனத்தை ரீசேல் செய்ய வேண்டும் என நினைப்பர்கள், அந்த வாகனம் நல்ல மதிப்பில் விலைக்கு போக வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால், நடைமுறைக்கு வரும்போது இது சில நேரங்களில் நடைபெறுவதில்லை. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான விலையில் அவ்வாகனங்கள் கேட்கப்படும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

இதற்கு வாகனங்களை முறையாக பராமரிக்காததே முக்கிய காரணமாக இருக்கின்றது. செகண்ட் ஹேண்டில் வாகனங்கள் நல்ல விலைக்கு விற்க வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் நினைப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கின்றனர். அதேநேரத்தில் சில வழிமுறைக் கடைப்பிடித்தாலும் அது தேவையான நேரத்தில் கைக் கொடுப்பதில்லை.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

இதுமாதிரியான இன்னல்களைத் தவிர்த்து, செகண்ட் ஹேண்டில் வாகனங்களை விற்பனைச் செய்யும்போது நல்ல லாபத்தை ஈட்ட, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஐந்து வழிமுறைகள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

செராமிக்/டெஃப்லான்/பிபிஎஃப்

செகண்ட் ஹேண்டில் வாகனத்தை வாங்கும்போது வாகனத்தின் எஞ்ஜினிற்கு அடுத்தபடியாக வெளிப்புற தோற்றத்திற்கு வாங்குவோர் அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர். ஆகையால், இதனை எஞ்ஜினுக்கு வழங்குவதைப் போலவே வெளிப்புற தோற்றத்திற்கும் அதிக பராமரிப்பை வழங்குவது மிக சிறந்தது. வெளிப்புற தோற்றத்தை எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க செராமிக் அல்லது டெஃப்லான் அல்லது பிபிஎஃப் செயல்முறைகள் உதவுகின்றன.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

இவை புது பொலிவு இழப்பை தடுத்து எப்போதும் வாகனம் புதியதைப் போல் வைத்திருக்க உதவும். சிறிய, சிறிய கீரல்கள் மற்றும் தூசிகள் ஆகியவற்றில் இருந்தும் இவை வாகனங்களைக் காக்கும். குறிப்பாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்துகூட இவை வாகனத்தின் புது பொலிவு தன்மையைப் பாதுகாக்கும். மேலும் நீண்ட ஆயுட் காலம் கொண்டவை என்பதால் செலவும் குறைவு.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

உயர் செயல் திறன் கொண்ட ஏசி:

காரின் கேபினை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் ஏசிகள் பெரும் பங்காற்றுகின்றன. இது ஓர் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது. எனவேதான், இவற்றின் பராமரிப்பிலும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு அதிக பராமரிப்பை ஏசி விஷயத்தில் வழங்கும்போது அது எப்போதும் நல்ல செயல்திறன் வெளிப்பாட்டை வழங்கும். இதன் வாயிலாக ரீசேல் செய்யும்போது நல்ல மதிப்பை அக்கார் பெறும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

டயர்கள் மற்றும் வீல்:

டயர் மற்றும் வீல் ஆகியவற்றிற்கும் மறு விற்பனையின் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. அதிக விலைக் கொண்டதாகக் கருதப்படும் வாகனத்தின் உதிரிபாகங்களில் டயர் மற்றும் வீல்களும் அடங்கும். இவற்றில் ஏதேனும் குறைபாடோ அல்லது பாதிப்போ இருந்தால் ரீசேலின் போது வாகனத்தின் மதிப்பை குறைக்க வழி வகைச் செய்யும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

எனவே வீல் பேலன்ஸிங் மற்றும் அலைன்மென்டை அவ்வப்போது சரிபார்ப்பது மிக சிறந்தது. இதனை சில நிறுவனங்கள் லேசர் அசிஸ்ட் வசதியுடன் வழங்கி வருகின்றன. இவை துள்ளியமாக குறைகளை தீர்க்க உதவும். அதேநேரத்தில் அதிக ரேஷ் டிரைவ் செய்து டயர்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்பது எங்களின் தனிப்பட்ட அறிவுறுத்தலாகும். இது பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகுக்கும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

பேட்டரி:

பேட்டரியின் செயல்திறைனைக் கருத்தில் கொண்டு வாகனங்களின் மதிப்பு குறைக்கப்படும் சம்பவம் பல அரங்கேறியிருக்கின்றன. செயல்திறன் குறைந்த பேட்டரி எப்போது காலை வாரும் என்பதே தெரியாது. ஆகையால், செகண்ட் ஹேண்ட் வாகன சந்தையில் பேட்டரிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

ஆகையால், பேட்டரியை நல்ல ஆயுட்காலத்துடன் பாதுகாப்பு நல்ல பலனை வழங்கும். கார்களை பயன்படுத்தாத நாட்களில் சில நிமிடங்கள் ஐடிலிங்கில் ஸ்டார்ட் செய்து ஆஃப் செய்வதன் வாயிலாக பேட்டரியின் இயக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

பிரேக்:

இதேபோல், பிரேக்கிங்கிற்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரேக் பேட், பிரேக் டிஸ்க் அல்லது பிரேக் ஷூக்களின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. இதுவும், மறு விற்பனையின்போது உங்கள் வாகனம் நல்ல மதிப்பைப் பெற உதவி செய்யும்.

உங்க வாகனத்தை விற்கும்போது நல்ல விலைக்கு போகணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க!

கார் ஸ்பா:

கார் ஸ்பா மற்றும் டீடெய்லிங் இவையும் மறு விற்பனையின் நல்ல மதிப்பில் வாகனங்கள் விற்பனைக்கு போக உதவும். மிகவும் சுத்தமான வாகனங்களுக்கு எப்போதுமே இந்தியாவில் நல்ல டிமாண்ட் உண்டு. தேவையில்லா தூசி மற்றும் அழுக்குகளை போக்க கார் ஸ்பா உதவுகின்றது. இத்துடன் வாகனத்தை புதிது மற்றும் பொலிவுடன் காட்சியளிக்கவும் இது உதவுகின்றது.

Most Read Articles
English summary
Here is 5 ways to get good resale value of your car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X