கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் துவக்கத்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் சற்று தளர்த்தப்பட்டதற்கு பிறகு அறிமுகமான சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரான கியா சொனெட்டிற்கு விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

ப்ரீமியம் தரத்திலான தோற்றத்தினாலும், தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாகவே பெயர் எடுத்த சொனெட்டின் டாப் வேரியண்ட்கள் விலை குறைவான வேரியண்ட்களை காட்டிலும் அதிகளவில் வசதிகளை பெறுகின்றன.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

இதன் காரணமாக விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்களின் கேபின் வெளிப்புற தோற்றத்திற்கு இணையான தரத்தில் இல்லை என சில உரிமையாளர்களுக்கு தோன்றுகின்றது போல. ஏனெனில் இங்கு ஒருவர் தனது சொனெட் எச்டிகே ஆரம்ப நிலை வேரியண்ட்டின் கேபினை மிகவும் ப்ரீமியம் தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.

Image Courtesy: VIG AUTO ACCESSORIES

விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்ற யுடியூப் சேனலின் மூலம் நமக்கு கிடைத்துள்ள இந்த வீடியோவில் சொனெட் கார் மிகவும் புதியதுபோல் காட்சி தருகிறது. இதனால் இந்த காரை அதன் உரிமையாளர் சமீபத்தில் தான் வாங்கி இருக்க வேண்டும்.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

கதவுகளின் உட்புறத்தில் கருப்பு நிற தையல்களுடன் வெள்ளை நிற லெதர் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த பகுதிகளில் ஒளிரக்கூடிய ஸ்கஃப் தட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியே கீழே பார்த்தப்படி வந்தோமேயானால், கேபினிற்கு டைமண்ட் டிசைனில் தையல்களுடன் தரை பாய் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

முன் பயணிகள் கால் வைக்கும் பகுதிகளில் எல்லாம் நீல நிற விளக்கு ஒளிர்கிறது. டேஸ்போர்டுக்கு வருவோம், ஸ்டேரிங் சக்கரம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கவர்களை கொண்டுள்ளது. இது காரின் வெளி தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

இருக்கைகள் இரட்டை நிறத்தில் மிகவும் மிருதுவானதாக உள்ளன. கருப்பு நிற தலையணை உடன் இந்த இருக்கை கவர்கள் உண்மையில் அருமையாக உள்ளன என்பதை சொல்லியே ஆக வேண்டும். உட்புற கேபின் மட்டுமின்றி இந்த சொனெட் காரின் வெளிப்புறத்திலும் சில மாற்றங்களை உரிமையாளர் கொண்டுவந்துள்ளார்.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

புதியதாக மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கான தண்டவாளத்தை பொருத்தியுள்ள இவர்கள் கைப்பிடிகளுக்கு க்ரோம்-ஐயும், மழை விஸரையும் கூட கொண்டுவந்துள்ளனர். க்ரோம்-ஐ காரின் பக்கவாட்டு கீழ்பகுதியிலும் பார்க்க முடிகிறது.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

இந்த சொனெட் காரின் கண்ணாடிகள் அதி-அகச்சிவப்பு வெப்ப நிராகரிப்பு படலத்தை கொண்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் சற்று கூடுதல் பிரகாசத்தை தரக்கூடிய எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

கியா சொனெட் காரிலா இப்படி!! வேற லெவல் காரியத்தை செய்துள்ள உரிமையாளர்!

நிச்சயம் இந்த கியா சொனெட் காரின் என்ஜின் அமைப்பில் கை வைத்திருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக இந்த மாடிஃபிகேஷன் அற்புதமாக உள்ளது. இதற்கு ஆன செலவு குறித்து எதுவும் இந்த வீடியோவில் தெரிவிக்கவில்லை.

Most Read Articles

English summary
Kia Sonet compact SUV with modified interiors looks neat.
Story first published: Saturday, May 15, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X