இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

இந்தியாவில் அதிக நாட்கள் காத்திருப்பு காலங்கள் கொண்ட கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இவையனைத்து ஏப்ரல் மாத காத்திருப்பு நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

2021ம் ஆண்டில் இந்திய வாகனச் சந்தை கொஞ்சம் பிஸியாக இயங்க ஆரம்பித்துள்ளது. 2019 மற்றும் 2020 ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் வாகன விற்பனை சற்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் குறைந்த விலை என பல சிறப்புகளுடன் இந்திய வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில் புதுமுக வாகனங்கள் நாட்டில் அறிமுகமாகியுள்ளன.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

அவற்றில் சில இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மிக அமோகமான வரவேற்பை இந்தியர்களிடத்தில் குறிப்பிட்ட சில கார்கள் பெற்று வருகின்றன. இதனால், ஒரு சில மாடல் கார்களை வாங்க இந்தியாவில் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

அந்தவகையில், எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு நாட்கள் (மாதங்கள்) காத்திருப்பு காலம் நிலவி வருகின்றது என்பது குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். மிக அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவின் டாப்10 கார்கள் பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

எம்ஜி ஹெக்டர்

காத்திருப்பு காலம் 3 மாதங்கள்

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து களமிறக்கிய முதல் கார் மாடல் ஹெக்டர் ஆகும். 2019ம் ஆண்டிலேயே இக்கார் முதல் முறையாக நாட்டில் அறிமுகமாகியது. அப்போதில் இருந்து தற்போது வரை நாட்டின் அதிகம் விற்பனையாகும் காராக இது இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இக்காருக்கான காத்திருப்பு காலம் அமைந்திருக்கின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

எம்ஜி ஹெக்டர் காரை இப்போது புக் செய்தால் குறைந்தது 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என நிறுவனம் கூறுகின்றது. இந்த காத்திருப்பு காலம் நகர வாரியாக மாறுபடுகின்றது. ஒவ்வொரு நகரத்தில் ஒவ்வொரு மாதிரியான காத்திருப்பு காலங்கள் நீடிக்கின்றன. இதன்படி, 2 மாதங்கள் தொடங்கி 3 மாதங்கள் வரை இக்காருக்கு காத்திருப்பு காலம் நிலவுகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

ஹூண்டாய் ஐ20

காத்திருப்பு காலம் 3 மாதங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில், இந்த நிறுவனத்தின் புது வரவான ஐ20 மாடலுக்கும் நமது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதனால், இக்காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்களாக காணப்படுகின்றது. இதுவே அதிகபட்ச காலம் என நிறுவனம் கூறுகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

டாடா சஃபாரி

காத்திருப்பு காலம் 3 மாதங்கள்

டாடா நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகமாக சஃபாரி எஸ்யூவி கார் இருக்கின்றது. நவீன தொழில்நுட்பம், கவர்ச்சியான புதிய தோற்றம் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இக்கார் புத்துயிர் பெற்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தற்போது இக்காருக்கு காத்திருப்பு காலம் 1 முதல் 3 மாதங்கள் வரை நீடித்து வருகின்றது. மாநிலம் அல்லது நகர வாரியாக இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

டொயோட்டா ஃபார்ச்சூனர்

காத்திருப்பு காலம் 4 மாதங்கள்

டொயோட்டா நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காரை மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முந்தைய மாடல் ஃபார்ச்சூனரைக் காட்டிலும் இப்புதுப்பிக்கப்பட்ட மாடல் கவர்ச்சியான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதியைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

ஆகையால், தற்போது இக்காருக்கு காத்திருப்பு காலம் 2 மாதங்கள் தொடங்கி 4 மாதங்கள் வரை நீடிக்கின்றது. வேரியண்ட் மற்றும் நகர வாரியாக இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது. ஆரம்ப நிலைக்கு வேரியண்டிற்கு காத்திருப்பு காலம் 2 மாதங்களாகவும், உயர்நிலை வேரியண்டுகளுக்கு காத்திருப்பு காலம் 4 மாதங்களாகவும் நீடிப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

ரெனால்ட் கைகர்

காத்திருப்பு காலம் 4 மாதங்கள்

நாட்டின் மலிவு விலை கார்களில் கைகர் காரும் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். கவர்ச்சியான தோற்றம், மலிவு விலை என பல்வேறு சிறப்புகளுடன் இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதன் விலைவாக அதிகம் காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும் கார்களில் ஒன்றாக ரெனால்ட் கைகர் மாறியிருக்கின்றது. நான்கு மாதங்கள் வரை இக்காருக்கான காத்திருப்பு காலம் உள்ளது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

கியா சொனெட்

காத்திருப்பு காலம் 5 மாதங்கள்

ரெனால்ட் கைகர் காருக்கு போட்டியளிக்கும் வகையில் கியா நிறுவனத்தின் சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கார் இருக்கின்றது. இக்காரில் சிறப்பம்சங்கள் சற்று கூடுதல் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இத்துடன், அதிக கவர்ச்சியான உடல் தோற்றம் மற்றும் பிரீமியம் அம்சங்களையும் இக்கார் கொண்டிருக்கின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

எனவேதான், இக்காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. தற்போது, சுமார் 5 மாதங்கள் வரை இக்காருக்கான காத்திருப்பு நிலவுகின்றது. ஆகையால், இக்காரை புதிதாக புக் செய்வோர் குறைந்தது ஆகஸ்டு மாதம் வரையாவது காத்திருந்தாக வேண்டும் என்ற நிலை நீடித்து வருகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

நிஸான் மேக்னைட்

காத்திருப்பு காலம் 8 மாதங்கள்

நிஸான் நிறுவனத்திற்கு இந்திய வாகன சந்தையில் மிகப்பெரிய இடத்தை மேக்னைட் கார் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்றே கூறலாம். கடந்த காலங்களில் விற்பனை இலக்கை எட்ட முடியாமல் தவித்து வந்த இந்நிறுவனத்திற்கு பெரும் நிவாரணமாக இக்காரின் வருகை அமைந்துள்ளது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

மிக மிக சமீபத்திலேயே இக்காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவும் இந்தியாவின் மலிவு விலை கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இருப்பினும், இதன் உயர்நிலை வேரியண்டிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. ஆகையால், சுமார் 8 மாதங்கள் வரை இக்காருக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

மாருதி எர்டிகா

காத்திருப்பு காலம் 8 மாதங்கள்

எம்பிவி வாகன பிரிவில் புரட்சி செய்யும் வகையில் விற்பனையில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகின்றது மாருதி சுசுகி எர்டிகா. நாட்டின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி காரும் இதுவே ஆகும். அதிக இட வசதி, நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களால் இக்காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதன் விளைவாக இக்காருக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு நிலவி வருகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

ஹூண்டாய் க்ரெட்டா

காத்திருப்பு காலம் 8 மாதங்கள்

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக காரே ஹூண்டாய் க்ரெட்டா. இக்காருக்கு இந்தியாவில் அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகின்றது. கவர்ச்சியான தோற்றம், அதி திறன் கொண்ட எஞ்ஜின், கூடுதல் தொழில்நுட்ப் வசதிகள் என அனைத்திலும் இக்கார் பிராமாண்டமானதாக காட்சியளிக்கின்றது. எனவேதான் இக்காருக்கு இந்தியாவில் 9 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்து காணப்படுகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

வேரியண்ட் வாரியாக க்ரெட்டாவிற்கான காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது. அந்தவகையில், 6 வாரங்கள் தொடங்கி அதிகபட்சமாக 9 மாதங்கள் என காத்திருப்பு காலம் நீளுகின்றது.

இந்த கார்களை வாங்கனும்னா இந்தியாவில் ரொம்ப நாட்கள் காத்திருக்கணும்... அடேங்கப்பா மாச கணக்குல காத்திருக்கணுமா?

மஹிந்திரா தார்

காத்திருப்பு காலம் 8 மாதங்கள்

இந்த காரே இந்தியாவின் மிக மிக அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும் கார் ஆகும். காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் தார் கார் உற்பத்தியை அதிகரிக்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும், தற்போது வரை இக்காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் தொடங்கி 10 மாதங்கள் வரை நீடித்துக் காணப்படுகின்றது. இக்காருக்கான காத்திருப்பு காலமும் வேரியண்ட் வாரியாக மாறுபட்டு காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Here Is List of India's Highest Waiting Period Cars. Read In Tamil.
Story first published: Friday, April 9, 2021, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X