மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா

அழகான தோற்றம் இல்லாத காரணத்தினால் நாட்டில் படுதோல்வி அடைந்த கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட கார்களுக்கு எப்போதுமே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதில், ஏதேனும் ஒன்றிலாவது குறைபாடுடன் ஓர் வாகனம் விற்பனைக்கு வரும் என்றால் அது இந்திய வாகன உலகில் நிலைத்து நிற்பது கேள்விக் குறியே. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் நமது நாட்டில் அரங்கேறியிருக்கின்றது.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

தெளிவாகக் கூற வேண்டுமானால் மோசமான டிசைன் காரணத்தினால் இந்தியாவை விட்டு பல கார்கள் வெளியேறியிருக்கின்றன. அந்தவகையில், நாட்டை விட்டு வெளியேறிய குறிப்பிட்ட சில கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

நிஸான் எவளியா (Nissan Evalia)

மோசமான டிசைன் காரணத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்களின் பட்டியலில் நாம் பார்க்க இருக்கும் முதல் கார் நிஸான் எவளியா ஆகும். மாருதி சுசுகி எர்டிகாவிற்கு போட்டியளிக்கும் வகையில் இக்கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

இத்துடன், டொயோட்டா இன்னோவாவிற்கும் இது போட்டியாக களமிறங்கியது. இவை இரண்டும் எம்பிவி கார் பிரிவின் கிங்காக செயல்படும் கார் மாடல்களாக இருக்கின்றன. அதிலும், டொயோட்டா இன்னோவாவிற்கு தற்போதும் மிக அமோகமான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

இத்தகைய கார்களுடன் போட்டியிட்டதில் கவர்ச்சியான டிசைன் கொண்ட காராக நிஸான் எவளியா இருந்திருக்கின்றது. இதன் விளைவாக அக்காரை நாட்டை விட்டு நிறுவனம் வெளியேற்றியது. அதேவேலையில், அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து நிஸான் நிறுவனம் எவளியா காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்த வெர்ஷனும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆகையால், இதனையும் நிறுவனம் வெளியேற்றியது.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

மாருதி சுசுகி ஜென் எஸ்டிலோ (Maruti Suzuki Zen Estilo) மற்றும் மாருதி சுசுகி ஏ-ஸ்டார் (Maruti Suzuki A-Star)

இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனைச் செய்யும் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் இரு கார் மாடல்கள் குறைந்த கவர்ச்சியான தோற்றம் காரணத்தினால் வெளியேற்றப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஜென் எஸ்டிலோ மற்றும் ஏ-ஸ்டார் எனும் இரு கார் மாடல்களே மிகவும் மோசமான டிசைன் காரணத்தினால் நாட்டை விட்டு வெளியேறிய கார் மாடல்கள் ஆகும்.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

2006ம் ஆண்டு ஜென் எஸ்டிலோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோசமான வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற அமைப்பு ஆகிய இக்கார் இந்தியர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆகையால், மிக மோசமான விற்பனை எண்ணிக்கையப் பெற்றது. இதன் விளைவாக இக்காரை வெளியேற்றும் நிலை உருவாகியது. இதேபோல், ஏ-ஸ்டார் காருக்கும் வரவேற்பு மிக குறைவாகவே தென்பட்டது. இதன் காரணத்தினாலேயே இக்கார் மாடலும் வந்த வேகத்தில் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

மஹிந்திரா குவாண்டோ (Mahindra Quanto) மற்றும் மஹிந்திரா வெரிட்டோ வைப் (Mahindra Verito Vibe)

மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளை போலவே மஹிந்திரா நிறுவனத்தின் இரு தயாரிப்புகளும் குறைவான கவர்ச்சியான டிசைன் காரணத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றன. குவாண்டோ மற்றும் வெரிட்டோ வைப் ஆகியவையே மோசமான தோற்றம் காரணத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கார் மாடல்கள் ஆகும்.

மோசமான டிசைனால் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்கள்! நம்ம மாருதி நிறுவனத்தின் கார்கள்கூட இந்த பட்டியல்ல இருக்கா!!

மஹிந்திரா குவாண்டோ, நிறுவனத்தின் புகழ்பெற்ற ஜைலோ கார் ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. இருப்பினும், ஜைலோவைப் போல் இந்தியர்களைக் கவர இக்கார் தவறிவிட்டது. சிறந்த எஞ்ஜின் மற்றும் கணிசமான கூடுதல் கருவிகளைக் கொண்டிருந்தும் இக்கார் வரவேற்பைப் பெற தவறிவிட்டது. குவாண்டோ காரை போலே வெரிட்டோ வைப் காரும் குறைவான கவர்ச்சியான தோற்றம் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கின்றது. அதேநேரம், இதன் விசாலமான தோற்றம் மற்றும் சிறந்த நடைமுறை ஆகியவற்றினால் இந்திய சந்தையில் 2013 தொடங்கி 2016 வரை விற்பனையில் இருந்தது. இதன் பின்னரே பெரியளவில் வரவேற்பைப் பெறாமல் இக்கார் நாட்டை விட்டு வெளியேறியது.

Most Read Articles

English summary
Here is some failed cars list due to poor design
Story first published: Wednesday, October 20, 2021, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X