கார்களில் நாம் தெரிந்தே செய்ய கூடிய சிறு தவறுகளால் இவ்ளோ பிரச்னை ஏற்படுகிறதா?.. அட முன்னாடியே தெரியாம பேச்சே!!

தெரிந்தே நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளால் கார்களில் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் உருவாகின்றன என்பதுகுறித்த தகவலை இப்பதிவில் வழங்கியுள்ளோம்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

நாம் தெரிந்தே செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள்தான் நாம் ஆசை ஆசையாக வாங்கிய வாகனங்களைக் கடுமையாக சேதப்படுத்துகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?,. நாங்க ஏங்க தெரிஞ்சே தப்பு செய்ய போறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம், நீங்க இதை நம்பிதான் ஆகணும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, நாம் என்னென்ன தவறுகளை தெரிந்தோ செய்கின்றோம், அதை எப்படி தவிர்ப்பது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதவிற்குள் செல்லலாம்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

கழுவுதல்

காரை சுத்தமாக வைத்திருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். நம்மில் பலர் வாகனங்களை தினம் கழுவும் வழக்கத்தை வைத்திருக்கின்றனர். ஆனால், தெருவோரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் தூய்மைப்படுத்தும் சாதனங்களைக் கொண்டு சுத்தப்படுத்துவது காரின் பொலிவிற்கு கேடு விளைவிக்கும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

தரமில்லாத கெமிக்கல்கள் சில நேரங்களில் துருப்பிடித்தல் போன்றவற்றை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகையால், தரமான கெமிக்கல்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இது, காரின் பொலிவு தன்மையைப் பாதுகாக்க உதவும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

தம் அடித்தல் (புகைப்பிடித்தல்)

காருக்குள் அமர்ந்து புகைப்படதனால் குறிப்பிட்ட சில பாகங்களின் நிறம் மாற்றமடைவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, காரின் உட்புற சூழலையும் ஆபத்தானதாக மாற்றுகின்றது. இதுமட்டுமின்றி, சிகரெட்டின் புகை காரிக்குள்ளேயே வட்டமடித்து அந்த வாசனையை நிரந்தரமானதாக மாற்றிவிடுகின்றது.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

ஆகையால், நீங்கள் தொடர் புகைப்பிடிக்கும் வழக்கம் கொண்டவராக இருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவது நல்லது. இது உங்களையும், உங்களது காரையும் பாதுகாக்க உதவும். சிகரெட்டை கைவிட வேண்டும் எனில் நிகோடின் உணர்வை செயற்கையாக வழங்கக் கூடிய உணவு பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

மரங்களுக்கு அடியில் கார்களை நிறுத்துதல்

வெயிலுக்காக பயந்து மரங்களில் அடியில் வாகனங்களை நிறுத்துவதை நம்மில் செய்வதுண்டு. இதுபோன்று எப்போதாவது நிறுத்துவதனால் பிரச்னையில் இல்லை. தினந்தோறும் நிறுத்தும்போதே சிக்கல் ஆரம்பிக்கின்றது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் கிளைகள் மற்றும் காய்ந்த சருகுகள் காரின் மீது விழும்போது லேசான சிராய்ப்பை ஏற்படுத்தும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

இதனால், காரின் புதுபொலிவு மங்க ஆரம்பிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதுமட்டுமின்றி, மரத்தடியில் கார்களை நிறுத்தும்போது வாகன ஓட்டிகள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்னை பறவை எச்சம். இவற்றினாலும் காரின் வண்ண பூச்சு பாதிப்படைகின்றது.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

கசிவுகளுக்கு கவனம் செலுத்தவும்

வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் எடுக்கும்போது காருக்கு அடியில் திரவம் ஏதேனும் கசிந்திருப்பதைப் பார்த்தால், உடனே அது என்பதை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று பார்க்க வேண்டும். கசிவு என்றாலே வாகனம் பின்னாளில் பெரும் சிக்கலை ஏற்படுத்த இருக்கின்றது என்பதற்கே அர்த்தம். ஆகையால், கசிவைக் கண்டவுடன் உடனடியாக அதை சரி செய்வதே மிக சிறந்தது.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

எச்சரிக்கை மின் விளக்குகளை புறக்கணிக்க வேண்டாம்

குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் கோளாறுகளை எச்சரிக்கை மின் விளக்குகளே நமக்கு உணர்த்துகின்றன. இதனைத் தவிர்ப்பது என்பது சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வதற்கு சமம். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே எச்சரிக்கை மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

ஸ்பீட் பிரேக்கர் மற்றும் பள்ளங்கள்

ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்களில் கார்களை வேகமாக ஓட்டுவது நல்லதே கிடையாது என்கின்றனர் வாகன ஆர்வலர்கள். குறிப்பாக, பள்ளங்களை தவிர்ப்பதன் வாயிலாக வீல் நெலிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இத்துடன், சஸ்பென்ஷன்களில் ஏற்படும் பாதிப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

டயர் பிரஷ்ஷரை தினமும் கவனியுங்கள்

குறைந்த காற்று கொண்ட டயருடன் பயணிப்பது மைலேஜ் குறைவு மற்றும் திறன் வெளிப்பாட்டை சீரழித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மேலும், திடீர் பஞ்சர் போன்ற இன்னல்களுக்கும் குறைந்த காற்று வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், அவ்வப்போது காரின் அனைத்து வீல்களிலும் காற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

எஞ்ஜின் ஆயில் மாற்றுவது

எஞ்ஜின் ஆயிலை ஒவ்வொரு 3,000 மைல்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. இது மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்கு உதவும். தொடர்ந்து, எஞ்ஜினின் ஆயுளை பாதுகாக்கவும் இது உதவும். சில ஆயிரம் மட்டுமே செலவழிக்கும் ஆயில் மாற்றத்தைச் செய்ய நாம் தவறினால் அது நாளடைவில் பல ஆயிர செலவை ஏற்படுத்தும்.

தெரிந்தே நாம் செய்யும் தவறுகள்... இது எல்லாம் உங்க காரை கடுமையா சேதப்படுத்தும்... தயவு செய்து இத இன்னொரு முறை செய்யாதீங்க!

மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கவும்

உங்கள் காரை விற்கும்போது அதிக லாபத்திற்கு விற்க விரும்பினால் ஒரிஜினல் பாகங்களைப் பெரும்பாலும் மாற்றாதீர்கள். அதாவது மாடிஃபிகேஷனை அறவே செய்யாதீர்கள். இதனைச் செய்வதனால் வாகனத்தின் மதிப்பு கணிசமாக குறைகின்றது. குறிப்பாக, வாகன மாடிஃபிகேஷன் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் இதனைத் தவிர்ப்பதே நல்லது.

Most Read Articles

English summary
Here Is The List How You Are Accidentally Damaging Your Car. Read In Tamil.
Story first published: Thursday, May 6, 2021, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X