அதிக மைலேஜ் தரும் டாப்10 சப்-4மீ, க்ராஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தர கூடிய கார்கள் இந்தியாவில் இருக்கா!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 10 சப்-4 மீட்டர் மற்றும் க்ராஸோவர் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சிறுக சிறுகவென உயர்ந்து தற்போது லிட்டர் ஒன்று ரூ. 100 வரை விற்கப்பட்டு வருகின்றது. இந்த அபரீதமான விலையுயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மைலேஜை குறைவாக வழங்கும் வாகனங்களை வைத்திருப்போர் சந்திக்கும் அவலங்கள் அளவிட முடியாததாக இருக்கின்றது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

இத்தகைய அவலங்களை போக்கும் விதமாக அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் பல தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை எது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நேற்றைய தினம் அதிக மைலேஜ் தரக்கூடிய எம்பிவி ரக கார்களின் பட்டியலை வழங்கியிருந்தோம்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

இன்று சப்-4 மீட்டர் எஸ்யூவி மற்றும் க்ராஸோவர் ரகத்தில் அதிக மைலேஜ் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 10 கார்கள் பற்றியே இப்பதிவில் நாம் காண உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

10. மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா வழக்கமான எஞ்ஜின் மற்றும் லேசான ஹைபிரிட் தொழில்நுட்பம் அடங்கிய எஞ்ஜின் என இரு விதமான மோட்டார்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ப்ரெஸ்ஸா அதிகபட்சமாக 17.03 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கும்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

இதேபோன்று, எஸ்எச்விஎஸ் லேசான ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதியில் கிடைக்கும் ப்ரெஸ்ஸா கார் ஒரு லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இவையே இக்கார் அதிகபட்சமாக வழங்கும் மைலேஜ் திறன் ஆகும். தற்போது இந்தியாவில் இக்கார் ரூ. 7.51 லட்சம் தொடங்கி ரூ. 11.41 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

9. மஹிந்திரா எக்ஸ்யூவி300

இந்தியாவின் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் டீசல் எஞ்ஜின் வசதிக் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டே அதிகபட்ச மைலேஜை வழங்கும் தேர்வாக இருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கு 20.1 கிமீ மைலேஜே வழங்கும்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் எனும் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. தானியங்கி மற்றும் மேனுவல் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

8. நிஸான் மேக்னைட்

இந்தியாவின் விற்பனைக்குக் கிடைக்கும் மிக குறைவான விலையுள்ள கார்களில் நிஸான் மேக்னைட் காரும் ஒன்று. இந்த கார் ரூ. 5.59 லட்சம் தொடங்கி ரூ. 9.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

நிஸான் மேக்னைட் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிமீ தூரம் வரை செல்லும். இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

7. ரெனால்ட் கைகர்

இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களில் கைகர் காரும் ஒன்று. இந்த கார் ரூ. 5.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிமீ தூரம் வரை செல்லும். இதுவே இதன் அதிகபட்ச மைலேஜ் திறன் ஆகும்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

நிஸான் மேக்னைட் காரைப் போலவே கைகர் காரும் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலே நாம் பார்த்த மைலேஜ் திறன் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வேரியண்டுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

6. ஃபோர்டு ஈகோஸ்போர்ட்

ஃபோர்டு நிறுவனம் நீண்ட காலமாக விற்பனைச் செய்து வரும் கார் மாடல்களில் ஈகோஸ்போர்ட்-ம் ஒன்று. இந்த கார் அராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி அதிகபட்சமாக 21.7 கிமீ மைலேஜ் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது, மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட டீசல் எஞ்ஜின் ஈகோஸ்போர்ட் வேரியண்டின் மைலேஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

5. டாடா நெக்ஸான்

இந்தியாவின் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார்களில் டாடா நெக்ஸான் மாடலும் ஒன்று என்பது இதன் சிறப்பாகும். இக்கார் அதிகபட்சமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 22.44 கிமீ மைலேஜை வழங்கும். மேனுவல் மற்றும் தானியங்கி என இரு எஞ்ஜின்களும் இதே மைலேஜ் திறனையே வழங்குகின்றன.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

டாடா மோட்டார்ஸ், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும், 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் மோட்டாரிலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி எனும் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் நிறுவனம் வழங்குகின்றது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

4. ஹூண்டாய் வென்யூ

இந்தியாவின் மலிவு விலை எஸ்யூவி காராக களமிறங்கி விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்ட கார்களில் ஹூண்டாய் வென்யூவும் ஒன்று. 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் வென்யூ அதிகபட்சமாக 23.28 கிமீ மைலேஜை வழங்குகின்றது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட எஞ்ஜினே இந்த உச்சபட்ச மைலேஜை வழங்குகின்றது. ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி தற்போது இந்தியாவில் ரூ. 6.86 லட்சம் தொடங்கி ரூ. 11.66 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

3. ஹோண்டா டபிள்யூஆர்-வி

ஹோண்டா டபிள்யூஆர்-வி 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஆயில் பர்னர் மோட்டார் தேர்வில் இருக்கும் டபிள்யூஆர்-வி அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.7 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

2. ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

சப்-4 மீட்டர் எஸ்யூவி மற்றும் க்ராஸோவர் என இரு ரக கலவைக் கொண்ட வாகனமே ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல். இந்த கார் அதிகபட்சமாக 23.8 கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ஃப்ரீ ஸ்டைல் காரே இந்த அதிகபட்ச மைலேஜை வழங்கும் மாடல் ஆகும்.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

1. கியா சொனெட்

இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் லிஸ்டில் முதல் இடத்தை இக்காரே பிடித்திருக்கின்றது. மிக சமீபத்தில் அறிமுகமாகி இந்தியர்களின் பிரியமான கார மாடலாக சொனெட் உயர்ந்திருக்கின்றது. இந்தகார் அதிகபட்சமாக 24.1 கிமீ வரை மைலேஜை வழங்கும். சொனெட்டின் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

அதிக மைலேஜ் தரும் டாப் 10 சப்-4மீ, க்ரஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தரக்கூடிய வாகனங்கள் இந்தியாவில் இருக்கா!!

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலும் சொனெட் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Here Is The List Of Top 10 Most Fuel Efficient Sub-4M SUVs & Crossovers Cars In India. Read In Tamil.
Story first published: Friday, April 23, 2021, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X