இந்தியாவில் படு தோல்வியடைந்த டாப்7 ஹேட்ச்பேக் கார்கள்! இந்த காருங்ககூட தோல்விய சந்திச்சிருக்கா! நம்பவே முடியல!

இந்தியாவில் மக்கள் மனதைக் கவர முடியாமல் படு தோல்வி அடைந்து வெளியேறிய ஏழு கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். எந்தெந்த கார்கள் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

ஹேட்ச்பேக் ரக கார்கள் என்றாலே சிறிய உருவம் (அடக்கமான இடங்களில் கூட பார்க் செய்து கொள்ளலாம்), விலை குறைவு மற்றும் செயல் திறன் அதிகம் பல்வேறு சிறப்புகளை அடக்கியதாக காட்சியளிக்கின்றன. இத்தகைய காரணங்களுக்காக மக்கள் மத்தியில் நல்ல டிமாண்டை ஹேட்ச்பேக் ரக கார்கள் பெற்று வருகின்றன.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஹேட்ச்பேக் ரக கார்களே முன்னணி இடங்களைப் பிடிக்கின்றன. அதேவேலையில், மக்கள் மத்தியில் அனைத்து விதமான ஹேட்ச்பேக் கார்களுக்கும் வரவேற்புக் கிடைத்து விட்டது என கூறிவிட முடியாது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

பல நிறுவனங்களின் ஹேட்ச்பேக் ரக கார்கள் மக்கள் மனதைக் கவர முடியாமல் படு தோல்வி அடைந்து சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றன. இவ்வாறு பாதியில் சந்தையை விட்டு வெளியேறிய கார்களின் பட்டியலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 7 ஹேட்ச்பேக் கார் மாடல்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வெளியிட்டுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

மாருதி சுசுகி ஜென் எஸ்டிலோ (Maruti Suzuki Zen Estilo)

இந்தியாவில் 2007ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் ஜென் காரை விற்பனைக்குக் களமிறக்கியது. ஜென் எஸ்டிலோ என்பது மிக சிறிய காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடலாகும். இவை மிகவும் சிறந்த விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறின. ஆனால், மிக விரைவில் இக்கார்களின் விற்பனை மிகக் கடுமையாக சரிந்தது. இதன் விளைவாக சந்தையை விட்டு வெகு விரைவிலேயே வெளியேற்றமும் செய்யப்பட்டது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

ஸ்கோடா ஃபேபியா (Skoda Fabia)

ஸ்கோடா நிறுவனம் ஃபேபியா காரை 2009ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். மிக அதிக சொகுசு வசதிகள் மற்றும் நல்ல பவர்டிரெயின் வசதிகளுடன் இது விற்பனைக்கு வந்தது. மேலும், நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்குக் கிடைத்த ஓரே ஒரு ஹேட்ச்பேக் மாடலாக இது காட்சியளித்தது. ஆகையால், ஆரம்பத்தில் அனைவரின் பார்வையும் இக்காரின் மீது இருந்தது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

இருப்பினும், சற்று விலை உயர்வான கார் என்பதால் இதன் விற்பனைக்குச் சற்று சரிவுடனே காணப்பட்டது. ஃபேபியா ஹேட்ச்பேக் காரை நிறுவனம் இம்போர்ட் செய்து பின்னரே இந்தியாவில் வைத்து அசெம்பிள் விற்பனைக்கு வழங்கியது. இதுவே, ஃபேபியா சற்று அதிக விலை உடன் காட்சியளிக்க காரணமாக இருந்தது. விலை அதிகமாக இருந்த காரணத்தினாலும், போட்டிகள் கூடுதலாக இருந்ததாலும் ஸ்கோடா ஃபேபியா சந்தையை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

டொயோட்டா இடியோஸ் லிவா (Toyota Etios Liva)

டொயோட்டா நிறுவனம் அதன் இடியோஸ் லிவா ஹேட்ச்பேக் கார் மாடலை இந்தியாவில் 2011ம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இசிஎஃப் (ECF) பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இக்காரை நிறுவனம் கட்டமைத்தது. செலவிடும் தொகைக்கு ஏற்ற காராக இது சந்தையில் பார்க்கப்பட்டது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

இருப்பினும், புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 இக்காரை நீண்ட நாட்கள் விற்பனையில் இருக்க விடவில்லை. ஆம், இந்த கார் புதிய மாசு உமிழ்வு விதைியை எதிர்கொள்வது கடினம் என தெரிந்து நிறுவனம் இக்காரை விற்பனையில் இருந்து வெளியேற்றிவிட்டது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

ரெனால்ட் பல்ஸ் (Renault Pulse)

இந்தியாவில் ரெனால்ட் பல்ஸ் 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரா கார் மாடலின் மறு வடிவமைக்கப்பட்ட மாடலே ரெனால்ட் பல்ஸ். கட்டுமஸ்தான உடல்வாகு செம்ம ஸ்டைலான தோற்றம் ஆகிய சிறப்புகளுடன் விற்பனைக்கு வந்தது பல்ஸ்.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

இருப்பினும், இந்தியர்களின் மனதைக் கவர இது தவறிவிட்டது. நிஸான்-ரெனால்ட் இன் வி-பிளாட்பாரத்தில் வைத்து இக்கார் கட்டமைக்கப்பட்டது. பிரீமியம் தர கார்களைக் கட்டமைக்க பயன்படுத்தப்பட்டதே இந்த பிளாட்பாரம். ஆகையால், அதிக இட வசதி, மிக சிறந்த ஹெட்ரூம் மற்றும் பெட்ரோல்-டீசல் என இரு வித எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

நல்ல பேக்கேஜை இது கொண்டிருந்த போதிலும் மக்களுக்கு இக்காரின்மீது ஆர்வம் வரவே இல்லை. இதன் விளைவாக 2017ம் ஆண்டு இக்காரை விற்பனையில் இருந்து ரெனால்ட் விலக்கிக் கொண்டது. ஆகையால், விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே படு தோல்வி அடைந்த கார்களில் ஒன்றாக பல்ஸ் மாறியது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

செவ்ரோலட் செயில் யுவிஏ (Chevrolet Sail UVA)

2012ம் ஆண்டிலேயே செயில் யுவிஏ காரை செவி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இக்காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் 2014ம் ஆண்டுக்கு முன்னர் வரை விற்பனையில் சக்கைப் போடு போட்டது. ஆனால், இதற்கு பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

விற்பனையில் பெரும் மந்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக நிறுவனம் 2016ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக விற்பனையில் இருந்து செயில் யுவிஏ காரை சந்தையை விட்டே விலக்கிக் கொண்டது. ஆகையால், படு தோல்வியுற்ற கார்களில் ஒன்றாக செவ்ரோலட் செயில் யுவிஏ மாறியது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

ஹூண்டாய் இயோன் (Hyundai Eon)

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக ஹூண்டாய் இயோன் இந்தியாவில் விற்பனைக்குக் கிளமிறக்கப்பட்டது. ஆரம்ப நிலை வாகனம் என்றால் குறைந்த விலை காராக தனது நிறுவனத்தின்கீழ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆகையால், நாம் செலவிடும் தொகைக்கு ஏற்ற காராக இது காட்சியளித்தது.

இந்தியாவில் படு தோல்வி அடைந்த டாப் 7 ஹேட்ச்பேக் கார்கள்... இந்த காருங்க கூட தோல்வி அடைஞ்சிருக்கா!! நம்பவே முடியல!!

ஆனால், பாதுகாப்பு வசதிகள் இக்காரில் பெரிய அளவில் இடம் பெறவில்லை. இதன் விளைவாக புதிய பாதுகாப்பு விதிகளை சந்திக்க முடியாமல் ஹூண்டாய் இயான் 2018-19ம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டது. இதன் வெளியேற்றம் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Here is top 7 hatchback cars list that terribly failed in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X