Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. தெரிஞ்சா இந்த காரை ரொம்ப பிடிச்சிடும்!

ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) செடான் ரக கார் பற்றிய நாம் அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அவை என்ன என்பதனை பார்க்கலாம், வாங்க.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

ஸ்கோடா (Skoda) நிறுவனம் மிக சமீபத்தில் அதன் புகழ்பெற்ற ரேபிட் (Rabid) செடான் ரக காரை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியது. இந்த காரின் வெளியேற்றும் அதன் பிரியர்கள் மத்தியில் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த துயரத்தைத் துடைக்கும் வகையில் நிறுவனம் மிக விரைவில், ரேபிட் கார் மாடலுக்கு மாற்றாக மிக விரைவில் ஸ்லாவியா (Skoda Slavia) எனும் புத்தம் புதிய கார் மாடலை இந்தியா கொண்டு இருக்கின்றது, ஸ்கோடா.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

இதன் அறிமுகம் 2022ம் ஆண்டின் தொடக்கம் அல்லது தொடக்கத்திற்குள் உள்ளாகவே நாட்டில் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி ஏற்கனவே நிறுவனம் இவ்வாகனத்தின் உற்பத்தி பணிகளையும் தொடங்கிவிட்டது. மேலும், காருக்கான புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

இவ்வாறு அனைத்து பணிகளையுமே இந்த கார் விஷத்தில் ஸ்கோடா மிக விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான ஓர் கார் மாடலில் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் என்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஸ்கோடா ஸ்லாவியா செடான் ரக கார் குறித்து அறிய வேண்டிய ஐந்து முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

வேரியண்டுகள் விபரம்:

ஸ்கோடா ஸ்லாவியா 3 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆக்டீவ் (Active), ஆம்பிசன் (Ambition) மற்றும் ஸ்டைல் (Style) ஆகியவையே அவை. இத்துடன், ஐந்து விதமான நிற தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. கேண்டீ வெள்ளை (Candy White), பிரில்லியன்ட் சில்வர் (Brilliant Silver), கார்பன் ஸ்டீல் (Carbon Steel), டொர்னாடோ ரெட் (Tornado Red) மற்றும் க்ரிஸ்டர் நீலம் (Crystal Blue) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

காரின் அளவுகள், ஸ்லாவியா 4541 மிமீ நீளத்தையும், 1752 மிமீ அகலத்தையும் மற்றும் 1487 மிமீ உயரத்தையும் கொண்டிருக்கின்றது. இதன் வீல் பேஸ் 2651 மிமீ ஆகும். ஆகையால், இக்கார் முதல் தலைமுறை ஆக்டேவியாவைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்ட காராக காட்சியளிக்கின்றது.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

தோற்றம்:

ஸ்கோடா ஸ்லாவியா முற்றிலும் ஓர் கவர்ச்சிகரமான கார் மாடலாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் முகப்பு பகுதியில் ஸ்லாவியா என்ற எழுத்துக்கள் அடங்கிய பட்டம்பூச்சி ஸ்டலைலிலான க்ரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த க்ரில்லைக் கூடுதல் கவர்ச்சியானதாக காட்டும் வகையில் செங்குத்தான ஸ்லேட்டுகள் மற்றும் குரோம் அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

இத்துடன், மெல்லிய எல்இடி ஹெட்லைட் (எல்இடி டிஆர்எல்கள் உடன்), மல்டி ஸ்போக் கம்பிகள் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், ஃபென்டர் கார்னிஷ் குரோம் பூச்சுடன், வட்ட வடிவ பனி மின் விளக்கு, சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, சி வடிவிலான எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

காரின் உட்பகுதி:

ஸ்கோடா ஸ்லாவியாவின் வெளிப்புறத்தைக் காட்டிலும் உட்புறம் பன்மடங்கு அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. 10 இன்ச் அளவுள்ள இன்ஃபெடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பில் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்ப வசதிக் கொண்டது), 8 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன் பக்கத்தில் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், இரட்டை ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், ஒயர்லெஸ் சார்ஜர், யுஎஸ்பி சி-சார்ஜிங் போர்ட், ஆட்டோ டே-நைட் ஐஆர்விஎம், ஏசி வென்டுகள் என இன்னும் பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

பாதுகாப்பு அம்சங்கள்:

ஸ்கோடா ஸ்லாவியா காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் மவுண்டுகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், இஎஸ்பி, மல்டி கொல்லிசன் பிரேக்கிங், எலெக்ட்ரானிக் டிஃப்ரன்சியல் லாக், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், டிபிஎம்எஸ் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

எஞ்ஜின்:

ஸ்கோடா ஸ்லாவியா காரில் குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் அதே எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ3 சிலிண்டர் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் என இரு விதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

Skoda Slavia பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா இந்த காரை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்!

இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ3 சிலிண்டர் எஞ்ஜினானது அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் வசதி வழங்கப்படும். இதன் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ மோட்டாரானது அதிகபட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி தேர்வு வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Here is top five highlights about skoda slavia
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X