புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

புல் பார்களும், அவற்றால் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

புல் பார் மற்றும் ஸ்டீல் பார்கள் மோதலின்போது பெரியளவில் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பயன்படுத்தப்படும் சந்தைக்கு பிறகான அணிகலன்கள் ஆகும். இந்த அணிகலனை பெரும்பாலும் எஸ்யூவி கார்களிலே காண முடியும். ஆனால், இவற்றை பயன்பாடு கூடாது என்கின்றது இந்திய வாகன சட்டம்.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

என்னங்க, கார் விபத்து போன்ற கசப்பான அனுபவங்களைச் சந்திக்கும்போது சேதம் ஏற்படாத வண்ணம் தடுக்கக்கூடிய அணிகலனுக்கு தடையா என்று கேட்கத் தோன்றலாம். இந்த தடைக்கு பின்னால் வேறொரு மிக முக்கியமான காரணம் இருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

ஏன் தடை?

காரில் ஏர் பேக் என்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யும் சென்சார்கள் காரின் முகப்பு பம்பரிலேயே இடம்பெற்றிருக்கின்றன. இவற்றின் செயல்பாட்டை தடுக்கும் வகையிலேயே புல் பார் மற்றும் ஸ்டீல் பார்கள் இருக்கின்றன.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் விபத்தின்போது சென்சார்கள் வேலை செய்வது இந்த பார்கள் தடுக்கின்றன. இதனால் ஏர் பேக் விரிவடைவதில் சிக்கல் ஏற்படுகின்றது. இந்த செயல்பாட்டில் தடை ஏற்படுவதால் பயணிகளுக்கு பெருத்த காயம் ஏற்படுகின்றது. இந்த காரணத்தினால்தான் காருக்கு முன்னால் பயன்படுத்தக் கூடிய பார்களுக்கு போக்குவரத்து சட்டம் தடை விதித்துள்ளது.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

புல் பார்களை ஏர்பேக்குகளின் நண்பனாக மாற்ற முடியுமா?

இருக்குங்க... பிரத்யேக புல் பார்கள் ஏர்பேக்குகளை இயக்கும் வகையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை ஏர் பேக் சென்சாரை இயக்கத்திற்கு துளியளவும் தடை விதிக்காது. இவை சந்தையில் தகுதி சான்றுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காரையும் விபத்தின் சேதத்தில் இருந்து காக்க முடியும், மேலும், நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

புல் பார்களால் இவ்ளோ பிரச்னையா!.. இந்த வீடியோவ பாருங்க ஏன் தடை போட்டாங்கனு உங்களுக்கே தெரியும்!!

புல் பார்களை இந்தியாவில் பயன்படுத்தலாமா?

மோட்டார் வாகன சட்ட பிரிவு 52இன் படி, ஓர் வாகனத்தின் உரிமையாளர் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள என்பதே விதியாகும். அதாவது, வாகனத்தின் உருவத்தை மாற்றுகின்ற வகையில் எந்த மாடிஃபிகேஷேனையும் செய்யக்கூடாது என்பதே விதியாகும்.

ஆகையால், ஏர் பேக் சென்சாரை பாதிக்காத புல் பாராக இருந்தாலும் அதனை பயன்படுத்தக் கூடாது என்பதே விதியாகும். இதனால்தான் ஏர் பேக் இல்லாத வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த புல் பார்களைக் கூட கடந்த காலங்களில் போலீஸார் நீக்கினர்.

எனவே சட்டத்திற்கு புறம்பான புல் பார்களைப் பயன்படுத்துவது தேவையற்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும். தொடர்ந்து, காப்பீட்டாளர்கள் காப்பீடு க்ளைமை மறுக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.

Most Read Articles
English summary
Here Is Why Govt Banned Bull Bar. Read In Tamil.
Story first published: Saturday, April 17, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X