காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் ஏன் பெற வெண்டும் என்பதற்கான காரணங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் வாருங்கள், இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

கார்களை சாலையில் இயக்க பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை எந்தளவிற்கு அவசியமோ அதே அளவு பல மடங்கு அவசியமாக ஒன்றாக பார்க்கப்படுகின்றது காப்பீடு. காப்பீடு இல்லா வாகனங்களின் இயக்கத்திற்கு இந்திய போக்குவரத்து விதிகள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தளவிற்கு மிக முக்கியமான ஒன்றாக இன்சூரன்ஸ் உள்ளது.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

ஆனால், இத்தகைய அத்தியாவசியமான ஒன்றை காப்பீட்டு நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் வழங்குவதில்லை. மாறாக, அவற்றை காலாவதி தேதியுடனே வழங்குகின்றன. ஆகையால், இதனை ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்கும் நிலைக்கு வாகன உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

இந்த புதுப்பித்தலை மிக அவசியம் என வாகன துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அது ஏன்?, என்பதற்கான காரணத்தைதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது உரிய நேரத்தில் காப்பீட்டை புதுப்பதன் அவசியம் என்ன என்பதையே நாம் இங்கு பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

கார் இன்சூரன்ஸை புதுப்பிப்பது அவசியம்

புதிதாக காரை வாங்குவது மட்டுமல்ல அதற்கான காப்பீட்டை வருடந்தோறும் புதுப்பித்து கட்டாயம் ஆகும். காப்பீடு இல்லாத வாகனத்தின் இயக்கம் சட்டத்திற்கு புறம்பானது. எனவேதான் காப்பீடு பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது கட்டாயம் என்கின்றனர்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

சட்ட சிக்கல்

காலாவதியான காப்பீட்டுடன் கார் இயங்குமானால் அதனை சட்டத்திற்கு புறம்பானதாகும். இத்தகைய வாகனங்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு அல்லது அபராதம் விதித்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுமாதிரியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க உரிய நேரத்தில் காப்பீட்டை பெறுவது அவசியம்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

காலாவதி தேதிக்கு முன்னரே காப்பீட்டை புதுப்பிக்கலாம்

காலாவதி தேதிக்கு இன்னும் ஒரு வாரங்கள் உள்ளன. இதன் பின்னர் புதுப்பித்துக் கொள்ளலாம் என எண்ணாதீர்கள். இதற்கிடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது புதுப்பித்தல் நாளை கடக்க செய்யும் வகையில் அமையலாம். இதுமாதிரியான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காலாவதி தேதிக்கு ஒரு வார காலத்திற்கு முன்னரே புதுப்பிக்கும் ஆப்ஷனை காப்பீட்டு நிறுவனங்கள் சில வழங்குகின்றன.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

இவ்வாறு செய்யப்படுவதன் வாயிலாக காவல்துறையின் நடவடிக்கையில் மட்டுமின்றி எந்தவொரு அச்சமுமின்றி வாகனத்தை பயன்படுத்த முடியும். அதேசமயம், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பிரீமியம் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆகையால், உரிய நேரத்தில் காப்பீட்டை புதுப்பிப்பது இதுமாதிரியான நேரங்களிலும் உதவும்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்

பொதுவாக விபத்து போன்ற அசம்பாவிதங்களில் நிதியுதவி வழங்குவதே காப்பீட்டின் முக்கிய நோக்கமாகும். எந்த மாதிரியான சேதமாக இருந்தாலும் உரிய இழப்பீட்டை வழங்க இது உதவும். எனவேதான் காப்பீட்டை அரசு முக்கியம் என கட்டாயப்படுத்துகின்றது.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

இது இல்லாத வாகனங்கள் விபத்து போன்ற கசப்பான அனுபவங்களைச் சந்திக்கும்போது அனைத்துவிதமான இழப்பீட்டையும் வாகனத்தின் உரிமையாளரான தனி நபரே வழங்கே வேண்டும் என்ற நிலை உருவாகின்றது. இதுவே இன்சூரன்ஸ் இல்லா வாகனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

கிரேஸ் பீரியடில் காப்பீடு நிறுவனம் பொறுப்பேற்காது

காலாவதியான காப்பீட்டை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகின்றது. ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால் அப்போது காப்பீடு நிறுவனம் எந்த பொறுப்பையும் ஏற்காது. ஆகையால், விபத்தைச் சந்தித்தால் சொந்த சொலவிலேயே உரிய இழப்பை சீர் செய்ய வேண்டும்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

ஆய்வுக்கு உட்படுத்தப்படும்

உரிய நேரத்தில் காருக்கான காப்பீட்டை புதுப்பிக்கும்போது காப்பீட்டாளர் எந்தவொரு ஆய்வையும் உங்கள் வாகனத்தில் செய்ய மாட்டார்கள். அதேசயம், நாள் தள்ளி வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போது அனைத்து ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அந்த நேரத்தில் உங்கள் வாகனத்தின் மதிப்பை அவர்கள் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

மேலும், பிரீமியம் தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவேதான் சில நாட்களுக்கு முன்னரோ, இறுதி நாட்களுக்குள்ளாகவோ காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

போனஸ்

பொதுவாக உரிய நேரத்தில் காப்பீடு செய்வதன் வாயிலாக உங்கள் பிரீமியம் தொகையில் இருந்து கணிசமான சதவீதத்தை போனஸாக நம்மால் பெற முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதாவது, தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்திடம் நாம் காப்பீட்டைப் பெறும் பட்சத்தில் காப்பீட்டு தொகை கணிசமாக குறைக்கப்படும். போனஸின வாயிலாக இத்தொகைக் குறைக்கப்படுகின்றது.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

முதல் வருடம் 20 சதவீதமும், இரண்டாவது வருடம் 25 சதவீதமும், மூன்றாவது ஆண்டு 35 சதவீதமும், நான்காவது ஆண்டு 45 சதவீதமும், ஐந்தாவது ஆண்டு 50 சதவீதமும் போனஸாக வழங்கப்படுகின்றது. இதனை புதிதாக ஓர் நிறுவனத்திடம் சென்று காப்பீடு பெறும்போது அந்நிறுவனம் உங்களுக்கு வழங்காது. ஒரே நிறுவனத்திடம் தொடர்ச்சியாக காப்பீட்டை பராமரிக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனம் உங்களுக்கான போனஸை பிரீமியத்தில் குறைத்து வழங்கும்.

காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!

அதிக பிரீமியம் தொகை

காப்பீடு பெறும்போது அனைத்து காப்பீட்டாளர்களும் ஏற்கனவே காப்பீடு உள்ளதா அல்லது காலவதியாகி விட்டதா என்ற கேள்வியை முன் வைப்பர். இது என்பதற்கான பதில் இதோ இங்கே, காப்பீட்டு காலம் காலவதியான பின்னர் புதுக்கப்பட்டால் பிரீமியம் தொகை கூடுதலாக வசூலிக்கப்படும். இதற்காகதான் முன்னரே காப்பீட்டை பெற வேண்டும் என்கின்றனர்.

Most Read Articles
English summary
Here Is Why We Need To Renew Car Insurance On Time? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X