உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

உலகளவில் மிக அதிகம் மற்றும் அதிக வேகத்தில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதவில் வழங்கியிருக்கின்றோம். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில எலெக்ட்ரிக் கார்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. வாருங்கள் இதுகுறித்த முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

உலகளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல்வேறு முயற்சிகளின் கீழ் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மானியம் வழங்குதல் மற்றும் வரி தள்ளுபடி வழங்குதல் ஆகியவற்றின் காரணத்தினால் முந்தைய கால கட்டத்தைக் காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

இதே நிலையே உலக நாடுகள் பலவற்றில் தென்படுகின்றது. அதிலும், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு வரவேற்பு மிக அமோகமாக தென்படுகின்றது. அந்தவகையில், உலகளவில் நல்ல விற்பனையைப் பெற்று வரும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். லீஸ்லோகோ (LeaseLoco) அமைப்பு நடத்திய ஆய்வின் கீழ் வெளியாகியிருக்கும் இத்தகவலை பார்க்கலாம், வாருங்கள்.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3)

உலகளவில் மிக அமோகமான வரவேற்பைப் பெறும் கார்களின் பட்டியலில் முதல் இடத்தை டெஸ்லா மாடல் 3 பிடித்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக விரைவில் இக்காரை விற்பனைக்குக் களமிறக்குவதற்கான முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டு வருகின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரியை குறைக்குமாறு ஒன்றிய அரசிடம் நிறுவனம் கோரிக்கை வைத்திருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் மேற்கொண்ட இம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அது முயற்சியைத் தொடங்கியுள்ளது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

டெஸ்லா மாடல் 3 ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் வரை விற்பனையை பெற்று வருகின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 568கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும். சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் 175 மைல் தூரம் வரை பயணிக்கக் கூடிய சார்ஜ் திறனை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

உலிங் ஹாங் குவாங் மினி இவி (Wuling Hong Guang Mini EV):

உலிங் ஹாங் குவாங் மினி இவி ஓர் சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இக்காரின் உற்பத்தியாளர் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இக்காரை விற்பனைக்கு வழங்குகின்றார்.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு அடுத்தபடியாக மிக அதிக மற்றும் வேகமாக விற்பனையாகும் காராக உலிங் ஹாங் குவாங் மினி இவி இருக்கின்றது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 14 யூனிட்டுகள் வீதத்தில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அண்மையில்தான் நான்கு லட்சம் யூனிட் என்ற விற்பனை சாதனை இந்த தனியொரு எலெக்ட்ரிக் கார் பெற்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y):

டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு மின்சார காராக மாடல் ஒய் இருக்கின்றது. மாடல் 3க்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் இது ஆகும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 11 யூனிட்டுகள் என்ற வீதத்தில் இக்கார் விற்பனையாகி வருகின்றது. டெஸ்லா மாடல் ஒய் மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இக்கார் உச்சபட்சமாக ஓர் முழுமையான சார்ஜில் 455 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும்.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

நிஸான் லீஃப் (Nissan Leaf)

மேலே பார்த்த கார்களைப் போலவே இந்த மின்சார காரும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், அண்மையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ்-க்கு பரிசாக வழங்குவதற்காக இக்காரை இறக்குமதி செய்து அவருக்கு வழங்கியது. மிகவும் பழமையான மற்றும் உலகின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பட்டத்தை லீஃப் சூடியிருக்கின்றது. இந்த கார் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

பிஏஐசி இயூ-சீரிஸ் (BAIC EU-Series)

சீன நிறுவனத்தின் தயாரிப்பு இதுவாகும். உலகின் மிக அதிக வேகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஆண்டிற்கு சுமார் 65,333 யூனிட் விற்பனையை இக்கார் பெற்று வருகின்றது. பட்ஜெட் விலை சிறந்த ரேஞ்ஜ் திறன் ஆகியவற்றைக் கொண்டு மின்சார வாகனமாக இது விளங்குகின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 (Volkswagen ID.3)

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 இந்த கார் ஆண்டிற்கு 54,495 யூனிட் என்ற வீதத்தில் விற்பனையைப் பெற்று வருகின்றது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 6 யூனிட்டுகள் என்ற வீதத்தில் இந்த மின்சார கார் விற்பனையாகி வருகிறது. மிகவும் கவர்ச்சியான மற்றும் ஸ்டைலான தோற்றம் கொண்ட மின்சார காராக இது இருக்கின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

செயிக் பவுஜன் இ-சீரிஸ் இவி (SAIC Baoujun E-Series EV)

ஏழாவது இடத்தில் இருக்கும் இந்த மின்சார கார் ஆண்டிற்கு 53,877 யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில் செய்க் பவுஜன் இ-சீரிஸ் இவி இடம் பிடித்து விடுகின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

ஹூண்டாய் கோனா (Hyundai Kona)

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார கார் இதுவாகும். நிறுவனம் இதனை இந்தியாவிலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. மேலே பார்த்த எந்த மின்சார காரும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஆறு யூனிட் என்ற வீதத்தில் இக்கார் விற்பனையாகி வருகின்றது. ஆண்டிற்கு தோராயமாக 52 ஆயிரம் யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

ஆடி இ-ட்ரான் (Audi e-Tron)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு மின்சார காராக ஆடி இ-ட்ரான் இருக்கின்றது. இது ஓர் சொகுசு ரக மின்சார வாகனம் ஆகும். ஸ்டாண்டர்டு மாடல், ஸ்போர்ட்பேக் எடிசன், ஜிடி மற்றும் ஆர்எஸ் வெர்ஷன் நான்கு விதமான தேர்வுகளில் ஆடி இ-ட்ரான் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவையனைத்தும் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த கார் ஆண்டிற்கு 47,324 யூனிட் என்ற வீதத்திலும், ஒரு மணி நேரத்திற்கு நான்கு யூனிட்டுகள் என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகி வருகின்றது.

உலகின் மிக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் எது?.. இந்தியாவிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்குது!

ரெனால்ட் ஜோயி (Renault Zoe)

மிகவும் சிறிய மற்றும் அழகிய மின்சார காராக ரெனால்ட் ஜோயி இருக்கின்றது. இந்த காரை கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்தியது. ஆகையால் இக்கார் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்தியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ரெனால்ட் ஜோயி ஆண்டிற்கு சுமார் 35 ஆயிரம் யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகி வருகின்றது.

Most Read Articles

English summary
Here is world s top 10 fastest selling e cars list
Story first published: Friday, October 22, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X