Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

Corolla Altis காருக்கு அடுத்ததாக Toyotaவின் சி பிரிவு செடான் காராக Yaris 2018ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் Yaris-க்கு கிடைத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் மிகவும் குறைவு தான்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

ஏனெனில் விற்பனையில் இருக்கும் மற்ற செடான் கார்களுடன் ஒப்பிடுகையில், Yaris பல வசதிகளை இழந்துள்ளது. இருப்பினும் இதன் விலையினை ரூ,10- 15 லட்சம் வரையில் Toyota நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த செடான் காரின் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுவதில்லை. இது மிக பெரிய குறையாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

இதனாலேயே விற்பனை பட்டியலில் எப்போது Yaris முன்னிலையில் வந்ததில்லை. இருப்பினும் நம் சந்தைக்கு இதன் ஹேட்ச்பேக் வெர்சன் மிகவும் ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறோம். இந்த திட்டம் Toyota நிறுவனத்திற்கும் உள்ளது. இதனால் தான் Yaris ஹேட்ச்பேக் காரை சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தியுள்ளது.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

ஆனால் அறிமுக குறித்த எந்த விபரத்தையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை. Toyota Yaris ஹேட்ச்பேக் கார் எந்தெந்த விஷயங்களில் சிறந்ததாக இருக்கும்? இந்த ஹேட்ச்பேக் காருக்கு ஏன் நாம் காத்திருக்க வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களுக்கான சந்தை வளர்ந்து வருவதை முதலில் இந்த இடத்தில் கூறி கொள்கிறோம். இதனாலேயே Yaris செடான் காரை காட்டிலும், ஹேட்ச்பேக் வெர்சன் நமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறிகிறோம்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

Yaris காரை தற்சமயம் வைத்திருப்பவர்களில் கேட்டு பாருங்கள், தாங்கள் வைத்திருந்த சிறந்த கார்களுள் ஒன்று இது என கூறுவர். ஏனெனில் மிகவும் வலிமையானதாக உருவாக்கப்படும் Yaris, அதேநேரம் மிகவும் சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடியதாக உள்ளது.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

அதுமட்டுமின்றி Toyota கார்கள் என்றாலே மிகவும் நம்பகத்தன்மையான கார்களாக உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டு வருகின்றன. 1 லட்ச கிமீ தூரத்தை கடந்த Toyota கார்கள் ஏகப்பட்டவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

அதிகப்படியான இயக்கத்தால் பழுதாகினாலும், Toyata கார்களை பொறுத்தவரையில் பெரிய அளவில் செலவு ஆகாது. இதனால் தான் Toyota கார்கள் மிகவும் நம்பகமானவைகளாக விளங்குகின்றன. கேபின் இடவசதியில், Toyota Yaris மிகவும் சவுகரியமானது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

செடானிலேயே இவ்வளவு சவுகரியம் கிடைக்கும்போது, கூடுதல் உயரத்துடன் கொண்டுவரப்படும் இதன் ஹேட்ச்பேக் வெர்சனில் நிச்சயம் இதனை காட்டிலும் நன்கு காற்றோட்டமான கேபினை எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனையில் உள்ள ஹேட்ச்பேக் கார்களில் ரைடிங் தரமும் சிறப்பானதாக உள்ளது.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

இதனையும் Yaris ஹேட்ச்பேக்கின் வடிவமைப்பின்போது நிச்சயம் Toyata கருத்தில் எடுத்து கொள்ளும். Toyota பிராண்டில் இருந்து ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் க்ளான்ஸா என்ற மாடல் உள்ளது. ஆனால் இது உண்மையில் Toyota நிறுவனத்திற்கே உண்டான டிஎன்ஏ உடன் வடிவமைக்கப்பட்ட கார் கிடையாது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

Suzuki நிறுவனத்துடனான கூட்டணியில் Maruti Suzuki Baleno-வின் ரீபேட்ஜ்டு வெர்சனாகவே Glanza-வை Toyota கொண்டுவந்தது. இதனால் தனது பிராண்டின் தனி அடையாளத்துடன் புதிய பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காரை கொண்டுவர Toyota ஆர்வம் காட்டும்.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

அத்துடன் போட்டி மிகுந்த பிரிவு என்பதால், Tata Altroz, Hyundai i20 போன்ற தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக Yaris ஹேட்ச்பேக்கை கொண்டுவர இந்த நிறுவனம் முயற்சிக்கும். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு கீழ் எந்தவொரு Toyota காரும் (Glanza-வை தவிர்த்து) விற்பனையில் இல்லை.

Yaris செடானை காட்டிலும் Yaris ஹேட்ச்பேக் ஏன் சிறந்தது? தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

முன்பு விற்பனையில் இருந்த Etios மற்றும் Liva கார்களின் விற்பனையை கடந்த 2020ஆம் ஆண்டில் Toyota நிறுத்தி கொண்டது. இதையெல்லாம் பற்றி நிச்சயம் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் யோசிக்கும். ஆதலால் Yaris ஹேட்ச்பேக் இந்தியாவில் Toyota-வின் வெற்றி மாடலாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Reasons Why We Want The Toyota Yaris Hatchback In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X