நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்! ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்! இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

நவீன கால காருக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில் அம்பாஸ்டர் கார் ஒன்று உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் தற்போதைய நவீன கால வாகனங்களுக்கே சவால் விடும் வகையில் மாடிஃபை செய்திருப்பதாக (மாற்றியமைத்திருப்பது) தகவல்கள் வெளியாகியுள்ளன. இது புதிய விலையுயர்ந்த வாகனங்களுக்கே சவால் விடும் வகையில் உருமாறியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

மிகவும் ஸ்டைலான மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றிருக்கும் அம்பாஸ்டர் கார் குறித்த முக்கிய விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார்கள் வெளியேறின.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகளாகின்றன. இருப்பினும், இந்திய சாலையில் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார்கள் கம்பீரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தற்போதும் பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் அம்பாஸ்டர் காரையே அதன் உரிமையாளர் நவீன கார்களை தோற்கடிக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளார்.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

கேரளா மாநிலம், கன்னூரைச் சேர்ந்தவர் மானஃப், இவரே 1979 ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை மிகவும் அழகான காராக மாற்றியமைத்தவர். காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இதன் காரணத்தினாலேயே 21ம் நூற்றாண்டின் நவீன கால கார்களுக்கே டஃப் கொடுக்கும் வாகனமாக அம்பாஸ்டர் மாறியிருக்கின்றது. தரமான ஆடியோ சிஸ்டம், சிறந்த பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரிக் எஞ்ஜின் கூலிங் ஃபேன், ஏசி, எலெக்ட்ரானிக் இருக்கைகள் மற்றும் திரை உள்ளிட்டவை அம்பாஸ்டர் காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

மேலும், முன்பு வெள்ளை நிறத்தில் காட்சியளித்த அம்பாஸ்டருக்கு புதிய நிறமாக கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, காரில் துருப்பிடித்து கிடந்த உடற்பாகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இதையடுத்தே புதிய நிறம் வழங்குதல் மற்றும் புதிய டிசைனிலான க்ரில் ஆகியவற்றை சேர்த்தல் பணியை மாடிஃபிகேஷன் குழுவினர் செய்திருக்கின்றனர். காரின் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்காக முகப்பு மற்றும் பின் பகுதியில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து, பழைய மின் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி மின் விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி அனைத்து வீல்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால் 1979 அம்பாஸ்டர் கார் ஓர் கலையோவியமாகவே மாறியிருக்கின்றது.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இந்த அனைத்து மாற்றங்களைக் காட்டிலும் அதிக பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் சில தொழில்நுட்பம் சேர்ப்பு வேலையும் அம்பாஸ்டர் காரில் செய்யப்பட்டிருக்கின்றது. ரிமோட் வசதி, இதன் மூலம் காரை ஸ்டார்ட் செய்வது, லாக் செய்வது, ஜன்னல் கண்ணாடிகளை மூடுவது உள்ளிட்ட செயல்களை செய்ய முடியும்.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இதுவே காரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களிலேயே மிக முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது. இத்துடன், காருக்குள் இருந்த பழைய இருக்கைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலாக புதிய அதிக மிருதுவான அனுபவம் கொண்ட இருக்கைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

மேலும் பழைய மேட், காருக்குள் இடம் பெற்றிருந்த பிற துணி வகைகள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆகையால், அட்டகாசமான ஓர் சொகுசு காருக்கு இணையாகவே அம்பாஸ்டர் மாறியிருக்கின்றது. ஆனால், இந்த காரின் எஞ்ஜினில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய தகவல் தெரிய வரவில்லை.

நவீன கால காராக மாறிய அம்பாஸ்டர்... ரிமோட், ஏசி, டிவி என அட்டகாசமான அம்சங்களுடன்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

இதுவரை செய்யப்பட்ட மாற்றங்களுக்கு மட்டும் ரூ. 6 லட்சம் வரை செலவாகியிருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த பணத்திற்கேற்ற நல்ல தகுதியான மாற்றத்தை அம்பாஸ்டர் கார் பெற்றிருக்கின்றது. நிச்சயம் இந்த கார் சாலையில் செல்லும்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையலாம்.

Image Courtesy: Basheer Mixmax

அதேசமயம், நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயமும் இருக்கின்றது. அது, இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் என்பது தடை செய்யப்பட்ட செயலாகும். இருப்பினும், வாகன ஆர்வலர்கள் பலர் இந்த விதியை மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hindustan Ambassador Restored With Modern Features. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X