Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலக புகழ்பெற்ற நடிகருக்கு சொந்தமான சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... யார் அவர் தெரியுமா! சொன்னா நம்ப மாட்டீங்க
உலக புகழ்பெற்ற நடிகர் ஒருவரின் சொகுசு கார் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார், என்ன கார் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் இப்பதிவில் காணலாம்.

பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடித்தவர் சீன் கோன்னரி. இவர் பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றே தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது 1986 மாடல் பிஎம்டபிள்யூ 635 சிஎஸ்ஐ காராகும். இக்காரே தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இங்கிலாந்து நாட்டின் பதிவெண்களைத் தாங்கி நிற்கும் இக்கார் 34 ஆண்டுகள் பழைய காராகும். இருப்பினும் இந்த வாகனம் பார்ப்பதற்கு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. அதன் எஞ்ஜினும் சூப்பர் திறன் வாய்ந்ததாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இக்காருக்கான ஏலமே தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகின்றது.

இது மிகவும் கிளாசியான சொகுசு கார் என்பதாலும், உலக புகழ்பெற்ற நடிகர் சீன் கோன்னரி பயன்படுத்திய வாகனம் என்பதாலும் பலர் இக்காரை ஏலம் எடுக்க போட்டிக் கொண்டிருக்கின்றனர். இதன்படி தற்போது வரை 17,250 யூரோக்கள் வரை ஏலம் கேட்கப்பட்டிருக்கின்றது.

ஏலத்தின் இறுதி நாள் ஜனவரி 15ம் தேதி ஆகும். அன்றே இக்காரை ஏலத்தில் எடுக்க கடைசி நாள் ஆகும். ஆகையால், இன்னும் இருநாட்கள் இருப்பதால் இதன் ஏலத் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், சுமார் 30 ஆயிரம் யூரோக்கள் முதல் 60 ஆயிரம் யூரோக்கள் வரையில் ஏலம் நீளலாம் ஏலக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய ஏல மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15.41 லட்சம் ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். விரைவில் இதைவிட இரு மடங்கு அதிக மதிப்பில் இக்கார் விற்கப்படும் என்றே குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர். இக்காரை சீன் கோன்னரி கடந்த 1998ம் ஆண்டே பயன்பாட்டிற்கு வாங்கியதாகக் கூறப்படுகின்றது.

அப்போதில் இருந்து தற்போது வரை மிகுந்த பாதுகாப்புடன் அக்கார் பார்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேலையிலும் தனி கராஜில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் இக்காரின் எஞ்ஜின் மற்றும் உடல்பகுதி தற்போதும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் புத்துணர்வுடன் காணப்படுகின்றது.

இக்காரில் 6 சிலிண்டர் எஞ்ஜினே இடம்பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 220 பிஎச்பி மற்றும் 232 ஐபி/எஃப்டி டார்க்கை திறனை வெளிப்படுத்தக் கூடியது. மேலும், மணிக்கு 230 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது. வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பகுதியும் மிகச் சிறப்பானதாக காட்சியளிக்கின்றது.

இதன் இருக்கைகள் பசுபிக் கடல் நீல நிறத்தில் இருக்கின்றது. மேலும், இதன் கார்பெட், மேட், டூர் கார்ட், சென்டர் கன்சோல் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட பல்வேறு கூறுகள் நீக்கப்பட்டு, புதிய அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற செயல்பாடுகளின் காரணத்தினாலயே இப்போது இக்கார் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த 6 செரீஸ் காரை 1976ம் ஆண்டிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. பின்னர் 1989ம் ஆண்டிலேயே இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியது. இருப்பினும், உலகின் முக்கிய நபர்கள் சிலரிடத்தில் மட்டும் தற்போதும் இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது. அவ்வாறு, பிஎம்டபிள்யூ 635ஐ சொகுசு காரை பயன்படுத்தி வந்த சீன் கோன்னரியே தற்போது அக்காரை விற்பனைக்கு அறிவித்திருக்கின்றார்.