ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான சப்-காம்பேக்ட் செடான் ரக கார்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் (Honda Amaze) திகழ்கிறது. அத்துடன் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா கார்களில் ஒன்று என்ற பெருமையும் அமேஸ் சப்-காம்பேக்ட் செடானுக்கு உள்ளது. மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் அவ்ரா, ஃபோர்டு அஸ்பயர் உள்ளிட்ட கார்களுடன் ஹோண்டா அமேஸ் போட்டியிட்டு வருகிறது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ், 3 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹோண்டா அமேஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் இன்று (ஆகஸ்ட் 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2021 ஹோண்டா அமேஸ் காரின் விலையை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனை ஹோண்டா நிறுவனம் இன்று அறிவித்தது. ஹோண்டா அமேஸ் தனிப்பட்ட முறையில் கார் வாங்குபவர்கள் மத்தியிலும், கேப் நிறுவனங்களை நடத்துபவர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையை ஹோண்டா மிக சவாலாக நிர்ணயித்துள்ளது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

சந்தையை விட்டு வெளியேறவுள்ள பழைய ஹோண்டா அமேஸ் மாடல், 6.32 லட்ச ரூபாயில் இருந்து 11.11 லட்ச ரூபாய் (எக்ஸ்ஷோரூம், புது டெல்லி) வரையிலான விலையில் கிடைத்தது. இந்த சூழலில், புதிய ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஹோண்டா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் 21 ஆயிரம் ரூபாயை செலுத்தி 2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் ஹோண்டாவின் ஆன்லைன் சேல்ஸ் பிளாட்பார்மில் முன்பதிவு தொகை வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்திலும், கேபினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் முன் பக்கத்தில் புதிய க்ரில் அமைப்பை பெற்றுள்ளது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் எல்இடி ப்ரொஜெக்டர் லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் புதிய ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் தொடர்பாக பல்வேறு டீசர்களை வெளியிட்ட பிறகு, இறுதியாக இந்த புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 6.32 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 11.15 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். பழைய மாடலின் ஆரம்ப விலையும், புதிய மாடலின் ஆரம்ப விலையும் ஒன்றுதான். இதில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் பழைய மாடலின் டாப் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் புதிய மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 4 ஆயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது. E, S மற்றும் VX என மொத்தம் 3 ட்ரிம் லெவல்களில், 2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் கிடைக்கும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், ஒரு சில புதிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எனினும் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டிசைனை பொறுத்தவரை பெரும்பாலான மாற்றங்கள் முன் பகுதியில்தான் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் கேபின் டிசைன் கிட்டத்தட்ட ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலை போலவேதான் உள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இன்டீரியரில் ஒரு சில மாற்றங்களை புதிய ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன்படி டேஷ்போர்டு மற்றும் ஸ்டியரிங் வீலில் ஹோண்டா நிறுவனம் புதிய சில்வர் அசெண்ட்களை வழங்கியுள்ளது. கருப்பு மற்றும் பழுப்பு இன்டீரியர் உடன் இது நன்றாக பொருந்தி போகிறது. அதே சமயம் 920 ஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில், 100 ஹெச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் 80 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda amaze facelift launched in india here are all the details
Story first published: Wednesday, August 18, 2021, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X