Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா எஸ்பி125 பைக்கிற்கு அதிரடி பணம் தள்ளுபடி அறிவிப்பு! ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் பைக்கை எடுத்து செல்லலாம்
ஹோண்டா எஸ்பி125 பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், அப்போ உங்களுக்கான நேரம் இதுதான். ஏனெனில் இந்த ஹோண்டா பைக்கிற்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அதன் அன்றாட பயன்பாட்டு மோட்டர்சைக்கிளான எஸ்பி125 பைக்கிற்கு 5 சதவீத பணம் தள்ளுபடியை ரூ.5 ஆயிரம் வரையில் அறிவித்துள்ளது.

அதாவது இந்த சலுகை அறிவிப்பின்படி ஹோண்டா எஸ்பி125 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் பைக்கின் மொத்த தொகையில் அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் வரையிலான பணத்தை சேமிக்க முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லப்படியாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை பெற வாடிக்கையாளர் டெபிட் கார்ட் அல்லது க்ரெட் கார்ட் மூலம் மாதத்தவணையில் பைக்கை வாங்க வேண்டும்.

இதற்காகவே பைக்கின் மொத்த தொகையையும் மிகவும் குறைவான 6.5% வட்டி விகிதத்துடன் மாதத்தவணையில் செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் ரூ.2,499 என்ற குறைந்த முன் தொகையை கொண்ட மாதத்தவணை திட்டத்தை தேர்வு செய்தும் ஹோண்டா எஸ்பி125 பைக்கை சொந்தமாக்கி கொள்ளலாம்.

மேற்கூறிய சலுகைகள் அனைத்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. அவற்றை பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா எஸ்பி125 பைக்கின் விலைகள் ரூ.76,074 (ட்ரம் ப்ரேக்) மற்றும் ரூ.80,369 என்ற அளவுகளில் உள்ளன. இந்த இரு வேரியண்ட்களையும் ஸ்ட்ரைக்கிங் பச்சை, இம்பெரீயல் சிவப்பு மெட்டாலிக், பேர்ல் சைரன் நீலம் மற்றும் மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் என்ற நான்கு விதமான நிறங்களில் பெறலாம்.

அதேபோல் இந்த நான்கு நிற தேர்வுகளிலும் ஹோண்டாவின் ப்ரோகிராம்டு ஃப்யுல் இன்ஜெக்ஷன் (PGM-FI) மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) உடன் ஹோண்டா ஈக்கோ தொழிற்நுட்பத்தை கொண்ட 124சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 10.88 பிஎஸ் மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 10.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 5-ஸ்போக் அலாய் சக்கரங்களில் இயங்கும் ஹோண்டா எஸ்பி125 பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஜிட்டல் தரத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.