வைரஸை அழிக்கும் காற்று வடிகட்டி! இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இருக்கணும்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வடிகட்டியின் பலன் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து காணப்பட்டாலும், இன்றளவும் இந்த வைரசால் கணிசமானோர் பாதிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் மக்கள் வைரஸ் பாதிப்பால் இறந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது தற்போதும் கட்டாயமாக உள்ளது. அதேவேலையில், தடுப்பு மருந்து செலுத்துவது அதிகரித்திருப்பதால் நோயின் தாக்கம் குறைந்து காணப்படுகின்றது. இது கொரோனா வைரஸ் படிபடியாக குறைந்து வருவதை உணர்த்துகின்றது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

இருப்பினும், வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தாத நிலை தென்படுகின்றது. ஆகையால், தனது இந்திய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று கார்களுக்கான காற்று வடிகட்டியை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காற்று வடிகட்டியின் முக்கிய பணி, காரின் கேபினை தூய்மையானதாக மாற்றுவதாகும். அதாவது, கேபினுக்குள் இருக்கும் காற்றை தூய்மையானதாக மாற்றும்.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

வைரஸ், பாக்டீரியா, நுண்-துகள்கள் மற்றும் கிருமிகள் ஆகியவற்றை அழிக்கும் திறன் கொண்டதே இந்த காற்று வடிகட்டி. இத்துடன், அதிக கடினமான விஷ வாயுக்களைக்கூட தூய்மைப்படுத்தும் திறனை இந்த வடிகட்டிக்கு ஹோண்டா வழங்கியிருக்கின்றது. பி52.5 மற்றும் ஆக்டிவேட் கார்பன் வசதியை நிறுவனம் இதில் வழங்கியிருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான அடுக்குகளால் கார் கேபின் ஃபில்டரை ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டி அலர்ஜி அடுக்கு, ஆக்டிவேடட் கார்பன் அடுக்கு, பேஸ் அடுக்கு மற்றும் எலெக்ட்ரிக்கல்லி சார்ஜட் அடுக்கு ஆகியவற்றால் வடிகட்டி காற்று வடிகட்டி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவையே நோய் தொற்று மற்றும் அலர்ஜி ஆகியவற்றை ஏற்படுத்தும் கிருமி மற்றும் பிற துகள்களைக் காருக்குள் இருந்து வெளியேற்ற உதவுகின்றன.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

ஹோண்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் ஜாஸ், அமேஸ், டபிள்யூஆர்-வி மற்றும் சிட்டி ஆகிய மாடல் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த அனைத்து கார் மாடல்களுக்கும் இந்த காற்று வடிகட்டியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

இதனை தற்போது ஹோண்டா கார் விற்பனையாளர்கள் வாயிலாக நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், நாடு முழுவதும் உள்ள ஹோண்டா கார் விற்பனையாளர்கள் இடத்தில் இந்த கருவியை வாங்கிக் கொள்ள முடியும். ஹோண்டா நிறுவனம் ஃப்ரியூடென்பெர்க் (Freudenberg) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

வாகனங்களில் பயணிக்கும்போது அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இக்கருவியை ஹோண்டா உருவாக்கி இருக்கின்றது. இதற்காக, பல்வேறு மிக சிறந்த தொழில்நுட்பங்களை இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி உள்ளன. அண்மைக் காலங்களாக வைரஸைப் போலவே காற்று மாசுபாடும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

இவையனைத்தில் இருந்தும் தனது கார் பயனர்களைக் காக்கும் வகையில் புதிய காற்று வடிகட்டியை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பெருமளவும் உதவும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக 5 மைக்ரான் அளவுள்ள சிறு துகள்களைக்கூட இது அழித்துவிடும்.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, வாகன உலகம் கடும் பாதிப்பை அடைந்திருக்கின்றது. உற்பத்தி குறைவு, விற்பனைக் குறைவு ஆகியவற்றில் சிக்கி தவித்து வருகின்றன. தற்போதும், செமி கன்டக்டர்கள் போன்ற சிப் தட்டுப்பாட்டால் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகன தயாரிப்புகளை குறைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வைரஸ்களை அழிக்கும் காற்று வடிகட்டி... இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல கார் நிறுவனம்! எல்லா காருலையும் இது இருக்கணுங்க!

இதனால், குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்களை டெலிவரி கொடுக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. ஏற்கனவே சில வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் சிப் தட்டுப்பாடு மேலும் டிமாண்டை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக சில நாடுகளில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விலைக் கூட அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆம், புதிய கார்களைக் காட்டிலும் சில மடங்கு அதிக விலையில் செகண்டு ஹேண்ட் கார்கள் மேலைநாடுகளில் விற்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda anti virus cabin air filter launched in india
Story first published: Tuesday, October 19, 2021, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X