2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

சிவிக் எஸ்ஐ என்கிற பெயரில் ஹோண்டா நிறுவனம் அதன் பிரீமியம் செடான் காரான சிவிக்கின் செயல்திறன்மிக்க வெர்சனை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய ஹோண்டா சிவிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

புதிய தலைமுறை சிவிக் செடான் கார் முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சிவிக் எஸ்ஐ மாடல் உலகளாவிய சிவிக் செடான் கார்கள் வரிசையில் அதி-செயல்திறன்மிக்க சிவிக் ஆர் மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

சிவிக் ஆர் மாடலை போன்று புதிய சிவிக் எஸ்ஐ மாடலும் வழக்கமான சிவிக் செடானில் இருந்து வேறுப்படும் வகையில் மாறுப்பட்ட வெளிப்புற மற்றும் உட்புற ஸ்டைலிங்கை சில வேரியண்ட்களில் பெற்று வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், ‘செயல்திறன்மிக்க கார்' என்பதை நியாயப்படுத்தும் விதமாக காரின் மொத்த வடிவமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய சிவிக் எஸ்ஐ காரானது ஸ்டாண்டர்ட் சிவிக் செடானை காட்டிலும் அகலமானது மற்றும் நீளமானது. கூடுதல் முரட்டுத்தனமான வடிவிலான முன்பக்க பம்பர், பளபளப்பான கருப்பு நிறத்தில் பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் இரட்டை-முனை எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவற்றை சிவிக்கின் வழக்கமான வேரியண்ட்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் இந்த புதிய சிவிக் மாடல் பெற்றுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

மேலும் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடி சில்களையும் கருப்பு நிறத்தில் புதிய சிவிக் எஸ்ஐ கார் கொண்டுள்ளது. இதன் 18-இன்ச், 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பிரத்யேகமான மேட் கருப்பு நிறத்தில் உள்ளன. இதே மேட் கருப்பு நிறத்தை எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல்களுடன் இணைக்கப்பட்ட தேன்கூடு டிசைனிலான முன்பக்க க்ரில் பகுதியிலும் பார்க்க முடிகிறது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

பிரீமியம் தோற்றத்திற்காக, பளபளப்பான கருப்பு நிற பேனல்கள் காரின் முன்பக்க க்ரில் மற்றும் பெரிய ஏர் டேம்-ஐ சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து சிவிக் எஸ்ஐ காரின் மற்ற பகுதிகள் அனைத்தும் பிளாசிங் ஆரஞ்ச் பேர்ல் என்கிற நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறத்திற்கு ஏற்ப இந்த புதிய காரின் உட்புற கேபினையும் அதே அளவிற்கு ஸ்போர்டியான தோற்றத்தில் ஹோண்டா வடிவமைத்துள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

இதன்படி முன்பக்கத்தில் பக்கெட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் தடிமனாக, தோள்பட்டைக்கான சப்போர்ட் உடனான இந்த முன்பக்க பக்கெட் இருக்கைகள் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவரும் என ஹோண்டா நம்பிக்கை கொண்டுள்ளது. இருக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிறத்தை காரின் உள்ளே கதவு பேனல்கள் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

டேஸ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ள தேன்கூடு டிசைன் ஒட்டுமொத்த கேபினிற்கும் கூடுதல் அழகு சேர்க்கிறது. இவற்றுடன் காரின் என்ஜின் அமைப்பில் குறிப்பிடத்தக்க அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. சிவிக் செடான் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு விடெக் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

புதிய சிவிக் எஸ்ஐ மாடலில் இந்த என்ஜின் 5 எச்பி குறைவாக 200 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்துமாம். மேலும், என்ஜினின் ஆற்றல் முன்பை காட்டிலும் எளிதாக அணுகக்கூடியதாகவும், முன்பை விட பரந்த வளைவில் கிடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஹோண்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

என்ஜின் அமைப்பில் இரட்டை-நிறை ஃப்ளை சக்கரத்திற்கு மாற்றாக, ஒற்றை-நிறை யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக என்ஜின் அமைப்பின் எடை கிட்டத்தட்ட 26 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அமைப்பிலும் 10%-சிறிய த்ரோகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கியர் மாற்றமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

ரிவர்ஸ்-மேட்சிங் மோட் ஆனது சிவிக் ஆர் காரில் இருந்து அப்படியே புதிய சிவிக் எஸ்ஐ மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை சிவிக் செடானில் ஏற்கனவே விறைப்பான சேசிஸ் தான் வழங்கப்படுகிறது. இது தற்போது சிவிக் எஸ்ஐ ட்ரிம்-இல் புதிய சுருள்கள் மற்றும் நிலையான பார்கள் மூலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிவிக் எஸ்ஐ கார் உலகளவில் வெளியீடு!! 200 பிஎச்பி என்ஜின் ஆற்றல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன்...!

இதன் மூலமாக காரின் ஹேண்ட்லிங் சிறப்பானதாக மாறியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 12.3 இன்ச்சிலும், பின் சக்கரத்தில் 11.1 இன்ச்சிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிவிக் எஸ்ஐ இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் இந்தியாவில் ஹோண்டா சிவிக் விற்பனையில் இல்லை.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2022 Honda Civic Global Debut.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X