ஹோண்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

ஷாங்காய் ஆட்டோ ஷோவில் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை வெளியிட்டுள்ளது ஹோண்டா கார் நிறுவனம். இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. சிறிய வகை எலெக்ட்ரிக் கார்களையும், எஸ்யூவி வகையில் எலெக்ட்ரிக் கார்களையும் கொண்டு வருவதற்கான திட்டங்களுடன் செயலாற்றி வருகின்றன. அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கான்செப்ட் மாடலை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

ஷாங்காய் ஆட்டோ ஷோவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாடல் ஹோண்டா e:prototype என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. ஆண்டு இதன் தயாரிப்பு நிலை மாடலானது சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை சர்வதேச அளவில் கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதில், இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி முதல் மாடலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது போன்ற பரிமாணத்திலும், டிசைன் அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட தனித்துவ டிசைன் அம்சங்களுடன் இது முற்றிலும் புதியதாக தெரிகிறது.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இதன் முகப்பில் உள்ள எல்இடி விளக்குடன் கூடிய லோகோவில் சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வலிமையான தோற்றத்தை தரும் பாடி கிளாடிங் சட்டங்கள், பின்புறத்தில் லைட் பார் அமைப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் மூன்றாம் தலைமுறை ஹோண்டா கனெக்ட் தொழில்நுட்ப வசதி மற்றும் ADAS தொழில்நுட்ப வசதி, இன்டர்நெட் வசதியுடன் காரில் நேரடியாக அப்டேட் கொடுக்கும் தொழில்நுட்பம், வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்பம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

ஸ்மார்ட்ஃபோன் மூலமாக காரை திறந்து மூடும் வசதி, ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதிகளும் இடம்பெறும். ஆனால், இந்த காரின் பேட்டரி, ரேஞ்ச், பவர் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப விபரங்களை ஹோண்டா வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
Honda has unveiled e:prototype electric SUV concept at Auto Shanghai 2021.
Story first published: Wednesday, April 21, 2021, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X