முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

கிட்டத்தட்ட 18 வருடங்களாக விற்பனையில் இருந்த ஹோண்டா ஜாஸின் தயாரிப்பு பணிகள் மலேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

மலேசிய நாட்டு சந்தையில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை கண்டு இருக்கும் மாடல் ஹோண்டா ஜாஸ் ஆகும். இத்தனை தலைமுறைகளில் இந்த ஜப்பானிய ஹேட்ச்பேக் கார் மலேசியாவில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

இருப்பினும் ஜாஸ் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை அந்த நாட்டில் நிறுத்தும் முடிவிற்கு ஹோண்டா வந்துள்ளது. இதன்படி மலேசியா பெகோ, மேலகா பகுதியில் உள்ள ஹோண்டாவின் தொழிற்சாலையில் இருந்து கடைசி ஜாஸ் கார் தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

லுனார் சில்வர் நிறத்தில் காட்சியளிக்கின்ற இந்த கடைசி ஜாஸ் காரை சுற்றிலும் தொழிற்சாலை பணியாளர்கள் அமர்ந்திருப்பதை மேலுள்ள படத்தில் காணலாம். பி-பிரிவு ஹேட்ச்பேக்கான ஹோண்டா ஜாஸின் விற்பனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கடந்த பல மாதங்களாக மலேசியாவில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

தற்போது எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளியாக கடைசி ஜாஸ் கார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹோண்டா அறிவித்துள்ளது. சிங்கப்பூர் தவிர்த்து மற்ற அனைத்து தெற்காசியா நாடுகளிலும் ஜாஸிற்கு மாற்றாக புதிய தலைமுறை சிட்டி ஹேட்ச்பேக் காரை கொண்டுவர ஹோண்டா தயாராகி வருகிறது.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

ஜாஸ் மாடலை காட்டிலும் ஸ்போர்டியானதாக மட்டுமின்றி, மலிவானதாகவும், ஜாஸிற்கு இணையாக பருமனானதாகவும் புதிய ஹோண்டா சிட்டி விளங்கவுள்ளது. ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் காரின் வருகைக்கு அர்த்தம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஜாஸ் மாடல் தெற்காசிய நாடுகளுக்கு கொண்டுவரப்படாது என்பதாகும்.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

ஹோண்டா ஜாஸ் மலேசியாவில் முதன்முதலாக சுமார் 18 வருடங்களுக்கு முன் 2003இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மலேசியாவில் விற்பனையில் இருந்தவரையில் சிகேடி முறையிலேயே சந்தைப்படுத்தப்பட்டது. சிகேடி என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் உள்ளூர் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு முழு காராக விற்பனை செய்யப்படுவது ஆகும்.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

2003இல் முதல் தலைமுறை ஹோண்டா ஜாஸ் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இரண்டாம் தலைமுறை ஜாஸ் 2012இல் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுடன் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிகேடி முறையில் விற்பனை செய்யப்படும் கார் ஹைப்ரீட் பவர்ட்ரெயின் தேர்வை பெற்றது இதுதான் அந்த சமயத்தில் முதல்முறையாக இருந்தது.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

தற்போது விற்பனை நிறுத்தப்படும் வரையில் தயாரிப்பில் இருந்தது மூன்றாம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் ஆகும். இது கடந்த 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மலேசிய ஜாஸ் காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது. அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

ஆனால் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜாஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் ஐ-விடெக் என்ஜினை ஹோண்டா நிறுவனம் பொருத்துகிறது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் விளக்குகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட ஜாஸ் ஹேட்ச்பேக்கில் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் ஹோண்டா வழங்குகிறது.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் ஜாஸ் மாடலுக்கு இந்திய சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு தற்சமயம் கிடைப்பதில்லை. இதனால் இந்தியாவிலும் ஜாஸின் தயாரிப்பு & விற்பனையை நிறுத்தி கொள்ளும் எண்ணத்தில் ஹோண்டா நிறுவனம் உள்ளதா என்பது தெரியவில்லை.

முடிவிற்கு வந்த 18 வருட விற்பனை!! ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கை வழியனுப்பி வைத்த மலேசியர்கள்!

புதிய தலைமுறை சிட்டி ஹேட்ச்பேக் கார் மலேசியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். ஹோண்டா சிட்டி செடான் காருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளன. இதனால் அதே பெயரில் கொண்டுவரப்படுவது மட்டுமின்றி, சிட்டி செடானின் அதே என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் தான் புதிய சிட்டி ஹேட்ச்பேக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Jazz Discontinued In Malaysia – Last Unit Rolls Out Of Plant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X