ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

விற்பனை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ஹோண்டா கார்களுக்கு மார்ச் மாத ஆஃபர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா கார் விற்பனை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த மாதம் 9,324 கார்களை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், விற்பனை 28.3 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், விற்பனையை அதிகரிக்க, சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது ஹோண்டா கார் நிறுவனம். ஒவ்வொரு ஹோண்டா கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பு பெற முடியும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.32,248 வரை சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.17,248 மதிப்புக்கு ஆக்சஸெரீகளையும் இலவசமாக பெற முடியும். ஆக்சஸெரீகள் வேண்டாம் என்றால், அதற்கு பதிலாக ரூ.15,000 நேரடி தள்ளுபடியாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.26,998 வரையிலான சேமிப்பை பெற முடியும். ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. நேரடி தள்ளுபடிக்கு பதிலாக ரூ.11,998 மதிப்புடைய ஆக்சஸெரீகளை இலவசமாக பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகளுக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன்

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசனின் எஸ் வேரியண்ட்டில் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் மாடலை தேர்வு செய்வோருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.7,000 தள்ளுபடியாகவும் பெற முடியும்.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படும். நேரடி தள்ளுபடி வேண்டாம் எனும் வாடிக்கையாளர்கள் ரூ.17,527 மதிப்புடைய ஆக்சஸெரீகளை இலவசமாக பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்க்ளூசிவ் எடிசன்

ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்க்ளூசிவ் எடிசன் விஎக்ஸ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.25,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்?

இதர ஆஃபர்கள்

ஏற்கனவே ஹோண்டா கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.6,000 லாயல்டி போனசாகவும், ரூ.10,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பாகவும் பெற முடியும். வரும் 31ந் தேதி வரை புதிய ஹோண்டா கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதுகுறித்த உறுதியான தகவல்களை அருகாமையிலுள்ள ஹோண்டா கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda is offering huge savings and discounts on Select car models In India for March, 2021.
Story first published: Wednesday, March 3, 2021, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X