2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்கா இருக்கே...

ஹோண்டா நிறுவனம் 2022 ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்துள்ளது. இக்காரில் என்னமாதிரியான மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன என்பதுகுறித்த தகவலை இப்பிதிவில் காணலாம்.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

ஹோண்டா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான சிவிக் காரை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இது, 11ம் தலைமுறை சிவிக் ஆகும். இதனையே ஹோண்டா தற்போது இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2022ம் ஆண்டிற்கான மாடல் ஆகும். ஆகையால், இக்கார் அடுத்த ஆண்டே விற்பனைக்கு வர உள்ளது.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா வெளியிடவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இக்காரை முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது, ஹோண்டா. இதைத் தொடர்ந்து தற்போது இக்காரை வெளியீடு செய்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

இந்த வெளியீட்டின் வாயிலாக 2022 ஹோண்டா சிவிக் என்ன மாதிரியான அப்டேட்டுகளை பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவல் தெரிய வந்திருக்கின்றது. காரின் உட்பகுதி, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் எஞ்ஜினில் பல்வேறு புதுப்பித்தல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

காரின் வெளிப்புற தோற்றத்திலும் கணிசமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அப்டேட் 2022 சிவிக் காரை ஓர் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்திற்கு உயர்த்தியுள்ளது. இதற்காக லேசான கட்டுமஸ்தான பேனல்களை ஹோண்டா பயன்படுத்தியுள்ளது.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

2022 சிவிக் காரின் 'ஏ' பிள்ளர்கள் 1.96 இன்ச் பின் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் பானட் சற்று நீளமானதாக காட்சியளிக்கின்றது. மேலும், ஷார்ப்பான உருவ அமைப்பையும் இக்கார் பெற்றிருக்கின்றது. ஆனால், இக்காரின் உயர் மற்றும் அகலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

உட்பகுதியில் புதிதாக ஏர் வெண்டுகள் (காற்றோட்டத்திற்கான வழிகள்) வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், 10.2 இன்சிலான அகலமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்திலான 7.0 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இக்காரின் உட்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

இதுதவிர, கூடுதல் தேர்வாக9.0இன்சிலான போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டத்தையும் ஹோண்டா 2022 சிவிக் காரில் வழங்கியிருக்கின்றது. இந்த 11ம் தலைமுறை ஹோண்டா சிவிக் காரில் 2.0 நேட்சுரல் அஸ்பயர்டு, 4 சிலிண்டர் டிஓஎச்சி ஐ-விடெக் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 158 பிஎச்பி மற்றும் 187 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 1.5 லிட்டர் விடெக் டர்போ, 4 சிலிண்டர் எஞ்ஜின் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது 180 எச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்க இருக்கே...

தொடர்ந்து 2022 சிவிக் காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட் சிஸ்டம், டிராஃபிக் ஜேம் அசிஸ்ட் மற்றும் சோனார் சென்சார்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Reveals 2022 Civic sedan: Here Is More Details About 11th Gen Civic. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X