500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

அடுத்த வருடம் விற்பனைக்கு வர உள்ள ஓர் எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கிய விபரங்களை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஹோண்டா தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் எங்கு முதலில் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய பல்வேறு முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், சீன சந்தைக்காக தாங்கள் தயார்படுத்தி வரும் கார் பற்றிய தகவல்களை வெளியிட்டது. நிறுவனம் இந்த தசாப்தம் முடிவடைதற்குள் அந்நாட்டில் முழுவதுமாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

அதாவது, முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனையை நிறுத்திவிட்டு முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே சீனாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதற்காக இப்போதே மூன்று விதமான எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுவனம் தயார்படுத்தி வருகின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இரண்டு கதவுகள் கொண்ட கூபே ரக வாகனம், நான்கு கதவுகள் கொண்ட ஜிடி மற்றும் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு திறன் கொண்ட ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இவை அனைத்தும் இ:என் வரிசையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

குறிப்பிட்ட சில மின்சார கார் மாடல்களை 2022ம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அந்வகையில், ஹோண்டா நிறுவனம் மிக விரைவில் இ:என்எஸ்1 மற்றும் இ:என்பி1 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை சீனாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

டோங்ஃபெங் (Dongfeng) மற்றும் ஜிஏசி (GAC) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் இந்த எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியில் ஹோண்டா ஈடுபட்டு வருகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. நிறுவனம், அதன் ஹோண்டா எச்ஆர்-வி காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் உருவாக்கி வருகின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இந்த காரை அடுத்த வருடம் விற்பனைக்குக் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. பிரத்யேகமாக முதலில் சீனாவிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. இ:என்எஸ்1 (e:NS1) மற்றும் இ:என்பி1 (e:NP1) ஆகிய பெயர்களில் அது விற்பனைக்கு வர இருக்கின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

புதிய எலெக்ட்ரிக் கார்கள் எச்ஆர்-வி/வெஸல் (HR-V/Vezel) ஆகிய கார்களை தழுவி உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில், எச்ஆர்-வி மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் மின்சார வெர்ஷனையே நிறுவனம் தற்போது காட்சிப்படுத்திப்படுத்தியிருக்கின்றது. 2021 ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இந்த காரையே தற்போது சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இ:என்எஸ்1 மற்றும் இ:என்பி1 ஆகிய இரண்டும் தற்போது ஹைபிரிட் வெர்ஷனில் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் எச்ஆர்-வி காட்டிலும் பல மடங்கு வித்தியாசங்களுடன் உருவாகி இருக்கின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

உருவம் மற்றும் அணிகலன் ஆகியவற்றில் பெரும் வித்தியாசத்தை இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, உட்பகுதி பல மடங்கு அதிக வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. மாடர்ன் அம்சங்கள் ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. 15.2 இன்ச் அளவுள்ள சென்ட்ரல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் லிக்யூடு க்ரிஸ்டர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இத்துடன், ஹோண்டா இணைப்பு மற்றும் ஹோண்டா சென்ஸிங் சூட் ஆகியவையும் புதிய எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இதில் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இப்புதிய அம்சங்கள் இருக்கும் என நிறுவனம் கூறியிருக்கின்றது.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இதேபோல் அதிக ரேஞ்ஜை வழங்கும் எலெக்ட்ரிக் காராகவும் இரு உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை முழுமையான சார்ஜில் 500 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட காராக இது உருவாகி இருக்கின்றது. இத்தகைய சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக இந்த காரில் 68.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது, 150 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை வழங்கும்.

500கிமீ பயமே இல்லாம போகலாம்... அடுத்த வருஷம் விற்பனைக்கு வருகிறது Honda HR-V எலெக்ட்ரிக் கார்! எங்கு?

இந்த மின் மோட்டார் மணிக்கு 150 கிமீ ஓடும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் புதிய எச்ஆர்-வி எலெக்ட்ரிக் காரை அதன் இ:என் ஆர்கிடெக்சர் எஃப் பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை தற்போது வரை சீனாவில் விற்பனைச் செய்யவே நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. வேறு எந்த நாட்டில் எல்லாம் இது விற்பனைக்கு செல்லும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda unveiled hr v electric suv with 500 km range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X