எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

காரில் எரிபொருள் மிகவும் குறைவாக இருக்கும்போது, அருகில் பெட்ரோல் பங்க் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

எரிபொருள் குறைவாக இருந்தால், அதுகுறித்த தகவலை கார் நமக்கு தெரிவிக்கும். காரின் டேஷ்போர்டில் இதனை நாம் தெரிந்து கொள்ளலாம். எரிபொருள் குறைவாக உள்ளது என்பதை தெரிவிப்பதற்காக கார் டேஷ்போர்டில் எச்சரிக்கை விளக்கு வழங்கப்பட்டிருக்கும். அது எரிகிறது என்றால், எரிபொருள் மிகவும் குறைவாக உள்ளது என அர்த்தம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

எரிபொருள் குறைவாக இருப்பதை ஓட்டுனர்களுக்கு எச்சரிப்பது மட்டுமே இதன் பணி. இந்த எச்சரிக்கை விளக்கு எரிந்தால், காரில் இன்னமும் எரிபொருள் இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் அதிகமாக இல்லை. மிகவும் குறைவாக இருக்கிறது என அர்த்தம். இந்த விளக்கு எரிந்தால், உடனடியாக நீங்கள் பெட்ரோல் பங்க்கிற்கு செல்ல வேண்டும்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

இந்த விளக்கு எரிந்தால், அதன்பின் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? என்பது ஒவ்வொரு காரையும் பொறுத்து மாறுபடும். அத்துடன் சாலை கண்டிஷன் மற்றும் உங்களது டிரைவிங் ஸ்டைல் ஆகியவற்றையும் பொறுத்து இது மாறுபடலாம். எரிபொருள் குறைவாக உள்ளது என்பதை எச்சரிக்கு விளக்கு எரிந்தால், சிறிய கார்களில் 50-60 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

அதே நேரத்தில் பெரிய எஸ்யூவி ரக கார்கள் என்றால், 30-50 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். அந்த அளவிற்கு மட்டுமே எரிபொருள் இருக்கும். ஆனால் இது துல்லியமான தகவல் கிடையாது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் உடனடியாக எரிபொருள் நிரப்பாவிட்டால், நடுவழியில் எங்கேயாவது தவிக்க நேரிடலாம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

இது உங்களுக்கும், உங்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், தேவையில்லாமல் நேர விரயத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். காரின் பாகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

இது உங்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், எப்போதும் அதிக எரிபொருளை காரின் டேங்க்கில் வைத்திருப்பது நல்லது. கூடுமானவரை அனைத்து நேரங்களிலும் குறைந்தபட்சம் எரிபொருள் டேங்க்கின் மொத்த கொள்ளளவில் 25 சதவீதம் எரிபொருள் இருக்குமாறு பார்த்து கொள்வது நன்மை பயக்கும்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

25 சதவீதம் என்பது குறைந்தபட்ச அளவு. அதற்கு மேல் எவ்வளவு எரிபொருள் இருந்தாலும் நல்லதுதான். சரி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீங்கள் எரிபொருள் நிரப்ப மறந்து விட்டீர்கள் என வைத்து கொள்வோம். அப்போது எரிபொருள் குறைவாக உள்ளது என்பதை எச்சரிக்கும் விளக்கு வேறு ஒளிர்கிறது. ஆனால் அருகில் பெட்ரோல் பங்க் எதுவும் இல்லை.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

அப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன. இதனை நீங்கள் சரியாக பின்பற்றினால், கூடுமானவரை பெட்ரோல் பங்க்கிற்கு சென்று விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் நடுவழியில் எங்கேயாவது சிக்கி கொண்டு தவிப்பதை தவிர்க்கலாம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், முடிந்த வரை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். இதைதான் எரிபொருள் சிக்கனத்திற்கான சிறந்த வேகமாக கூறுகிறார்கள். ஆனால் இந்த வேகமானது, நீங்கள் எங்கே கார் ஓட்டி கொண்டுள்ளீர்கள்? சாலையின் கண்டிஷன் ஆகிய காரணிகளை பொறுத்தது.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

அதேபோல் ஜன்னல் கண்ணாடிகளை மேலே ஏற்றி விடுங்கள். ஜன்னல்கள் திறந்திருப்பது என்பது, கூடுதல் இழுவைக்கு காரணமாக அமையும். இதன் காரணமாக இன்ஜின் அதிக எரிபொருளை நுகரும். எனவே ஜன்னல் கண்ணாடிகளை மேலே ஏற்றி விட்டால் ஓரளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம். எரிபொருள் குறைவாக இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு துளியும் முக்கியம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

அதேபோல் ஆக்ஸலரேட்டரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். எரிபொருள் தீர்ந்து கார் நின்று விடுமோ? என்ற பதற்றத்தில், ஆக்ஸலரேட்டரை முரட்டுத்தனமாக மிதித்தால், அதிக எரிபொருள் செலவு ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சீரான வேகத்தில் பயணம் செய்யுங்கள். நீங்கள் நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்றால், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தலாம்.

எரிபொருள் ரொம்ப கம்மியா இருக்கு... பக்கத்துல பெட்ரோல் பங்க் வேற இல்ல... அந்த நேரத்தில் என்ன செய்யணும் தெரியுமா

குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து விட்டால், உதாரணத்திற்கு 65 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை செட் செய்து விட்டால், கார் தொடர்ந்து அந்த வேகத்திலேயே பயணிக்கும். இதுதான் க்ரூஸ் கண்ட்ரோல். தற்போது இந்த வசதி பெரும்பாலான கார்களில் வழங்கப்படுகிறது. பழைய சாதாரண கார்களில் இந்த வசதி இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
How far can i drive with low fuel level warning lights on important tips
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X