காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான சில எளிய வழிகளை இப்பதவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

என்னதான் கார் ஓட்டுவதில் கை தேர்ந்தவராக இருந்தாலும் தெளிவான் பார்வை திறன் வழங்காத விண்ட்ஷீல்டு இல்லை என்றால் காரை இயக்குவது மிக மிக கடினம். எனவேதான் காரின் எஞ்ஜின் மற்றும் தொழில்நுட்ப கருவிகள்மீது செலுத்துவதைப் போன்ற அதிக பராமரிப்பினை விண்ட்ஷீல்டுகள் மீதும் செலுத்த வேண்டும் என வாகன துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

விண்ட் ஷீல்டுகள் தெளிவான பார்வை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் காற்றில் பறந்து வரும் தூசி மற்றும் சிறிய கற்களில் ஆகியவற்றில் நம்மையும், நம் கண்களையும் பாதுகாக்கும் கருவியாக செயல்படுகின்றது. ஆகையால், இவற்றைத் தனிக் கவனம் கொண்டு பராமரிப்பது சிறந்த பலனையே நமக்கு வழங்கும். சரி, எப்படி காரின் விண்ட்ஷீல்டை பாதுகாப்பது?, வாங்க இதற்கான பதிலைக் கீழே காணலாம்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

தண்ணீரை விரட்டும் பூச்சு:

விண்ட்ஷீல்டில் சிறு இடையூறு இருந்தாலும் தெளிவான பார்வை திறனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதற்கு மிக சிறந்த உதாரணம் மழைக் காலம். மழை துளி விண்ட்ஷீல்டின் மீது விழும்போது அது அப்படியே துளி துளியாக தேங்கி நிற்கும். இதனால், வெளிப்புறத்தைப் பார்ப்பதில் லேசான சிக்கல் ஏற்படும்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

குறிப்பாக, எதிர்புறத்தில் அதிக வெளிச்சம் கொண்ட ஒளி விண்ட்ஷீல்டு மீது விழும்போது பார்வை திறனே துளியளவும் இருக்காது. இதனைப் போக்கும் விதமான பூச்சு தற்போது சந்தையில் பயன்பாட்டில் இருக்கின்றது.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

இது, உங்களின் காரின் விண்ட்ஷீல்டை தாமரை இலை போல் மாற்றிவிடும். அதாவது, ஒரு துளி நீர் விழுந்தாலும் அதை தங்க விடாமல் உடனடியாக வழுக்கி ஓட செய்து விடும். இதனை ஆங்கிலத்தில் வாட்டர் ரெபெல்லண்ட் கோட்டிங் (Water repellent coating) என குறிப்பிடுவர். கார் சர்வீஸ் மையங்கள் இந்த கோட்டிங்கை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

பழைய வைப்பர்களை தூக்கி எறியுங்கள்:

பழைய வைப்பர்களைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் விண்ட்ஷீல்டுகள் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றன. பொதுவாக, நாம் பயன்படுத்தும் வாகனங்கள் மழையை மட்டுமின்றி அதிக வெயில், பனி போன்ற அனைத்து கால சூழ்நிலைகளையும் சந்திக்கின்றன. ஆகையால், வைப்பர் மென்மை தன்மை நாளடைவில் பாதிப்பைச் சந்திக்கும்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

அதாவது, அதிக வெயிலால் அதன் நெகிழும் தன்மை பாதிப்படையும். இதன் விளைவாக அதிக இருக்கமான தன்மைக்கு மாறி ஸ்கிராட்ச்களை ஏற்படுத்த தொடங்கிவிடும். தொடர்ச்சியாக அதே வைப்பரை பயன்படுத்துவதனால் முதலில் விண்ட்ஷீல்டு ஸ்கிராட்சும், பின்னர், அதன் தெளிவான பார்வைத் தன்மையும் மழுங்கும்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

கடைசியாக, ஹைபீம் மற்றும் அதிக மழை நேரங்களில் வாகனத்தை பயன்படுத்துவது என்பதே சாத்தியமில்லாத செயலாக மாற்றிவிடும். இறுதியில் விபத்தை இது நகர்த்திவிடும். ஆகையால், வைப்பர்கள் பழுதடைந்தோ அல்லது பழையதாகவோ தென்பட்டால் அதை உடனடியாக மாற்றிவிடுங்கள்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

இடைவெளி நிச்சயம் தேவை

உங்களின் காருக்கு முன்னால் பெரிய உருவமோ அல்லது சிறிய உருவம் கொண்ட வாகனமோ எந்த மாதிரியான வாகனம் சென்றுக் கொண்டிருந்தாலும் சற்று இடைவெளிவிட்டு பயணியுங்கள். ஏனெனில், வாகனங்களின் பின் பக்க டயர்களில் சிக்கில் சிறிய கற்கள் அதிக வேகமாக பறந்து வர நேரிடும். இது காரின் விண்ட்ஷீல்டை மிக எளிதில் பாதிக்க செய்யும். ஆகையால், பிற வாகனங்களிடம் இருந்து சற்று இடைவெளிவிட்டு பயணிப்பது பயணத்தையும், விண்ட்ஷீல்டையும் பாதுகாக்க உதவும்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

கை விரல் அல்லது பேப்பரை பயன்டுத்துங்கள்

காரின் முன்பக்க கண்ணாடிகளில் சில நேரங்களில் எளிதில் நீங்காத வகையிலான கரைகள் இடம்பெறலாம். அவற்றை அகற்றை கூர்மையான எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கை விரல் அல்லது பேப்பரை பயன்படுத்துவது சிறந்தது. கூர்மையான பொருளைக் கொண்டு கரையை அகற்றும்போது நம்மை அறியாமலே சிறிய கீறல்களை உருவாக்க நேரிடும்.

காரின் விண்ட்ஷீல்டை பராமரிப்பதற்கான எளிய வழிகள்... எஞ்ஜின் பராமரிப்பை போல இதுவும் முக்கியமானதுங்க!!

நிழலை தேடுங்கள்

வெயில் மிகக் கடுமையாக சுட்டெரித்து வருவதால் விண்ட்ஷீல்டு மிக எளிதில் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு. இதனைத் தவிர்க்க காரை நிழல் நிறைந்த பகுதியில் நிறுத்துவதே மிக சிறந்தது. இது காரின் புதுப்பொலிவைக் காக்கவும் உதவும். இதுமட்டுன்றி, ஏசி ஆன் செய்யாமலே கேபினை கூலாக வைத்திருக்க உதவும். இதுபோன்ற பல்வேறு நன்மைகளை வெயில் அல்லாத பகுதியில் காரை நிறுத்துவதன் மூலம் பெற முடியும்.

Most Read Articles

English summary
How To Take Care Of Car’s Windshield; Here Top Five Tips. Read In Tamil.
Story first published: Saturday, March 27, 2021, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X