எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?

ஹூவாய் நிறுவனம் அதன் முதல் மின்சார காரை உலக புகழ்பெற்ற ஷாங்காய் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலைக்கு மத்தியில் புகழ்பெற்ற ஷாங்காய் வாகன கண்காட்சி அதிக கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகின்றது. இந்த புகழ்பெற்ற கண்காட்சியில் உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் அப்டேட் செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி (காட்சிப்படுத்தி) வருகின்றன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

இந்த நிலையில், புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய், அதன் பங்காக ஓர் புதுமுக மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார தயாரிப்பாகும். செரெஸ் ஹுவாய் ஸ்மார்ட் செலக்சன் எஸ்எஃப்5 எனும் பெயரிலேயே மின்சார காரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

இந்த கார் இன்று முதல் (ஏப்ரல் 21) சீனாவில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அறிமுகத்தின் முதல் கட்டமாக தனது தாய் நாட்டில் இக்காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

அளவு

ஹூவாய் எஸ்எஃப்5 எலெக்ட்ரிக் கார் 4.7 மீட்டர் நீளத்திலும், 1.93 மீட்டர் அகலத்திலும், 1.625 மீட்டர் உயரத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வீல் பேஸ் 2,875 ஆகும்.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

சிறப்பம்சம்

இக்காருக்குள் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று சென்டர் கன்சோலிலும், மற்றொன்று ஸ்டியரிங் வீலிற்கு பின்னாலும் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், வாய்ஸ் கன்ட்ரோல் வசதியையும் ஹூவாய் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஹூவாய் போன்களில் இருக்கக் கூடிய பிரத்யேக செயலிகளும் அதில் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

ஹூவாய் எஸ்எஃப்5 மின்சார காரில் 405 kW (550 பிஎஸ் பவர்) மற்றும் 820 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் ஒரு முழுமையான சார்ஜில் 1,000 கிமீ ரேஞ்ஜ் வழங்கக் கூடிய பேட்டரிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

இந்த மின்சார கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100கிமீ எனும் வேகத்தை வெறும் 4.86 செகண்டுகளிலேயே தொட்டு விடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், கேம்ப் செய்யும் வசதி, இன்டக்சன் ஹாப்கள், ஸ்டீரியோக்கள் மற்றும் பிற பயணத்திற்கு தேவையான கருவிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

மிக முக்கியமாக ரேடார் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார்கள், டிரைவர் அசிஸ்டண்ட் தொழில்நுட்ப வசதி, கொல்லிஷன் வார்னிங், தானியங்கி பிரேக்கிங் வசதி மற்றும் லேன் டிபார்சர் வார்னிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றுள்ளன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

மேலும், ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பதைப் போன்ற பன்முக வசதிகள் கொண்ட இருக்கை முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது வென்டிலேட், ஹீட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்டது. ஹூவாய் எஸ்எஃப்5 எலெக்ட்ரிக் காரை நான்கு விதமான நிற தேர்வுகளில் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?..

அவை, ஆழமான கடல் நீல நிறம், அடுப்பு கறி கருப்பு, முத்து வெள்ளை மற்றும் டைட்டானியம் வெள்ளி பழுப்பு நிறம் ஆகியவை ஆகும். இத்துடன், அடர் கருப்பு, கார்னெட் சிவப்பு மற்றும் ஐவோரி வெள்ளி ஆகிய உட்புற நிறத்திலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. குறிப்பு; சீனாவில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிற நாடுகள் இன்னும் இக்கார் விற்பனைக்கு வரவில்லை.

Most Read Articles
English summary
Huawei Showcases Its First Electric SUV SF5 Car In Shanghai Auto Show. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X