லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

லம்போர்கினி, மஸ்டங் என பிரபலமான சொகுசு கார்களை வாடக்கைக்கு விடும் பணி ஐதராபாத் விமான நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

சூப்பர் கார்கள் என்றால் யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். சிலர் இந்த கனவை நிறைவேற்றி இருப்பர், சிலர் படங்களிலும் வீடியோக்களில் மட்டுமே பார்த்து வருவர்.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

இப்படியிருக்க, லக்சரி கார்களில் சென்றதில்லையே என ஏங்கி இருப்போரை ஆச்சிரியப்படுத்தும் வகையில் ஐதராபாத் விமான நிலையத்தில் சூப்பர் லக்சரி கார்களை வாடிக்கைக்கு விடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

நம்மூரில் உள்ள விமான நிலையங்களில் எல்லாம் விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கேப் வசதி உள்ளது. ஆனால் ஐதராபாத், ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் புதியதாக லக்சரி கார்களை வாடகைக்கு விடும் பணிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

இதனால் ஐதராபாத்தில் வசிக்கிறீர்கள் என்றால் ஒரு முறையேனும் இந்த வாடகை சொகுசு கார்களில் சென்றுவர பாருங்கள். இந்த சேவை நிச்சயம் உங்களை மகிழ்விக்காமல் இருக்காது.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

சொகுசு கார்கள் இங்கு வாடகை அடிப்படையில் ஓட்டுனர் உடனும், இல்லாமலும் கிடைக்கின்றன. லக்சரி காரை தானே ஓட்டி பார்க்க விரும்புபவர்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியான விஷயம்.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

முன்பதிவுகளை ஆன்லைனிலும், போன் அழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளலாம். தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த லக்சரி கார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யப்படுகின்றன.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

சந்தா முறையிலும், வாடகை முறையிலும் கார்களை பெறுவது இந்தியாவில் மெதுவாக அதிகரித்து வருகிறது. சில சூப்பர் கார் பிரியர்கள் அவற்றை சொந்தமாக்காமலேயே அவற்றை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

தேர்ந்தெடுக்க ஜாகுவார் எஃப்-டைப், லம்போர்கினி கல்லார்டோ, ஃபோர்டு மஸ்டங், போர்ஷே 911 கரேரா, மெர்சிடிஸ் பென்ஸ் இ 250, மஸராட்டி கிப்லி, பிஎம்டபிள்யூ 3ஜிடி & 7 சீரிஸ், லெக்ஸஸ் இஎஸ் 300எச், ஆடி ஏ3 காப்ரியோலெட், வால்வோ எஸ்60 என பல முன்னணி நிறுவனங்களது லக்சரி கார்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

அதேநேரம் மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களும் குறைந்த தொகையில் கிடைக்கின்றன. ஐதராபாத்தை காட்டிலும் வாடகை கார் பயன்பாடுகள் இந்தியாவில் சுற்றுலா தளங்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளன.

லம்போர்கினி, மஸ்டங் கார்களை இனி நீங்களும் ஓட்டலாம்!! எப்படினு தெரியனுமா?

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கோவா, ஹிமாச்சல் பிரதேசம். இந்த சுற்றுலா நகரங்களில் மோட்டார்சைக்கிள்களும் ஒரு நாளைக்கு ரூ.1,000 என வாடகைக்கு கிடைக்கின்றன. ஆனால் பெட்ரோல் நிரப்பப்படாது, நாம் தான் நிரப்பி கொள்ள வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad airport now offers Lamborghini, Mustang & other supercars as rental cars. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X