புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

க்ரெட்டா அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அல்கஸார் எஸ்யூவியை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ஹூண்டாய் நிறுவனம். கவர்ச்சிகரமான டிசைனில், அதிக வசதிகளுடன் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

க்ரெட்டா 5 சீட்டர் எஸ்யூவி மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தனித்துவம் பெற்றுள்ளது புதிய அல்கஸார் எஸ்யூவி 7 சீட்டர் எஸ்யூவி. அதாவது, இது க்ரெட்டா எஸ்யூவியைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் கவரும் வகையில் இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய அல்கஸார் எஸ்யூவி 2,760 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக வருகிறது. அதாவது, க்ரெட்டா எஸ்யூவியைவிட 150 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இதனால், உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கைகள் கொடுப்பதற்கான இடவசதியை பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் ஹெட்லைட் டிசைன் க்ரெட்டாவை நினைவூட்டுகிறது. அதேநேரத்தில், க்ரில் அமைப்பு வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. க்ரெட்டாவில் எளிமையாக இருக்கும் க்ரில் அமைப்புக்கு பதிலாக, க்ரோம் வில்லைகள் வரிசை கட்டப்பட்ட புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பம்பர் அமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

அதேபோன்று, புதிய டிசைனில் அலாய் வீல்கள், வலிமையான சி பில்லர் அமைப்புடன் ரியர் குவார்ட்டர் க்ளாஸ் அமைப்புடன் நான்கு பில்லர்கள் கொண்ட 7 சீட்டர் மாடலாக மாற்றம் கண்டுள்ளது. புதிய டெயில் லைட்டுகள், பின்புற கதவில் க்ரோம் பட்டை அமைப்பு, அல்கஸார் பெயர், இரட்டை குழல் அமைப்பு தோற்றத்துடன் சைலென்சர் ஆகியவையும் கவனம் ஈர்க்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்பும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

மூன்றாவது வரிசைக்கு செல்லும் பயணிகள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் கதவு மற்றும் இரண்டாவது வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒரு பொத்தானை அழுத்தினால், இரண்டாவது வரிசை இடது புற இருக்கை முழுமையாக மடங்கிக் கொண்டு பயணிகள் ஏறுவதற்கு வசதியாக இருக்கும் வகையில் ஒன் டச் தம்பிள் மெக்கானிசம் இடம்பெற்றிருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு சாய்மான வசதியும், மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கும். பனோரமிக் சன்ரூஃப், கேப்டன் இருக்கைகள், இரண்டாவது வரிசையில் சென்ட்ரல் ஆர்ம் ரெஸ்ட், போதுமான அளவு ஸ்டோரேஜ் அறைகள் ஆகியவையும் இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். ஹூண்டாய் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை வசதிகளும் உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்டுகள் இடம்பெறுகிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் டூஸான் கார்களில் இதே பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றைவிட 7 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய அல்கஸார் எஸ்யூவியிலும் இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கிறது... பார்க்கலாம் வாங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai has revealed the much-awaited Alcazar SUV in its production-ready guise. The company is expected to launch the three-row SUV in the coming months in the Indian market. The Alcazar is essentially a three-row version of the brand's Creta SUV.
Story first published: Thursday, April 8, 2021, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X