18ந் தேதி அறிமுகமாகிறது புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் கார்... இந்த வசதிகளை பார்த்தா உடனே புக் பண்ணிடுவீங்க

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதிக சிறப்பம்சங்களுடன் வரும் 7 சீட்டர் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களும் இந்த எஸ்யூவியின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட உள்ளன. க்ரெட்டாவைவிட அதிக நீளம் கொண்ட கார் என்பதால், பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைனிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

இருக்கை வசதி

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், 6 சீட்டர் மாடலில் நடுவில் கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் நடு வரிசையில் பெஞ்ச் இருக்கைகளும் கொடுக்கப்பட உள்ளன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

ஒன் டச் டம்பிள் வசதி

மூன்றாவது வரிசை இருக்கைக்கு எளிதாக செல்லும் வகையில், ஒன் டச் டம்பிள் எனப்படும் பொத்தானை அழுத்தி இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும். இதனால், எளிதாக மூன்றாவது வரிசை பயணிகள் எளிதாக ஏறி, இறங்க முடியும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, கார் இயக்கம், ஓடிய தூரம், நிகழ்நேர எரிபொருள் செலவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். அத்துடன், இந்த காரில் கனெக்டெட் கார் வசதியுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

வயர்லெஸ் சார்ஜர்

இந்த காரில் இரண்டாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு தனியாக வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் முதல்முறையாக இரண்டாவது வரிசையிலும் வயர்லெஸ் சார்ஜர் வசதியை பெற இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

சீட் டேபிள்

இரண்டாவது வரிசை பயணிகளின் வசதிக்காக முன் இருக்கையின் பின்புறத்தில் சிறிய டேபிள் கொடுக்கப்படுகிறது. இந்த டேபிளில் டேப்லெட் கம்ப்யூட்டர் வைப்பதற்கான ஹோல்டரும் கொடுக்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

சவுண்ட் சிஸ்டம்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் சப் ஊஃபர் மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. இது நிச்சயம் சிறப்பான ஒலி தரத்தை வழங்கும் என்று நம்பலாம்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

ஏர் பியூரிஃபயர்

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் ஏர் பியூரிஃபயர் கொடுக்கப்பட உள்ளது. காற்று தரம் குறித்த தகவலை தெரிவிக்கும் டிஜிட்டல் திரையுடன் இந்த சாதனம் வழங்கப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

பனோரமிக் சன்ரூஃப்

புதிய அல்கஸார் எஸ்யூவியில் பெரிய அளவலான பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட உள்ளது. இது நிச்சயம் இப்போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

டிரைவிங் மோடுகள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் ஸ்போர்ட், கம்ஃபோர்ட் மற்றும் ஈக்கோ என மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்பட உள்ளன. அதேபோன்று, ஸ்னோ, சேண்ட் மற்றும் மட் என மூன்று நிலைகளில் செயல்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. இதில், பெட்ரோல் எஞ்சின் 157 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

வேரியண்ட்டுகள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு பிரஸ்டீஸ், பிளாட்டீனம் மற்றும் சிக்னேச்சர ஆகிய வேரியண்ட்டுகளிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு பிரஸ்டீஜ் ஆப்ஷனல், பிளாட்டினம் ஆப்ஷனல் மற்றும் சிக்னேச்சர் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டாப்-10 சிறப்பம்சங்கள்!

எதிர்பார்க்கும் விலை

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Here are some top things you should know about all new Hyundai Alcazar SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X