டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய இரு மாடல் கார்களில் இல்லாத அம்சங்கள் சில ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதுமுக வருகையாக அல்கஸார் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படை தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கார் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனமாகும். இந்த காரில் டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய இரு கார்களிலும் இடம் பெற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

அந்தவகையில், இரு கார்களிலும் இடம் பெறாத என்ன அம்சங்கள் அல்கஸாரில் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். முக்கியமான ஒன்பது அம்சங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம் வாருங்கள், பார்க்கலாம்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

ஓட்டுநர் பின் பகுதியை பார்க்க உதவும் திரை

ஓட்டுநர் பின் பக்கத்தை பார்க்க ஏதுவாக அல்கஸார் காரில் ஓர் திரை வழங்கப்பட்டுள்ளது. இது பின் பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஓர் கேமிராவின் வாயிலாக கிடைக்கக் கூடிய காட்சிகளைக் காட்சிப்படுத்தும். ஆகையால், நீங்கள் ரிவர்ஸோ அல்லது பின் பக்கத்தில் வரும் வாகனங்களையோ பார்க்க வேண்டும் என நினைத்தால் இந்த திரையைப் பார்த்தால் போதும். தேவையின்றி திரும்பி பார்த்து சிரமப்பட தேவையில்லை.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

பின்புற சன்ஷேட்

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் காரில் சன்ஷேட் வசதியை வழங்குகின்றது. சூரிய ஒளியில் இருந்து காத்துக் கொள்ள இது உதவியாக இருக்கும். குறிப்பாக, காரின் உட்பகுதியை சில்லென வைத்திருக்க இது மிகுந்த உதவியாக இருக்கும். அதாவது வெளிப்புறத்தில் இருந்து அதிக உஷ்னமான சூரிய ஒளியை தவிர்த்து காரை கூலாக வைத்திருக்க இது உதவியாக இருக்கும்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

இருக்கையின் பின்பக்கத்தில் மேசை வசதி

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் காரில் இருக்கைகளுக்கு பின்னால் மேஜை போன்ற வசதியை வழங்குகின்றது. இது உணவுகளை வைத்துக் கொள்ள அல்லது செல்போனை வைத்துக் கொள்ள இது உதவியாக இருக்கும். தொடர்ந்து, அந்த மேஜையில் ஓர் கோப்பை தாங்கியும் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

ஆம்பிசியன்ட் மின் விளக்கு

எட்டு விதமான ஆம்பிசியன்ட் மின் விளக்குகள் அல்கஸார் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது நமது மன நிலைக்கு ஏற்ப ஒளிர செய்து கொள்ளலாம். காரின் உட்புற மேற்கூரை பகுதியில் இந்த மின் விளக்குகள் இடம் பெற்றிருக்கின்றன. இதனைக் கன்ட்ரோல் செய்யும் வசதி இன்ஃபோடெயின்மென்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்

எம்ஜி ஹைக்டர் ப்ளஸ் காரில் 7 இன்சிலா திரை அனலாக் கேஜ் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா சஃபாரியில் 7 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் அனலாக் ஸ்பீடோ மீட்டர் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்கஸார் காரில் 10.25 இன்சிலான முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை தேர்வுகளில் 7 இன்சிலான சூப்பர் விஷன் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

காற்று வடிகட்டி

காரின் உட்பகுதிக்குள் இருக்கும் காற்றின் தரத்தை உயர்த்தும் வகையில் காற்று வடிகட்டி கருவியை அல்கஸார் காரில் ஹூண்டாய் வழங்குகின்றது. இது, காற்றை சுத்தம் செய்வதோடு கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் போன்றவற்றை காருக்குள் இருந்து அகற்றும்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

பேட்டில் ஷிஃப்டர்கள்

அல்கஸார் கார் பயனர்கள் அலாதியான ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக இந்த வசதியை ஹூண்டாய் வழங்கியிருக்கின்றது. நீங்கள் தானியங்கி வேரியண்டை வாங்கினால் ஸ்டியரிங் வீலிலேயே இந்த வசதியைக் காண முடியும். கியர்பாக்ஸை எளிதில் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

பின்பக்க பயணிகளுக்கான மையப் பகுதி கன்சோல்

அல்கஸார் காரில் பின் பக்கத்தில் பயணிப்பவர்களும் சுவாரஷ்யமான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக நிறுவனம் கன்சோல் வசதியை பின்பக்கத்தின் மையப்பகுயில் வழங்கியிருக்கின்றது. இதில், கோப்பை, தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ளுதல் மற்றும் கைகளுக்கு ஓய்வு கொடுத்தல் போன்ற பயன்களைப் பெற முடியும்.

டாடா சஃபாரி காருலகூட இந்த அம்சங்கள் எல்லாம் இல்ல! ஹூண்டாய் அல்கஸாரில் இடம் பெற்றிருக்கும் டாப் 9 வசதிகள்!

ஒயர்லெஸ் சார்ஜர்

இந்த மையப் பகுதி கன்சோலில் ஒயர்லெஸ் சார்ஜர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், ரைடர்கள் தடையில்லா சார்ஜிங் அனுபவத்தைப் பெற முடியும்.

Most Read Articles
English summary
Hyundai Alcazar SUV's Top 10 Features List. Read In Tamil.
Story first published: Thursday, June 24, 2021, 19:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X